Author: Editor web3

ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் உலகின் இரண்டு துருவங்களாகக் கருதப்படும் எம்.எஸ். தோனி மற்றும் கவுதம் கம்பீர் இடையேயான இன்ஸ்டாகிராம் உரையாடல் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து, முன்னாள் கேப்டன் தோனி இந்திய அணியையும் அதன் பயிற்சியாளர் கம்பீரையும் பாராட்டி ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில் கம்பீரின் எப்போதுமே சீரியஸாக இருக்கும் குணத்தைக் கிண்டல் செய்யும் விதமாக ஒரு சுவாரசியமான கருத்தைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் தோனி, “கோச் சாப் (Coach Saab)… உங்கள் முகத்தில் இருக்கும் இந்தப் புன்னகை மிகவும் அழகாக இருக்கிறது. உங்களின் வழக்கமான சீரியஸ் முகத்துடன் இந்தச் சிரிப்பும் சேர்ந்தால் அது ஒரு ‘கில்லர் காம்போ’ (Killer Combo) ஆக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாகவும், சீரியஸாகவும் காணப்படும் கம்பீரை, தோனி இப்படி ஜாலியாகக் கலாய்த்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.…

Read More

மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், தனது புதிய திட்டமான VB-G RAM G (Viksit Bharat – G RAM G Act 2025) என்பதற்காக ஒரு தனித்துவமான லோகோவை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சிறந்த லோகோவை வடிவமைக்கும் நபருக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படைப்பாற்றல் மிக்க இளைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் போட்டி தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர், மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தளமான mygov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்களது மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி ‘லாக்-இன்’ (Login) செய்து, நீங்கள் உருவாக்கிய லோகோவைச் சமர்ப்பிக்கலாம். லோகோவானது திட்டத்தின் சாராம்சத்தைப் புரியவைக்கும் வகையிலும், எளிமையாகவும், ஈர்க்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி மார்ச் 20…

Read More

குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை செல்போனில் சேமித்து வைத்திருப்பது மிக கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக எச்சரித்துள்ளது. பொதுவாக இதுபோன்ற காட்சிகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்தால் மட்டுமே குற்றம் என்று பலர் கருதி வருகின்றனர். ஆனால், அவற்றை மற்றவர்களுக்குப் பகிரவில்லை என்றாலும், உங்கள் மொபைலில் வெறும் சேமிப்பிற்காக வைத்திருந்தாலே அது POCSO (குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்) மற்றும் IT (தகவல் தொழில்நுட்ப சட்டம்) ஆகிய சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு ஒரு முக்கியமான வழக்கின் பின்னணியில் வந்துள்ளது. தனது மொபைலில் ஆபாச வீடியோக்களைச் சேமித்து வைத்திருந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தனிநபர் ஒருவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, இதுபோன்ற செயல்கள் சமூகத்திற்குப் பெரும் தீங்கு விளைவிப்பதாகக் குறிப்பிட்டது. தனிப்பட்ட முறையில் வைத்திருப்பது கூட சட்டவிரோதமானது என்பதை…

Read More

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று (மார்ச் 9) மாலை 3 மணி வரை அவகாசம் இருந்த நிலையில், இதுவரை 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 6 பேர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. எனவே, இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். திமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திருச்சி சிவா (5-வது முறையாக) மற்றும் செய்தித் தொடர்பாளர் ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் எம். கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். தேமுதிக சார்பில் முதன்முறையாக மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் செல்வது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக…

Read More

முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியின் கடைசி நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவில், நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டினேன். இன்றைய தினம் (தற்போது வரை) செய்திகளில் வந்துள்ள “கொலை நிலவரத்தை” சுட்டிக்காட்ட விழைகிறேன். -கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை-சென்னை திரிசூலத்தில் குடிசையில் தங்கியிருந்த இருவர் படுகொலை -தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது. முதியோருக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு கொடூரமான…

Read More

உலகெங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஏற்படுத்தி வரும் புரட்சி, வெறும் வேலையையும் வணிகத்தையும் மட்டும் மாற்றவில்லை; அது உலகப் பொருளாதாரத்தின் வரைபடத்தையே மாற்றி அமைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2026’ (Hurun Global Rich List 2026) அறிக்கையின்படி, கடந்த ஒரே ஆண்டில் மட்டும் AI துறையைச் சார்ந்த 46 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இதன் மூலம் உலகளவில் உள்ள மொத்த 4,020 பில்லியனர்களில், நேரடியாக AI தொழிலுடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், கடந்த ஓராண்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு புதிய பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு மகுடம் வைத்தாற்போல், உலகின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் (Jensen Huang) சொத்து மதிப்பு வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. கடந்த ஓராண்டில்…

Read More

ஈரான் – அமெரிக்கா இடையிலான போரால் இதுவரை இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய இக்கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இக்கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு கடந்த 13ம் தேதி வரை நடைபெற்றது. இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு இரு அவைகளிலும் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவையில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் மற்றும் இஸ்ரேல்,அமெரிக்கா போர் குறித்து  விளக்கம் அளித்து பேசியுள்ளார். ஈரான் உள்ளிட்ட நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களுக்கு அங்குள்ள தூதரகங்கள் மூலமாக தொடர்ச்சியாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை, கிட்டத்தட்ட 67,000 இந்தியர்கள் சர்வதேச எல்லைகளைத் கடந்து நாடு திரும்பியுள்ளனர்.…

Read More

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்தவகைடில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பதிவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காவல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு குடிமகனின் உயிர் இவ்வாறு இழக்கப்படுவது சமூகத்தில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் சம்பவமாகும். ஒரு நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவரது உயிர் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படை பொறுப்பாகும். ஆகையால் இந்த சம்பவத்தின் உண்மை நிலை முழுமையாக வெளிச்சத்துக்கு வருவது மிகவும் அவசியமானதாகும். உண்மை நிலை குறித்து எந்தவித சந்தேகமும் இல்லாத வகையில், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு…

Read More

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடக்கூடிய இரு தொகுதிகளின் பெயர்கள் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும், தவெகவில் உள்ள முக்கியமான நபர்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகள் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருகிறது. அது பற்றி பார்க்கலாம். தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்ட பின் முதற்கட்டமாக 2026 தேர்தலை இலக்காக வைத்து விஜய் தனது காய்களை நகர்த்தி வருகிறார். மாநில மாநாடுகள், அவ்வப்போதான அறிக்கைகள் என்பதை தாண்டி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார் விஜய். இடையில் ஏற்பட்ட கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தால் சுமார் ஒரு மாத காலமாக முடங்கியிருந்த தமிழக வெற்றிக்கழகம் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கி முழுமூச்சாக மேற்கொண்டு வருகின்றனர். ஜனநாயகம் விவகாரம், CBI வழக்குகள், கூட்டணிக்கு யாரும் வராதது, விஜய் மனைவியின் விவாகரத்து விவகாரம் என தடைகள் பல இடைமறிக்கும் போதும் கட்சிப்பணிகள் சுணக்கம் இல்லாமல் செல்வதாகவே பார்க்கப்படுகிறது.…

Read More

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குத் திரைத்துறை மற்றும் அரசியல் என இருமுனைகளிலும் அடுத்தடுத்த நெருக்கடிகள் உருவாகியுள்ளன. அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சிக்கல் ஒருபுறம் நீடிக்க, மறுபுறம் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் அவர் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பாக ‘ரிவைசிங் கமிட்டி’ (மறுசீராய்வு குழு) இன்று (மார்ச் 9) படத்தை ஆய்வு செய்யவிருந்த நிலையில், குழு உறுப்பினருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அந்த ஆய்வு காலவரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இப்படம், மார்ச் மாதமாகியும் தியேட்டருக்கு வருவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. திரைப்படச் சிக்கலை விட அரசியல் ரீதியான கிடுக்குப்பிடி விஜய்க்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 27-ல் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக…

Read More