Author: Editor web3

மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.  சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படியில்  திமுக   4  உறுப்பினர்களையும் அதிமுக 2 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய முடியும். மேலும்  மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் அதிமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்…

Read More

திமுக – காங்கிரஸ் இடையே 2026 ஆம் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. தமிழ் நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. 2021 ஆம் தேர்தலில் திமுக கூட்டணில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் பேட்டியிட்டது. 2026 ஆம் தேதலுக்கான தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கூடுதலான தொகுதிகள் கோரியதாகவும் அதற்கு திமுக உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் விஜயின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் படி திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்காசியாவில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கமேனிக்குப் பிறகு ஈரானின் அடுத்த உச்ச தலைவராகப் பொறுப்பேற்கும் எவரும் இஸ்ரேலின் இலக்காகவே இருப்பார்கள் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் எந்தவொரு தலைவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. அவர் யாராக இருந்தாலும், எங்கு பதுங்கியிருந்தாலும் அவரை அழிப்பதே எங்களின் நோக்கம்” என்று இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் இணைந்து ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்கும் ‘ஆபரேஷன் லயன்ஸ் ரோர்’ (Operation Lion’s Roar) திட்டத்தின் கீழ் இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரேலிய ராணுவத்திற்கு  உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த…

Read More

2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறிய “மைதானத்தை அமைதிப்படுத்துவோம்” என்ற அதே பாணியில், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரன் தற்போது இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பை 2026-ன் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை (மார்ச் 5) மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி தனது ஆக்ரோஷமான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. சாம் கரன் கூறியது என்ன?: “இந்தியாவில், இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சவாலானது. வான்கடே மைதானம் இந்திய ரசிகர்களால் நிரம்பி வழியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அந்தப் பெரும் கூட்டத்தை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு. கடந்த முறை பேட் கம்மின்ஸ் செய்ததைப் போலவே, நாங்களும் இந்திய ரசிகர்களை மௌனமாக்கத் தயாராக இருக்கிறோம்,” என்று சாம் கரன் தெரிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் கூடியிருந்த…

Read More

இந்திய உணவில், குறிப்பாக வட இந்தியாவில் சப்பாத்தி (ரொட்டி) என்பது பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். இது செரிமானத்திற்கு எளிதானது மற்றும் சமச்சீரான உணவு என்று நாம் நம்புகிறோம். ஆனால், கோதுமையை அதிகமாக உட்கொள்வது சில ஆரோக்கியக் கேடுகளை விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நிபுணர்கள் கூறுவது என்ன? குருகிராம் பகுதியைச் சேர்ந்த எலும்பியல் நிபுணர் டாக்டர் மனு போரா (Dr. Manu Bora), கோதுமை குறித்து ஒரு மாற்றுக்கருத்தை முன்வைத்துள்ளார். அவரது கூற்றுப்படி, “உணவில் மிக மோசமான ஒரு பொருள் இருக்குமானால் அது கோதுமையாகத்தான் இருக்க முடியும்.” பெரும்பாலான மக்கள் இனிப்புகளை தினமும் சாப்பிடுவதில்லை, ஆனால் கோதுமையை அன்றாட உணவில் ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள். இது உடல் எடை அதிகரிப்பதற்கும், வளர்சிதை மாற்றப்   பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறுகிறார். தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் கோதுமை பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட (Processed) அல்லது சுத்திகரிக்கப்பட்ட (Refined) வடிவிலேயே உள்ளது. இது உடலில்…

Read More

ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவராக 1989-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த ஆயத்துல்லா அலி கமேனி, கடந்த சனிக்கிழமை தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவிருந்த நிலையில், தற்போது அந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி மசூதியில் தொடங்கவிருந்த இந்த நிகழ்வு, பாதுகாப்பு காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதால், ஈரானிய மக்கள் மற்றும் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டதற்குப் பின்னால் கடுமையான பாதுகாப்பு காரணங்கள் இருப்பதாக ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஐந்தாவது நாளாகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் மீண்டும் வான்வழித்…

Read More

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பரவியுள்ளது. இலங்கை கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்த ஈரானிய கப்பல் ஒன்றின் மீது, அடையாளம் தெரியாத நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்தது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 101 பேர் மாயமாகியுள்ளனர் என்றும், 78 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளன. தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்து தப்பித்தவர்களை மீட்க இலங்கை கடற்படை தீவிரமான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. காயமடைந்த 78 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயமான 101 பேரின் நிலை என்னவென்று தெரியாததால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதல் இலங்கை எல்லைக்கு மிக அருகாமையில் நடந்துள்ளதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சர்வதேச கடல் வழித்தடத்தில்…

Read More

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த ரயில் நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயில் என்பதை இந்தி வார்த்தையில் “கர்தவ்ய த்வார்” குறிப்பிடுகின்றனர். இதனை, கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர். அலுவலக நுழைவாயில் என்பதை தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ள ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, தி.மு.க.வினர், காவல் துறையினரின் அனுமதி இல்லாமல் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தடையை மீறி பேரணியாக சென்று…

Read More

மேற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமான சூழலில், அங்கு வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ஒரு பிரத்யேகக் கட்டுப்பாட்டு மையம் (Special Control Room) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் அவர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். உதவி எண்கள் மற்றும் தொடர்பு விவரங்கள்: பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை கீழ்க்கண்ட எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்: இலவச அழைப்பு எண் (Toll Free): 1800-11-8797 தொலைபேசி எண்கள்: +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905 வாட்ஸ்அப் எண்: +91-9968291988 மின்னஞ்சல்: situationroom@mea.gov.in…

Read More

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே கோட்ட அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது தமிழகத்தின் மொழி பற்றுக்கும், மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்திற்கும் நேரடியான அவமதிப்பாகும். தமிழ்நாடு என்பது ஆயிரம் ஆண்டுகள் பழமையான மொழி பாரம்பரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொண்ட நிலம். இத்தகைய மாநிலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் அரசுத் துறைகளில் இந்தி பெயர்களை முன்னிறுத்துவது, மொழி ஆதிக்கத்தை திணிக்க முயலும் அரசியல் நோக்கத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. நாடு முழுவதும் பல்வேறு மொழிகள், பண்பாடுகள் உள்ள சூழலில் ஒரு மொழியை மட்டும் மேலோங்கச் செய்யும் முயற்சி இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பலவகை மொழிகளை மதிக்க வேண்டிய ஒன்றிய அரசு, அதை பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் உணர்வுகளையும், தமிழின் மாண்பையும் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே இந்தி பெயரை உடனடியாக நீக்கி அதற்குப் பதிலாக தமிழில் பொருத்தமான…

Read More