Author: Editor web3

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஈரான் விவகாரத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நிலைப்பாட்டிற்கு சீனா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், ஈரானின் புதிய தலைமை யாராக இருந்தாலும் அவர்களை இலக்கு வைப்போம் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட யாருக்கும் உரிமை இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஈரானின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்பது அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட இறையாண்மை சார்ந்த விஷயம் என்று சீனா குறிப்பிட்டுள்ளது. “ஈரானின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும்; எக்காரணத்தைக் கொண்டும் மற்ற நாடுகளின் உள்…

Read More

தமிழக அரசியலில் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பாஜக இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஹிதாயத்துல்லா அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதற்குப் பின்னால் பாஜகவின் அரசியல் சதி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யை இணைய வைக்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற நெருக்கடிகளைத் தந்திரமாக உருவாக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தனது கூட்டணியைப் பலப்படுத்திக் கொள்ள மற்ற அரசியல் கட்சிகளை மிரட்டி பணிய வைக்கும் போக்கைக் கடைப்பிடிப்பதாக ஹிதாயத்துல்லா சாடியுள்ளார். “எதிர்க்கட்சிகள் மற்றும் செல்வாக்குள்ள தலைவர்கள் மீது விசாரணை அமைப்புகளை ஏவுவதும், அவர்களின் தொழில்முறைப் பணிகளில் முட்டுக்கட்டை போடுவதும் பாஜகவின் வழக்கமான தந்திரம்” என்று அவர் விமர்சித்துள்ளார். விஜய்க்கு எதிராகத் தற்போது நடத்தப்படும் சூழ்ச்சிகள், அவரைத் தங்களது…

Read More

மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) அனுப்பிய சம்மனை ஏற்று, கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வரும் 17-ஆம் தேதி ஆஜராகப் போவதாக முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு கரூரில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க கோரி சிபிஐ அனுப்பிய நோட்டீஸ் குறித்துப் பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், தற்போது அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். முன்னதாக, சிபிஐ அதிகாரிகள் நேரில் வழங்கிய சம்மனை செந்தில் பாலாஜி தரப்பினர் வாங்க மறுத்ததாகவும், அதன் பின்னரே அவருக்கு மின்னஞ்சல் (E-mail) வாயிலாக சம்மன் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இதுதொடர்பாக செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில், கரூர் துயரச்…

Read More

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை மீண்டும் வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரானுடனான போர் பதற்றங்கள் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யா உலக அளவில் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும், அதிக இயற்கை எரிவாயு கையிருப்பு கொண்ட நாடாகவும் விளங்குவதால், புடினின் இந்த முன்னெடுப்பு சர்வதேச சந்தையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புடின், ஐரோப்பிய நாடுகள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தங்களுக்குள் இருக்கும் பகையைத் தவிர்த்து நீண்டகால ஒத்துழைப்பை உறுதி செய்தால் எரிபொருளை வழங்கத் தயார் என்று நிபந்தனை விதித்துள்ளார். “நாங்கள் ஒருபோதும் ஒத்துழைப்பை மறுத்ததில்லை; ஆனால் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து முறையான சமிக்ஞைகள் வர வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ட்ரெய்ட்…

Read More

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,950-க்கும் விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, “உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் எல்.பி.ஜி (LPG) உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, முழுமையாக வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவை பதுக்குவதையும், கருப்பு சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க, ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்ததிலிருந்து அடுத்த பதிவிற்கு இடையே 25 நாட்கள் கட்டாய இடைவெளி இருக்க வேண்டும் என்ற புதிய…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான முக்கிய நகர்வுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று திருச்சி வருகிறார். நாளை திருச்சியில் நடைபெறவிருக்கும் பிரம்மாண்டமான NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்விற்கான முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்யும் பியூஷ் கோயல், இன்று இரவு திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின் மிக முக்கியமான அம்சமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பியூஷ் கோயல் நாளை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே பாமக, அமமுக போன்ற…

Read More

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வில் மக்களவையில் பேசிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜியா.உர். ரகுமான், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் விலைவாசி உயருமா ? என்று கேள்வி எழுப்பினார். பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”கடந்த ஓராண்டாகக் குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை, பிப்ரவரி 28, 2026 அன்று மேற்கு ஆசியாவில் தொடங்கிய போர் காரணமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி இறுதியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் $69.01 ஆக இருந்தது. ஆனால் மார்ச் 2-ம் தேதி: இது $80.16 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போதைய பணவீக்கம் மிகவும் குறைந்த அளவிலேயே இருப்பதால், இந்த விலை உயர்வு இப்போதைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று…

Read More

இந்தியாவின் வருங்கால எரிசக்தித் தேவைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி மிக முக்கியமானது என்பதால், இதில் உள்ள சவால்களைக் குறித்து மக்கள் பிரதிநிதிகள் ஆலோசிப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது உலகளவில் நிலவும் புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் இந்தியாவின் எரிசக்தித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற மரபுசார் எரிசக்திகள் மட்டுமின்றி, சூரிய ஒளி மற்றும் காற்று ஆலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  ஆதாரங்களை மேம்படுத்துவது குறித்தும் அரசு தெளிவான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வளைகுடா நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கோடி பேருக்கும் மேலாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் சிலரை காணவில்லை. சிலர்…

Read More

2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பிசிசிஐ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பண பலத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டையே சீரழித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருந்தாலும் அல்லது தோற்றிருந்தாலும், கிரிக்கெட்டில் நிலவும் சமநிலையை பிசிசிஐ-யின் அதிகாரம் பாதிப்பதாக அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். பாகிஸ்தானின் ‘கேம் ஆன் ஹை’ நிகழ்ச்சியில் பேசிய அக்தர் கூறுகையில், பிசிசிஐ-யின் வர்த்தக ரீதியான ஆதிக்கம் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சியைப் பாதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதிகப்படியான ஐபிஎல் போட்டிகள் மற்றும் வீரர்களுக்கு வழங்கப்படும் அதிக வருமானம் காரணமாக, சர்வதேச கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார். “கிரிக்கெட் இப்போது ஒரு விளையாட்டாக இல்லாமல், வெறும் வியாபாரமாக மாறிவிட்டது” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது “ஒரு தெருவில் இருக்கும் ஒரு பணக்கார…

Read More