Author: Editor web3

இந்தியப் பெருங்கடலில் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்தியக் கடற்கரைக்கு மிக அருகிலேயே இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு விடப்பட்ட எச்சரிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “போர் இப்போது இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டது” என்று கூறிய அவர், இந்த இக்கட்டான சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில், ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது., ”உலகமே நிலையற்ற கட்டத்துக்கு நுழைந்துள்ளது. கொந்தளிக்கும் சூழல் நிலவுகிறது. இந்தியாவின் எண்ணெய் விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நமது இறக்குமதியில் 40 சதவீதம் ஹார்முஸ் நீர்வழிப் பாதை வழியாகவே வருகின்றன. எல்பிஜி மற்றும் எல்என்ஜி நிலைமையும் மோசமாக உள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி…

Read More

பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் மற்றும் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகியது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். நிதிஷ் குமாரின் இந்த முடிவு, கூட்டணி அரசியலில் நம்பகத்தன்மை குறித்த விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், இதனைத் தமிழக அரசியலோடு ஒப்பிட்டு அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி விளைவு அதிமுகவை விழுங்கி பாஜக தமிழகத்தில் காலூன்ற தான் என பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டு இருந்தன. ஆனால் அவற்றை மறுத்து எடப்பாடி பழனிச்சாமி என்.டி.ஏ கூட்டணியோடு தொடர்ந்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில்தான் மாநிலங்களவை எம்பி -யாக போட்டியிடுவதற்காக பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். ஒருவேளை அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் பீகாரின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் அப்போது தானாக பாஜகவின் சட்டமன்ற…

Read More

பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடரவுள்ளதாகவும் கூறியுள்ளார். பீகார் மாநில அரசியலில் பெரும் திருப்பமாக, முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் விலகியுள்ளார். அவர் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட இன்று (மார்ச் 5) மனுத்தாக்கல் செய்யவுள்ளதால், தனது பதவியைத் துறக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகாரின் நீண்டகால முதலமைச்சராகப் பணியாற்றிய நிதிஷ் குமார், தேசிய அரசியலில் தடம் பதிக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது நிதீஷ் குமார் இதனை உறுதி செய்துள்ளார். பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாகிய நீங்கள் எனக்கு தொடர்ந்து நம்பிக்கையையும் ஆதரவையும் அளித்து வருகிறீர்கள். இதனாலே பிகார் மக்களுக்கு நாங்கள் உண்மையாக நேர்மையாக சேவை செய்து வருகிறோம். உங்களுடைய நம்பிக்கை, ஆதரவின்…

Read More

2026 மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார். இதில் தமிழ்நாடு, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், அரியானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகியான கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் காலியாகும் இடங்களுக்கு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வேம் நரேந்திர ரெட்டி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இமாச்சல பிரதேசத்தில் அனுராக் சர்மாவும், அரியானாவில் கரம்வீர் சிங்கும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை பூலோதேவி நேதம் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனுபவம் மற்றும் கட்சியின் விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை மேலிடம் இறுதி செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக…

Read More

2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், வெறும் 33 பந்துகளில் சதமடித்து டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். டி20 உலகக்கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர்களின் பட்டியல் இதோ: ஃபின் ஆலன் (நியூசிலாந்து) – 33 பந்துகள்: 2026-ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தச் சாதனையைப் படைத்தார். கிறிஸ் கெய்ல் (மேற்கிந்தியத் தீவுகள்) – 47 பந்துகள்: 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் இந்தச் சாதனையைச் செய்திருந்தார். கிறிஸ் கெய்ல் (மேற்கிந்தியத் தீவுகள்) – 50 பந்துகள்: 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்திலேயே தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தச் சாதனையைப் படைத்தார். ஹாரி புரூக் (இங்கிலாந்து) -…

Read More

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா இந்தியத் துறைமுகங்கள் அல்லது கடற்படைத் தளங்களைப் பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை  வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்தச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின் ‘ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்’ (OANN) என்ற செய்தி நிறுவனத்தில், அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்கிரேகர் அளித்த பேட்டியொன்றில், அமெரிக்காவின் தளங்கள் அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் இந்தியத் துறைமுகங்களைச் சார்ந்து இருப்பதாகக் கூறியிருந்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள  வெளியுறவு அமைச்சகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு (MEA FactCheck), “இந்தியத் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை பயன்படுத்துவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் போலியானவை. இத்தகைய அடிப்படையற்ற கருத்துக்களை மக்கள் நம்ப வேண்டாம்” என்று எச்சரித்துள்ளது. இந்தியா எப்போதும் இந்தப் போரில் நடுநிலை வகிப்பதாகவும், எக்காரணம்…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்பரப்புக்கு அருகே சென்று கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கையின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் கப்பலில் இருந்த 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 180 பேருடன் பயணித்த ‘ஐரிஸ் தேனா’ (Iris Dena) என்ற அந்தப் போர்க்கப்பல், சர்வதேச கடல் பகுதியில் தற்காப்பு நிலையில் இருந்தபோது அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி நாட்டுக் கப்பலை டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழிப்பது இதுவே முதல் முறை என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலின் வீடியோ காட்சிகளையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. https://x.com/ANI/status/2029205577847730543? சம்பவம் நடந்த இடத்திலிருந்து இதுவரை…

Read More

2026ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக சார்பில் பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 2026, மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக-விற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேமுதிக சார்பில் கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில், எல்.கே. சுதீஷ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் மேலவையில் தேமுதிக தனது பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே. சுதீஷ், இதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார். இந்த அறிவிப்பு தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கட்சிக்குக் கிடைத்துள்ள முக்கிய…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, துபாயிலிருந்து இயக்கப்படும் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான பயணிகள் துபாய் விமான நிலையங்களிலும், தங்குமிடங்களிலும் தவித்து வருகின்றனர். போர் சூழல் எப்போது தணியும், மீண்டும் எப்போது விமானங்கள் இயக்கப்படும் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லாததால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரும் கடும் அச்சத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், ‘ஏழைகளின் பங்காளன்’ என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் சோனு சூட் மீண்டும் தனது மனிதாபிமான முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். துபாயில் சிக்கித் தவிக்கும் பயணிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிப்பதைக் கண்டு மனமுடைந்த அவர், அவர்களுக்குத் தேவையான தங்கும் வசதி மற்றும் உணவுப் பாதுகாப்பை வழங்க முன்வந்துள்ளார். “யாரும் அச்சப்பட வேண்டாம், நாங்கள் இருக்கிறோம்” என்ற நம்பிக்கையை அவர் தனது…

Read More

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என்ற இந்தி வார்த்தை தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், மறைமுக இந்தி திணிப்பு என மத்திய அரசையும், ரயில்வே நிர்வாகத்தினரையும் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அங்கு தமிழ், இந்தி, ஆங்கிலம் வடிவில் எழுதப்பட்டிருந்த இந்தி வார்த்தை அகற்றப்பட்டுள்ளது. அங்கு தமிழ் மொழியில் பெயர்ப் பலகை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும் – அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள்! டெல்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே OutOfControl-தான்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More