Author: Editor web3
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். பிப்ரவரி மாதமே விருப்ப மனுக்களைப் பெற்று முடித்த நிலையில், மார்ச் 10-ம் தேதி முதல் வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களில் தகுதியானவர்கள் மட்டும் குறுஞ்செய்தி அல்லது அழைப்பு மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்த நேர்காணல் முடிந்தவுடன், இரண்டு வாரங்களுக்குள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 10 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்விலும் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் மற்ற பிரதான கட்சிகளுக்கு முன்னதாகவே வேட்பாளர் நேர்காணல் மற்றும் தேர்வுப் பணிகளைத் தொடங்குவது, தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தனது அதிரடியான மற்றும் தெளிவான திட்டமிடலால் 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளார். குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்காகவும், வீரர்களின் தேர்விற்காகவும் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குத் தனது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார். தரவுகளைவிட வீரர்களின் திறமை மற்றும் தனது உள்ளுணர்வை அதிகம் நம்பும் கம்பீர், ஒரு அணியாக வீரர்களிடம் தனிப்பட்ட சாதனைகளைத் தவிர்த்து, வெற்றியை மட்டுமே இலக்காகக் கொள்ளும் மனநிலையை விதைத்துள்ளார். வீரர்கள் தேர்வில் அவர் காட்டிய துணிச்சல் இன்று இந்தியாவை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளது. நீண்ட நாட்களாக விமர்சனத்திற்கு உள்ளான சஞ்சு சாம்சனைத் தொடக்க வீரராகக் களமிறக்கி அவருக்கு முழு ஆதரவு அளித்தது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சஞ்சுவின் 97 ரன்கள் மூலம் பலனளித்தது. அதேபோல், வருண்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தங்களுக்குப் போதுமான ராணுவ வலிமை இருப்பதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர்ந்து தீவிரமாகப் போர் புரியத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தங்களிடம் கையிருப்பில் உள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 28, 2026 அன்று தொடங்கிய “ஆபரேஷன் எபிக் பியூரி” (Operation Epic Fury) மூலம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளைத் தாக்கி வரும் நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் இதுவரை நடத்திய தாக்குதல்களில் தங்களின் 2-ஆம் மற்றும் 3-ஆம் தலைமுறை ஏவுகணைகளை மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது. இனிவரும் நாட்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட, நீண்ட தூரம் பாய்ந்து செல்லக்கூடிய மேம்பட்ட ஏவுகணைகளை ஏவப்போவதாக பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி தெரிவித்தார். குறிப்பாக,…
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிர்வாகிகள் மத்தியில் எதிர்பாராத விதமாக அவருக்குத் திடீர் மயக்கமும் தலைச்சுற்றலும் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்து படியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிரிஷ் சோடங்கர் மயக்கமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கினர். பின்னர், கட்சி நிர்வாகிகள் அவரைத் தாங்கிப் பிடித்தபடி வெளியே அழைத்து வந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் சத்தியமூர்த்தி பவனில் சிறிது நேரம் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருவதாகப் பேசப்படுகிறது. ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் மற்றும் நடிகருமான பவன் கல்யாண், விஜயுடன் நல்ல நட்புறவில் இருப்பதால், அவர் மூலமாக விஜய்க்குத் தூது அனுப்பப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில், திமுக-அதிமுக-நாதக என நான்கு முனைப் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கூட்டணி முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சூழலில், தமிழக பாஜக மாநிலச் செய்தி தொடர்பாளர் ANS பிரசாத் இன்று (மார்ச் 8, 2026) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள என்டிஏ கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திமுகக்கு எதிராக…
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று, அண்மையில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். ஓபிஎஸ் தனது கோட்டையான போடிநாயக்கனூர் தொகுதியிலும், ரவீந்திரநாத் ஆண்டிப்பட்டி தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். தலைமை இவர்களுக்குப் போட்டியிடப் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், இது தேனி மாவட்ட திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆண்டிப்பட்டி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ள மகாராஜன் மற்றும் கடந்த பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள், தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என மலைபோல நம்பியிருந்தனர். ஆனால், நேற்று வந்தவர்களுக்கு இன்று முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். “தன்னுடன் வந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும்” என ஓபிஎஸ் தரப்பு அழுத்தம் கொடுப்பதால், ஆண்டிப்பட்டி மற்றும் போடி ஆகிய இரு தொகுதிகளிலும் திமுகவின் பழைய முகங்களுக்குப் பதில் புதிய முகங்களே களம்…
திரைையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் – த்ரிஷா விவகாரம் குறித்து, முன்னணி நட்சத்திரங்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சில நாள்களுக்கு முன் திருமண நிகழ்வொன்றில் நடிகை த்ரிஷாவுடன் கலந்துகொண்டு பலருக்கும் அதிர்ச்சியளித்தார். காரணம், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து விஜய் இப்படி செய்தது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் டெக்ஸ்லா திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் இயக்குநர் பாலா உள்பட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சமுத்திரக்கனி நடிகர் விஜய்யின் செயலைக் குறிப்பிட்டு, ”இதெல்லாம் விளையாட்டா? யாரைப் பழிவாங்க இதைச் செய்கிறார்? ஒரு பிரச்னை நடக்கும்போது நடிகையைக் கூட்டி வருகிறார். நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். சொந்தக் கட்சிக்காரர்களே இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது எனப் புலம்புகிறார்கள்”…
பீகார் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த முதலமைச்சர் நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியைத் துறந்து தேசிய அரசியலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். அவர் ராஜ்யசபா எம்.பி.யாகப் பொறுப்பேற்க உள்ளதைத் தொடர்ந்து, அவரது மகன் நிஷாந்த் குமார் இன்று (மார்ச் 8) அதிகாரப்பூர்வமாக ஐக்கிய ஜனதா தளம் (JD-U) கட்சியில் இணைந்தார். இதுவரை அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிஷாந்த் குமார், தனது தந்தையின் அரசியல் வாரிசாகப் பொதுவெளியில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். 50 வயதான நிஷாந்த் குமார், ஒரு பொறியியல் பட்டதாரி (Software Engineer) ஆவார். நீண்ட காலமாகத் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் முறைப்படி கட்சியில் இணைந்துள்ளார். நிதிஷ் குமார் ராஜ்யசபாவுக்குச் செல்வதால், பீகாரில் பிஜேபி (BJP) தலைமையிலான புதிய ஆட்சி அமைய உள்ளது. இதில் பிஜேபியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், நிஷாந்த் குமாருக்குத் துணை…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி வரும் மார்ச் 15 அல்லது 16-ஆம் தேதிகளில் வெளியாகலாம் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைய உள்ளதால், ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனிடையே, தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தத் தேர்தல் ஆணையம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்காகச் செலவு செய்யும் தொகைக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கப்படுவார். இந்த வரம்பைத் தாண்டி ஒரு ரூபாய் கூடுதலாகச் செலவு செய்தாலும், அது தேர்தல் விதிமீறலாகவும் ஊழல் நடவடிக்கையாகவும் கருதப்படும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், முறையான கணக்கு காட்டப்படாத செலவுகள் கண்டறியப்பட்டால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படவும்…
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்தக்கோரியும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கட்சி சார்பில் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.