Close Menu
    What's Hot

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய்க்கு அடுத்த செக்!. கரூர் வழக்கில் நாளை சிபிஐ முன் ஆஜராக உத்தரவு!.
    தமிழ்நாடு

    விஜய்க்கு அடுத்த செக்!. கரூர் வழக்கில் நாளை சிபிஐ முன் ஆஜராக உத்தரவு!.

    Editor web3By Editor web3March 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Karur CBI
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குத் திரைத்துறை மற்றும் அரசியல் என இருமுனைகளிலும் அடுத்தடுத்த நெருக்கடிகள் உருவாகியுள்ளன. அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சிக்கல் ஒருபுறம் நீடிக்க, மறுபுறம் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் அவர் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பாக ‘ரிவைசிங் கமிட்டி’ (மறுசீராய்வு குழு) இன்று (மார்ச் 9) படத்தை ஆய்வு செய்யவிருந்த நிலையில், குழு உறுப்பினருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அந்த ஆய்வு காலவரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இப்படம், மார்ச் மாதமாகியும் தியேட்டருக்கு வருவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

    திரைப்படச் சிக்கலை விட அரசியல் ரீதியான கிடுக்குப்பிடி விஜய்க்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 27-ல் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக ஏற்கனவே ஜனவரி மாதம் இரண்டு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த விஜய்க்கு, தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அவரது 2026 தேர்தல் பிரச்சாரத் திட்டங்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகப் பார்க்கப்படுகிறது.

    தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் நேர்காணல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இந்த விசாரணையை 10 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் சிபிஐ-க்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், புதிய ஆதாரங்கள் மற்றும் கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதால், குறிப்பிட்ட தேதியிலேயே நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் தனது கடைசித் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவது மற்றும் சிபிஐ விசாரணையின் தீவிரமடைவது என விஜய்க்கு இரட்டைச் சிக்கல்கள் சூழ்ந்துள்ளதால், தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யின் தேர்தல் வியூகம்!. புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் அர்ஜுனா வரை!. யாருக்கு எந்தத் தொகுதி?
    Next Article விஜய் போட்டியிடும் இரு தொகுதிகள்..! வெளியான முக்கிய தகவல்!
    Editor web3
    • Website

    Related Posts

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    June 10, 2026

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.