Author: Editor web3

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியுமான வெல்லமண்டி என். நடராஜன் அவர்களுக்கு, அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்படுவதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அண்மையில் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது அணியில் இருந்த வெல்லமண்டி நடராஜன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இதனை அங்கீகரிக்கும் விதமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இந்தப் புதிய பொறுப்பை அவருக்கு வழங்கியுள்ளார். கடந்த 2016-2021 அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பணியாற்றிய வெல்லமண்டி நடராஜன், கடந்த 1972-ம் ஆண்டு முதல் கட்சியின் விசுவாசியாக இருந்து வருகிறார். உட்கட்சிப் பூசல் காரணமாக ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த அவர், “ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால் திமுகவுடன் பயணிக்க முடியாது” எனக் கூறி மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தார். கட்சியின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் அவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல்…

Read More

மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நாளை மகளிர் தின விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தவெக சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தனது எக்ஸ் பதிவில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் மகளிர் தின விழா, நாளை (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் கழகத் தலைவர் அவர்கள் அறிவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும்…

Read More

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிப்பை வரவேற்று மீனவர் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், மாநிலங்களவைக்கான வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டியிருக்கிறது திமுக. இந்தநிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவிற்கான நான்கு இடங்களில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு இடம் தேமுதிகவிற்கும் வழங்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள இரண்டு இடங்களில் திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை அறிவித்ததற்கு வரவேற்கும் வகையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மீனவ சமூதாயத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Read More

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த போரால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை உள்ளது. இந்தநிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைக்கும்வகையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டது அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அதுவும் அடுத்த 30 நாட்களுக்கு மட்டும் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ரஷ்யாவிலிருந்து 30 நாட்களுக்கு மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா முடிவு செய்யும்போது, ​​அது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை? விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படை மதிப்பாய்வு 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற…

Read More

தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் 14 முக்கிய அம்சங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், எனது அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமான நாளாக மார்ச் 6ம் தேதி அமையப் போகிறது என்றார். மண்ணும் மக்களும் மாநிலமும் பயன்பெற தேவையான திட்டங்களை உருவாக்கவே உங்களை அழைத்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியுள்ளது. சொல்ல முடியாத அளவுக்கு மலை அளவு சாதனைகளை செய்துள்ளோம். அமைச்சர் பெருமக்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 5 ஆண்டுகளில் மக்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சிதான் நான் மகிழ்ச்சியாக இருக்க காரணம். ஆட்சிக்கு வரும்போது இவ்வளவு திட்டங்களை நிறைவேற்ற முடியுமா என்ற ஏக்கம் இருந்தது. அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் பயனடையாத குடும்பங்கள் இல்லை. 5 ஆண்டுகளில் என்னுடைய கனவுகளில் பெரும்பாலான கனவுகளை நிறைவேற்றி விட்டேன். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அனைத்து…

Read More

ரஷ்யாவிடமிருந்து 30 நாட்கள் எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா வழங்கியுள்ள தற்காலிக அனுமதிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிகமாக 30 நாட்கள் அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, “இது இந்தியாவின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும் விடப்பட்ட சவால்” என்று கொதித்துள்ளது. ஒரு சுதந்திர நாடான இந்தியா, யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமெரிக்காவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீங்கள் புதினிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம் என டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். டிரம்ப் புதிய விளையாட்டைத் தொடங்கியுள்ளார். இது அமெரிக்காவின் அப்பட்டமான மிரட்டல்” என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் மக்களவை எம்.பி மணிஷ் திவாரி,…

Read More

திமுக அரசு, தமிழகத்தின் உரிமையை காக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக நடப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவில், ”தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் போவதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தனது நிதிநிலை அறிக்கையில் கூறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடனான தனது கூட்டணியை திமுக உறுதி செய்த அடுத்த தினமே, கர்நாடக காங்கிரஸ் அரசு இதனை அறிவித்திருப்பது, தனது கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க, திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதை வெளிப்படையாக்கியிருக்கிறது. தமிழகத்தின் உரிமையை காக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் நலனுக்காக, தமிழகத்தின் உரிமையைப் பலிகடா ஆக்க முடியாது. தமிழக மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் இது. உடனடியாக, தனது கூட்டணிக் கட்சித் தலைவரான கர்நாடக…

Read More

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பேசியவர், கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். மொபைல் போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவும், அவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக பெங்களூருவில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இந்தத் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. “புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு” என்ற பெயரில் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசாரத்தை கர்நாடக அரசு முன்னெடுத்துள்ளது. முன்னதாக சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தடை…

Read More

2026-ஆம் ஆண்டு நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடர் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 8 வீரர்கள் ‘தொடர் நாயகன்’ (Player of the Tournament) விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பரிந்துரைக்கப்பட்ட 8 வீரர்களின் விவரம் இதோ. சஞ்சு சாம்சன் (இந்தியா): பேட்டிங்கில் அதிரடியாகச் செயல்பட்டு வரும் சாம்சன், கடைசி இரண்டு போட்டிகளிலும் ‘ஆட்ட நாயகன்’ விருதுகளை வென்று அசத்தியுள்ளார். முக்கியமாக மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இவரின் அதிரடி ஆட்டம் இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவியது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முக்கியமான சூப்பர் 8 போட்டியில் சாம்சன் வெறும் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார், பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்…

Read More

சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா  30 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடல் வழியாக எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளன. இந்த இக்கட்டான நிலையில், கடலில் தேங்கியுள்ள ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சரக்குகளை இந்தியா இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்கா தற்காலிகமாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. அமெரிக்காவின் ஸ்காட் பெசென்ட்  இது குறித்துத் தெரிவிக்கையில், மார்ச் 5-ஆம் தேதிக்கு முன்பாக ரஷ்யாவிலிருந்து ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய் சரக்குகளை அடுத்த 30 நாட்களுக்குள் இந்தியா பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும். வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எண்ணெய் விலை கடுமையாக…

Read More