Author: Editor web3

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை முன்கூட்டியே கணித்து முன்னேற்பாடுகளை செய்யத் தவறிய பாஜக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தினசரி வாழ்க்கையில் அத்தியாவசியமான சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது மிகுந்த கவலைக்குரியது. இதனால் உணவகங்கள், சிறு ஹோட்டல்கள் மற்றும் பல சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்த்தப்பட்டதும், முன்பதிவு காலம் 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டதும் பொதுமக்கள் மீது கூடுதல் சுமையாக மாறியுள்ளது.…

Read More

திமுகவின் அவதூறு பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தெரிவித்த அண்ணாமலை, அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என நீலிக்கண்ணீர் வடிப்பதை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சாடியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாகக் குற்றம் சாட்டிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சாட்சியம் அளிப்பதற்காக அண்ணாமலை நேரில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாமானியர்கள் பொது வாழ்க்கைக்கு வருவதைத் தடுப்பதற்காகவே திமுக இது போன்ற அபாண்டமான பழிச்சொற்களைச் சுமத்துகிறது. யாரிடமும் மன்னிப்பு கேட்கும் பழக்கம் ஆர்.எஸ். பாரதிக்கு இல்லை என்பதால், நீதிமன்றம் மூலம் இதற்குத் தீர்வு காணவே வழக்கு தொடர்ந்துள்ளேன்,” என்றார். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அந்த கட்சியை பாஜக விழுங்கிவிடும் என்ற முதலமைச்சரின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த அண்ணாமலை, 1999 முதல் 2003 வரை…

Read More

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்தி வரும் வான்வழித் தாக்குதல் இன்று 11-வது நாளை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த “ஆபரேஷன் ரோரிங் லயன்” (Operation Roaring Lion) நடவடிக்கையில், இதுவரை தளபதிகள் உட்பட 1,900-க்கும் மேற்பட்ட ஈரான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் (Effie Defrin) தெரிவித்துள்ளார்.  ஈரானின் ஏவுகணை தளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வீசப்பட்டதில் அந்நாட்டின் ராணுவ பலம் பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது. டெஹ்ரான், இஸ்பஹான் மற்றும் தெற்கு ஈரான் பகுதிகளில் உள்ள ராணுவ விமான நிலையங்கள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிரமான தாக்குதலில் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரானின் ‘குத்ஸ் படை’ (Quds Force) பயன்படுத்திய…

Read More

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்படுவது மற்றும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மீதான இடைநீக்க நடவடிக்கைகள் சபாநாயகரின் ஒருதலைப்பட்சமான போக்கைக் காட்டுவதாகக் கூறி, சுமார் 118 எம்.பி-க்களின் கையெழுத்துடன் இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவாதத்திற்காக அவையில் மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “கடந்த பல ஆண்டுகளாக மக்களவையில் துணை சபாநாயகர் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. இது அரசமைப்பில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது” என்று அவர் குற்றம் சாட்டினார். பொதுவாகச் சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை வழிநடத்த வேண்டிய துணை சபாநாயகர் இல்லாதது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சமநிலையைச் சீர்குலைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், சபாநாயகருக்கு…

Read More

திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோருக்கு அவதூறு வழக்குகளில் சிறை தண்டனை கிடைப்பது உறுதி என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிரடியாகத் தெரிவித்துள்ளார். திமுக பைல்ஸ் என்ற பெயரில் அந்த கட்சியின் முன்னணி தலைவர்களின் சொத்து விவரங்களை பா.ஜ.க., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில், முன்னாள் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்களையும் வெளியிட்டார்.  அவருக்கு 21 நிறுவனங்கள் உள்ளதாக கூறியிருந்தார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், அவதூறு பரப்புவதாகவும் கூறி அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டி ஆர் பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை மேற்கொண்டார் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்த நிலையில் அண்ணாமலை நேரில் ஆஜரானார். அப்போது ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக தான் தொடர்ந்த அவதூறு வழக்கில் முக்கிய…

Read More

தமிழக வெற்றிக்கழகத்திற்கான வேட்பாளர் தேர்வில் முக்கிய டிவிஸ்ட் வைக்கும் விஜய். அது என்ன தெரியுமா? பார்க்கலாம். தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இத்தகைய சூழலில் அனைத்து கட்சியினரும் கூட்டணியை நிறைவு செய்வதிலும் தொகுதி பங்கீடு பணிகளை முடிப்பதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், மக்களின் அதீத எதிர்பார்ப்பை தன் மீது கொண்டுள்ள தமிழக வெற்றிக்கழகம் கூட்டணிக்கு யாரும் வராததையடுத்து தனித்து களம் காண தயாராகி வருகிறது. தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, இன்று வேட்பாளர் தேர்வை தொடங்கியுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். முன்னதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரிய சிபிஐ-யின் அழைப்பை ஒத்திப்போட வைத்துவிட்டு முதற்கட்ட வேட்பாளர் தேர்வில் ஈடுபடுகிறார் விஜய். இன்றைய நிலையை பொறுத்தவரை, விருப்ப மனு அளித்தவர்களில் தேர்வானவர்களில் சுமார் 50க்கும் மேற்பட்டோரை நேர்காணல் செய்யும்…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955-ஐ (Essential Commodities Act) மத்திய அரசு தற்போது அமல்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்குக் குறைந்த விலையில், தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் கீழ், சமையல் எரிவாயு (LPG) ஒரு அத்தியாவசியப் பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் தங்களது முழு உற்பத்தித் திறனையும் சமையல் எரிவாயு தயாரிப்பிற்கே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோகெமிக்கல் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற எரிவாயுக்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு, அவை அனைத்தும் வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்திக்கே திருப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதையும், செயற்கையான…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு விவகாரம், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எல்.பி.ஜி சிலிண்டர் விலை ₹60 உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், தட்டுப்பாட்டைச் சீர்செய்யத் தவறியதைக் கண்டித்தும் லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளான SIR விவகாரத்திலும் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, இது ஜனநாயக விரோத நடவடிக்கை என அவர்கள் குற்றம் சாட்டினர். ஒருபுறம் எரிபொருள் விலை உயர்வு, மறுபுறம்…

Read More

டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ரூ.131 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா தனது மூன்றாவது டி20 உலகக்கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டும் விதமாக, பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சய்க்கியா இந்த மெகா பரிசுத்தொகையை இன்று (மார்ச் 10) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த ரூ.131 கோடி பரிசுத்தொகையானது உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் இதர துணை ஊழியர்களுக்குப் பிரித்து வழங்கப்பட உள்ளது. இதில் வீரர்களுக்குச் சமமான பங்கும், மற்ற ஊழியர்களுக்கு அவர்களது பணி நிலைக்கு ஏற்பவும் தொகைகள் ஒதுக்கப்படும். கடந்த 2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய…

Read More

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, மத்திய ஆயுதப் படை வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். தேர்தல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக முதற்கட்டமாக 50 கம்பெனி பாதுகாப்புப் படையினர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் வருகை தந்தனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கிய சுமார் 600 வீரர்களில், 5 கம்பெனிகளைச் சேர்ந்த 530 துணை ராணுவ வீரர்களும், சுமார் 70 சிஆர்பிஎப் (CRPF) வீரர்களும் அடங்குவர். இவர்களைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வரவேற்று, அவர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஒதுக்கீடு செய்தனர். தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கவும், வாக்காளர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் இவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த வீரர்களில் 2 கம்பெனி வீரர்கள் ஆவடிக்கும், 2 கம்பெனி வீரர்கள்…

Read More