Author: Editor web3
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்குச் சொந்தமான தீவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாரசீக வளைகுடாவில் “ரத்த ஆறு ஓடும்” என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு (Kharg Island) உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்ற எதிரிகள் திட்டமிடுவதாக வெளியான தகவலையடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. “தாய்நாடு அல்லது மரணம்” என்ற கோஷத்துடன், ஆக்கிரமிப்பாளர்களின் ரத்தத்தால் கடல் சிவக்கும் என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்து வருவதால், உலக நாடுகளுக்குச் செல்லும் எரிபொருள் விநியோகம் முடங்கும்…
கும்பமேளா புகைப்படங்களுடன் இணையத்தில் வைரலான மோனலிசா போஸ்லே என்ற பெண் தனது வசீகர கண்களால் பெரியளவில் பேசப்பட்டார். ஊடகங்களில் அவரது போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாக சினிமா வாய்ப்பு தேடி வந்தது. இந்நிலையில், கும்பமேளா புகழ் மோனாலிசா, தனது காதலன் ஃபர்மான் கானை கேரளா மாநிலம் அருமனூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டார். எனினும், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால், திருவனந்தபுரம் அருகே உள்ள தம்பனூர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி அவர்கள் தஞ்சம் அடைந்தனர். “எனது தந்தை என்னை வலுக்கட்டாயமாக ஊருக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறார், நான் எனது விருப்பப்படி ஃபர்மான் கானுடன் வாழ விரும்புகிறேன்” என்று காவல்துறையினரிடம் அவர் முறையிட்டார். மோனாலிசா 18 வயது பூர்த்தியானவர் என்பதால், சட்டப்படி அவர் தனது விருப்பமானவருடன் செல்லலாம் எனப் போலீஸார் அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து, கேரளாவின் பூவார் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருமானூர் நயினார் கோவிலில் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. இந்நிலையில்…
மத்திய கிழக்கில் ஈரானுடனான அமெரிக்கா-இஸ்ரேல் போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. போரின் 13வது நாளான இன்று வியாழக்கிழமை, ஈரானின் பினாமி அமைப்பான ஹெஸ்பொல்லா இஸ்ரேல் மீது 150 ஏவுகணைகளை வீசியது. இதற்கிடையில், ஈரான் ஜனாதிபதி புதன்கிழமை போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று கூறினார், ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் சில நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டும். ஈரான் விதித்துள்ள மூன்று நிபந்தனைகள்: ஈரானிய ஜனாதிபதியின் கூற்றுப்படி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நமக்கு மூன்று முக்கிய நிபந்தனைகள் உள்ளன. முதலில், ஈரானின் சட்டப்பூர்வ உரிமைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, ஈரான் மீதான எதிர்கால தாக்குதல்களைத் தடுக்க உறுதியான சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த நிபந்தனைகள் இல்லாமல், போரைத் தடுப்பது சாத்தியமில்லை என்று பெஷேஷ்கியன் கூறினார். மேற்கு ஆசியாவில் அமைதிக்கான ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன்…
பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், திருச்சியில் விவசாயிகளின் நண்பன் போல் பிரதமர் கபட நாடகம் போட்டுள்ளார் என்றும் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, விவசாயிகள் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இருக்கிறதா? தேர்தல் வந்துவிட்டால் பிரதமருக்கு உடனடியாக பாசம் வந்துவிடும். விவசாயிகளுக்காக பிரதமர் மோடி செய்தது என்ன? இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி உள்ளனர். போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது வாகனத்தை விட்டு ஏற்றி 4 பேரை கொன்றதை யாரும் மறந்துவிடவில்லை. திருச்சி கூட்டத்தில் விவசாயிகளின் நண்பன் போல் பிரதமர் கபட நாடகம் போட்டுள்ளார். மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள்…
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையரை அவரது பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டு வரக் கோரி, 200-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நோட்டீஸை எதிர்க்கட்சிகள் வழங்கியுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கை நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளையும் சேர்ந்த பல்வேறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த நோட்டீஸில் கையெழுத்திட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகள் நடுநிலை தவறியுள்ளதாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காக்கத் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, தற்போது நடைபெற்று வரும் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த’ (Special Intensive Revision – SIR)பணியில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் உண்மையான வாக்காளர்களின் பெயர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கி வருவதாக ஏற்கனவே பகிரங்கமாகக் குற்றம்…
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்து இப்போதைக்கு இதற்கு மேல் கூடுதல் விவரங்களைச் சொல்வது சரியாக இருக்காது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா மற்றும் ஈரான் இடையிலான இருதரப்பு உறவுகளில் எரிசக்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் சூழல்களைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளின் அமைச்சர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல்கள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஈரான்…
வார இறுதி வந்துவிட்டாலே போதும், OTT தளங்களில் என்ன புதுசு எனத் தேட ஆரம்பித்துவிடுவோம். இந்த வாரம் (மார்ச் 13), தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் அதிரடி ஆக்ஷன் முதல் த்ரில்லர் வரை பல சுவாரஸ்யமான படங்கள் வெளியாகின்றன. தமிழ் ரசிகர்களுக்கு இந்த வாரம் பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன. ஜீ5 (Zee5) தளத்தில் ‘பூக்கி’ (Pookie) திரைப்படமும், நெட்ஃபிக்ஸ் (Netflix) தளத்தில் ‘லாக்டவுன்’ (Lockdown) மற்றும் ‘மேட் இன் கொரியா’ (Made In Korea) ஆகிய படங்களும் வெளியாகின்றன. குறிப்பாக, ‘ஆதார்’ (Aadhar) திரைப்படம் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. தெலுங்கு ரசிகர்களுக்காக நெட்ஃபிக்ஸ் தளத்தில் ‘ஃபங்கி’ (Funky) படமும், பிரைம் வீடியோவில் ‘கப்பில் ஃப்ரெண்ட்லி’ (Couple Friendly) மற்றும் ஈடிவி வின் (ETvWin) தளத்தில் ‘நவாப் கஃபே’ (Nawab Cafe) ஆகியவையும் வெளியாகின்றன. மேலும், ஆஹா (Aha) தளத்தில் ‘யோகிதா’ (Yogida) மற்றும் ‘ரவம்’ (Ravam) ஆகிய படங்கள்…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில், வேட்பாளர் ஆக விரும்பி விண்ணப்பித்த நிர்வாகிகளுடன் அவர் நேரிடையாக நேர்காணல் நடத்தி வருகிறார். முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக உரையாடி வரும் விஜய், தொகுதியின் நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து வருகிறார். கட்சித் தரப்பில் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தற்போது தீவிரப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பின்னணி, சமூகப் பணிகள் மற்றும் மக்களிடையே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பரிசீலனைக்குப் பிறகு, தகுதியான நபர்கள் அடுத்தடுத்த கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். நேர்காணல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு, அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிடுவார் எனத்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு – பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நேரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்! என்று உறுதியளித்துள்ளார்.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக தமிழ் நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். அதே போல், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்றார். மேலும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நேற்றிரவு சென்னை வந்தார். இந்த நிலையில் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.