Author: Editor web3
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு உயர்வு போன்றவற்றின் காரணமாக, இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் சூழல்கள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து வருவதே இந்த விலை சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சென்னையில் நேற்று சவரன் ரூ.1,20,960-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்க விலையினால் கவலையில் இருந்த நகைப்பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 வரை குறைந்து, ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.14,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 குறைந்து ரூ.1,20,968-க்கு…
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். மேலும், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இதற்காக, திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அதே பகுதியில் மத்திய அரசு விழா நடைபெற்றது. மத்திய அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். அந்த வகையில், ரயில் பயணிகள் வசதிக்காக 2 அம்ரித் பாரத் ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாகர்கோவில்-சாரளப்பள்ளி மற்றும் கோவை-தன்பாத் ஆகிய 2 அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நெல்லை- மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை-…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் டெல்சன் என்ற வாலிபர், அரிவாளால் இரண்டு பேரை வெட்டிய சம்பவம் தொடர்பாக கடந்த 6ஆம் தேதி போலிசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது தப்பிக்க முயன்ற ஆகாஷிற்கு கால்முறிவு ஏற்பட்டதால் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஆகாஷின் உயிரிழப்புக்கு காரணம் போலீசார் தாக்கியதே என்று கூறி ஆகாஷின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக ஆகாஷ் காவல் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 07.03.2026 அன்று மானாமதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம். அஃப்சல் பாத்திமா பதிவு செய்த ரிமாண்ட் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள ஆகாஷின் வாக்குமூலத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிமாண்ட் அறிக்கையில், சிவகங்கை அரசு மருத்துவக்…
இந்தியாவில் இயற்கை பேரிடர்களைக் கையாள்வதிலும், வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதிலும் ஒரு புதிய புரட்சியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் புயல், கனமழை போன்ற இயற்கைச் சீற்றங்களை முன்பே துல்லியமாகத் தெரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (Machine Learning) தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மக்களவையில் வானிலை முன்னறிவிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது, புயல்களின் தீவிரத்தைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் அடிப்படையிலான ‘Advanced Dvorak Technique’ (AiDT) பயன்படுத்தப்படுகிறது. Arunika’ சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் Pangu, GraphCast போன்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறுகிய காலத்தில் கனமழை மற்றும் வெப்ப அலைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் மழைப்பொழிவை துல்லியத்துடன் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது. பாஷினி…
ஹைதராபாத்திலிருந்து தாய்லாந்தின் புக்கெட் தீவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் சுற்றுலாத் தலமான புக்கெட் தீவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 938) இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் 135 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 141 பேர் இருந்தனர். விமானம் புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதன் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையை விட்டுச் சற்று விலகிச் சென்று நின்றது. டயர் வெடித்த வேகத்தில் விமானத்தின் முன்பக்கத் தரையிறங்கும் பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. விமானம் தடம் விலகியதை கண்டு உள்ளே இருந்த பயணிகள் அலறினர். இருப்பினும்,…
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற 593 தமிழக மீனவர்கள் அங்கேயே சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களைப் பாதுகாப்பாக மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், “தற்போதைய சூழலில் மீனவர்களை வெளியேற்றுவது சாத்தியமில்லை” என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. ஈரானில் சிக்கியுள்ள சகாய ஜெனிஷ் ராஜ் மற்றும் ஜூடலின் ஆகிய மீனவர்களை மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி விசாரித்தார். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பகிரப்பட்டுள்ளன. இருப்பினும், ஈரானிய அரசாங்கம் தற்போது வான்வழிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாலும், போர்ச் சூழலாலும் உடனடி மீட்பு நடவடிக்கை சாத்தியமில்லை” என்று விளக்கமளித்தார். மனுதாரர்கள் தரப்பில் கூறுகையில், கன்னியாகுமரி,…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் இன்றும் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடினார். பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் தனது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், குறிப்பாகத் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய ராகுல் காந்தி, “நாடாளுமன்றம் என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சிக்குச் சொந்தமானது அல்ல, அது ஒட்டுமொத்த நாட்டிற்கும் சொந்தமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த அவையில் நாங்கள் எப்போது பேச எழுந்தாலும், எங்களைத் தொடர்ந்து தடுத்து நிறுத்துகிறார்கள்,” என்று தனது அதிருப்தியைப் பதிவு செய்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள்…
கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பதிவில், “இன்று அதிகாலையில், காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதும் ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அதனை வன்முறை மூலம் வெளிப்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இப்படிப்பட்ட தாக்குதல்கள் சட்டம் – ஒழுங்கை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக அரசியல் மரபுகளையும் பாதிக்கக்கூடியவை. இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காவல்துறை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு…
ஐபிஎல் 2026 திருவிழா வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, தனது கோட்டையான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டியில் களமிறங்குகிறது. வழக்கமாக கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் மோதிய அணிகளே முதல் போட்டியில் மோதும் என்றாலும், இந்த முறை ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘RCB vs CSK’ மோதலை முதல் போட்டியாக நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மெகா மோதல் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை நாளை, அதாவது மார்ச் 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் என்று பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக முதல் 20 நாட்களுக்கான அட்டவணை மட்டும் தற்போது வெளியிடப்பட உள்ளது. மீதமுள்ள போட்டிகளுக்கான…
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய தரவரிசையின்படி, இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு முக்கிய பிரிவுகளிலும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறப்பான ஆட்டங்கள் இந்தத் தரவரிசையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. பேட்டிங் வரிசை: அபிஷேக் சர்மா முதலிடம்: இந்தியாவின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 874 புள்ளிகளுடன் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் (848 புள்ளிகள்) இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் (803 புள்ளிகள்) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்திய இஷான் கிஷன் நான்காம் வீரர் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பௌலிங் வரிசை: வருண் சக்கரவர்த்தி ஆதிக்கம்: பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் ‘மிஸ்ட்ரி ஸ்பின்னர்’ வருண் சக்கரவர்த்தி 771 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் 753 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின்…