Author: Editor web3

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் வீடுகள் பட்டியலிடும் பணிகள் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையவழியில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யும் ‘சுய-கணக்கெடுப்பு’ (Self-Enumeration) முறை வருகிற ஜூலை 17 அன்று தொடங்கி ஜூலை 31  வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது. சுய-கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, களப்பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் ‘வீடுகள் பட்டியலிடும் பணி’ (House Listing Operations) வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை 30 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான இந்த முதற்கட்ட பணிகள் இந்தியா முழுவதும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான தேதிகள் தற்போது…

Read More

ஆர். என். ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் உள்பட பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு, மேற்கு வங்காளம், நாகாலாந்து, பீகார் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக, குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர். என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் – ஆர்.என்.ரவி தெலுங்கானா – ஷிவ்பிரதாப் சுக்லா மகாராஷ்டிரா – ஜிஷ்ணு தேவ் வர்மா நாகாலாந்து – நந்து கிஷோர் யாதவ் பீகார் – சையத் அடா ஹஸ்னன் இமாசல பிரதேசம் – கவிந்தர் குப்தா…

Read More

ஈரானின் ஆளில்லா விமானம் எல்லை தாண்டி அஜர்பைஜான் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு குறித்து அஜர்பைஜான் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அஜர்பைஜானின் ஒரு விமான நிலையத்தை குறிவைத்து இந்த ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, இது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. சம்பவம் குறித்து ஈரான் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அஜர்பைஜான் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை…

Read More

தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, வேட்பாளர் தேர்வு குறித்து நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், கட்சிக்காக உழைத்த ஒரு அடிமட்டத் தொண்டரை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவித்தார். வேட்புமனுவில் கிறிஸ்டோபர் திலக் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, அவரிடம் வெறும் 13,000 ரூபாய் பணமும், ஒரே ஒரு சவரன் தங்க நகையும் மட்டுமே உள்ளதாகவும், அவருக்கு என்று அசையும் அல்லது அசையா சொத்துக்கள் எதுவுமே இல்லை என்றும் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார். எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு எளிய மனிதரை நாடாளுமன்ற மேலவைக்கு காங்கிரஸ் தலைமை அனுப்பி வைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று கூறிய அவர், இதற்காகத் தமிழக முதல்வர்…

Read More

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாநிலங்களவை எம்.பி. சீட் என்ற தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நனவாகி  இருக்கிறது.தே.மு.தி.க.விற்கு முன்னதாகவே மாநிலங்களவை எம்.பி. சீட் கிடைத்திருக்க வேண்டும். சற்று காலதாமதமாக கிடைத்துள்ளது. 2024-ல் தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுத்திருக்க வேண்டியது, அது நடக்காமல் போனது.மாநிலங்களவை எம்.பி.யாக இந்திய அளவில் ஜனநாயக கடமையாற்ற உள்ள சுதீசுக்கு வாழ்த்துகள் என்றார். வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, சுதீஷ் கட்சியின் ஆரம்பத்தில் இருந்து உழைக்கவில்லையா? தே.மு.தி.க. தொண்டர்களின் விருப்பத்தின்பேரில் விஜயபிரபாகரன் கடந்த தேர்தலில் போட்டியிட்டார். சுதீஷ், விஜய பிரபாகரன் தவிர வேறு யார் எங்கள் குடும்பத்தில் இருந்து கட்சியில் இருக்கிறார்கள்? கட்சியின் தொடக்கம் முதல் உழைத்த சுதீசுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக தகுதி இல்லையா? விமர்சிப்பவர்கள் விமர்சித்துக்கொண்டே தான் இருப்பார்கள். சுதீஷ் தொடங்கி கட்சியில் உள்ள அனைவரும் எனக்கு…

Read More

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி  வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மக்களிடையே கவலை எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போரினால், உலகின் முக்கிய எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் வருவது தடைபட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி (LNG) விநியோகஸ்தரான கத்தார், தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனால் எல்.பி.ஜி  மற்றும் எல்.என்.ஜி விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்குத் 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் 25 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல்/டீசல் இருப்பு தற்போது உள்ளது. இந்தியா தனது எரிசக்தி விநியோகத்தை பல நாடுகளிடமிருந்து…

Read More

இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், அவரது தோழி சானியா சந்தோக்கிற்கும்  இன்று (மார்ச் 5) மும்பையில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. மும்பையின் நட்சத்திர ஹோட்டலான ‘தி செயின்ட் ரெஜிஸில்’ (The St. Regis) நடைபெற்று வரும் இந்த திருமண விழாவில் கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். எம்.எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி, கௌதம் கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச், ஹர்பஜன் சிங் மற்றும் கீதா பாஸ்ரா, ஜாகீர் கான் மற்றும் சாகரிகா கட்கே, இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் குடும்பத்தினர். https://x.com/WorshipDhoni/status/2029448062280839548? குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர ஜோடிகளாக தோன்றி அனைவரின் கவனத்தையும் தோனி தம்பதியர் ஈர்த்துவிட்டனர். ஒரே மாதிரி மேட்ச்சிங் உடையில் வந்த தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் போட்டோக்களை ரசிகர்கள் அதிகளவில் ஷேர்…

Read More

சென்னையில் கண் தொற்றுநோய்களில் ஒன்றான ‘மெட்ராஸ் ஐ’ (Conjunctivitis) பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக Government Ophthalmic Hospital Egmore உட்பட பல தனியார் கண் மருத்துவமனைகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வருகை கடந்த சில நாட்களாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. காலநிலை மாற்றம், தூசி மாசு மற்றும் வைரஸ் பரவல் போன்ற காரணங்கள் இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். மெட்ராஸ் ஐ என்பது கண் விழி மற்றும் இமைப்பகுதியை இணைக்கும் மென்மையான படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றாகும். இந்த தொற்று மிகவும் எளிதில் பரவக்கூடியது. காற்றின் மூலம் மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினாலும் நோய் பரவ வாய்ப்பு அதிகம் என கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக கண்களில் எரிச்சல், சிவப்பு நிறம் தோன்றுதல், தொடர்ந்து நீர் வடிதல் மற்றும் காலை எழும்போது இமைகள் ஒட்டிக்கொள்வது போன்றவை காணப்படும்.…

Read More

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் சுஷ்ருத் சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார் 1966ல் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிறந்த இவர், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, மத்திய பிரதேச ஐகோர்ட்டில் 24 ஆண்டுகள்(1992 முதல்) வழக்கறிஞராக இருந்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 2018ல் மத்தியப்பிரதேச ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாகி, 2025ல் கேரளா ஐகோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டார்.

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல்  கருத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் நிலவி வரும் ராணுவ மோதல்கள் எந்தவொரு பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வாக அமையாது என்று அவர் வலியுறுத்தினார். உக்ரைன் மற்றும் ஈரான் விவகாரங்களில் அனைத்து நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை எட்ட முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்புடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நீண்டகால அமைதி முயற்சிகளுக்கு இரு நாடுகளும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஈரான் மோதலை நிறுத்தவேண்டும். மோதல்களை ராணுவ நடவடிக்கைக்கு பதிலாக…

Read More