Author: Editor web3

வளைகுடா பிராந்தியத்தில் போர் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இடையேயான வார்த்தைப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் தடுத்தால், அந்த நாட்டின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் 20 மடங்கு கடுமையான தாக்குதலை நடத்துவோம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்காவின் இந்த மிரட்டல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. டிரம்பின் இந்த அதிரடி எச்சரிக்கைக்கு ஈரான் தரப்பிலிருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லாரிஜானி இது குறித்துப் பேசுகையில், “டிரம்பை விடவும் அதிக அதிகாரமும் வலிமையும் கொண்டவர்களாலேயே ஈரானை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடந்த கால வரலாறுகளை டிரம்ப் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டால் அமெரிக்கா தகுந்த விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து…

Read More

கோவையில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்டதால் 40-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்றைய முன்தினம் வழக்கம்போல் பள்ளியில் மதிய உணவு வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவ, மாணவிகள் அடுத்து சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்துள்ளனர். சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அங்கு வந்த மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதித்து முதலுதவி சிகிசை அளித்தனர். மறுபுறம் மாணவர்கள் சாப்பிட்ட உணவை பரிசோதிக்கும் போது சாம்பாரில் பல்லி ஒன்று விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் மருத்துவக் குழுவினரும் உடல்நலம் பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை…

Read More

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் தேதிகள் குறித்த மிக முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு முடித்துள்ளது. இதன் இறுதி கட்டமாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் மேற்குவங்கத்தில் தங்களது ஆய்வை நிறைவு செய்துவிட்டு டெல்லி திரும்பியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 மாநிலங்களிலும் எத்தனை கட்டங்களாகத் தேர்தலை நடத்துவது, பாதுகாப்புப் படையினரின் தேவை மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள…

Read More

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சம் தீவிரமடைந்துள்ளது. நேற்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் முன்பதிவுகள் அதிரடியாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவிலும் சிக்கல்கள் எழுந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது ஏற்கனவே லாக்டவுன் பயத்தில் இருந்த மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்களின் செல்போன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்ய முயற்சிக்கும்போது, விநியோக மையங்களின் எண்கள் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளதாகவோ அல்லது அழைப்புகளை ஏற்க மறுப்பதாகவோ பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல இடங்களில் இணையதள முன்பதிவு வசதிகளும் முடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

Read More

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று செவ்வாய்  (பிப்.10)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.15,050-க்கும், சவரன் ரூ.800 உயர்ந்து ரூ. 1,20,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (பிப்.11)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,120க்கும், ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,20,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிச்சியடைந்துள்ளனர். வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Read More

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மற்றும் அதன் பாதிப்புகள் மக்கள் மனதில் நீங்காத வடுக்களாக உள்ளன. தற்போது சமூக வலைதளங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த செய்திகள் பரவி வருவது, மீண்டும் ஒரு லாக்டவுன் சூழல் உருவாகிறதோ என்ற தேவையற்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த வதந்திகளால் பதற்றமடைந்த பொதுமக்கள், தங்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய சிலிண்டர் விநியோக மையங்களில் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழல் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு என்பது வெறும் வதந்தி என்றும், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிறிய தொழில்நுட்ப அல்லது போக்குவரத்து மாற்றங்களே சில இடங்களில் தாமதத்திற்கு காரணம் என்றும் கூறியுள்ளது. போதுமான அளவு கையிருப்பு உள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், லாக்டவுன் போன்ற எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும்,…

Read More

கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை விட, மக்களிடம் இருக்கும் செல்வாக்கும், வாக்கு வங்கியும்தான் முக்கியம் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல், திருச்சியில் நடைபெறவுள்ள ஒரு பெரிய கூட்டத்திற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எனது குடும்ப உறுப்பினர்களான அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுடன் இங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திருச்சி இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க அனைவரும் காத்திருக்கிறோம். பிரதமர் மோடி ஏழைகள், நடுத்தர மக்கள்…

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கப் படைகளுக்கு இடையே நிலவி வரும் போர், உலகளாவிய கடல் வழி வர்த்தகத்தில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதால், இந்தியாவிற்கு வரவேண்டிய எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரான் கடற்படை இந்தப் பாதையை ஒரு “ஆபத்தான பகுதி” என அறிவித்துள்ளதால், சுமார் 37 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் சிக்கியுள்ளனர். இந்தக் கப்பல்களில் சுமார் ரூ.10,000 கோடி மதிப்புள்ள சரக்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் தனது பகுதிக்குள் நுழையும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவு நாடுகளின் கப்பல்களைத் தாக்கும் என எச்சரித்துள்ளதால், இந்தியக் கப்பல்கள் மேற்கொண்டு நகர முடியாமல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் (INSA)…

Read More

சில நேரங்களில் பல் வலி ஒரு பொதுவான பிரச்சனையாகத் தோன்றும். நாம் மிகவும் குளிரான ஒன்றை சாப்பிட்டிருக்கலாம், கடினமாக மென்று சாப்பிட்டிருக்கலாம் அல்லது சரியாக பல் துலக்கவில்லை அதனால்தான் அது வலிக்கிறது. ஆனால் இந்த வலி நீண்ட நேரம் நீடித்து, சாதாரண வலியிலிருந்து சற்று வித்தியாசமாக உணர்ந்தால், அதை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பல் வலி என்பது ஒரு பொதுவான பல் பிரச்சனையின் அறிகுறியாகும், ஆனால் சில அரிதான சந்தர்ப்பங்களில், இது வாய்வழி புற்றுநோய் அல்லது தாடை புற்றுநோய் போன்ற ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, பொதுவான பல் வலிக்கும் புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். புற்றுநோய் தகவல் தளமான oncarecancer இன் படி, பல் புற்றுநோய் பொதுவாக ஈறுகளில், பற்களைச் சுற்றி  அல்லது தாடை எலும்பில் தொடங்குகிறது. பலர் வாயிலோ அல்லது பற்களைச் சுற்றியோ புற்றுநோய் உருவாகும் என்று நம்புவதில்லை, எனவே…

Read More

நமது அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக வெங்காயம் உள்ளது. குறிப்பாக, வெங்காயத்தைச் சமைத்து உண்பதை விட, பச்சையாகச் சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதாக ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகின்றனர். பச்சை வெங்காயம் உண்பதால் உடலுக்குக் கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்ன.. பார்க்கலாம். கோடை காலம் தொடங்கியவுடன், சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆரோக்கியத்தைப் பாதிக்கத் தொடங்குகிறது. எனவே, மக்கள் உடலை குளிர்விக்க உதவும் உணவுகளைத் தேடுகிறார்கள். பொதுவாக பச்சை வெங்காயம் வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் உடலை குளிர்விக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. கோடை காலத்தில் அதை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இதோ. மெட்ரோபோலிசோஇந்தியா என்ற சுகாதார தகவல் தளத்தின் அறிக்கையின்படி, பச்சை வெங்காயத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் வைட்டமின் சி உள்ளது, இது சருமத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஏனெனில் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது…

Read More