Author: Editor web3

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பலத்தின் அடிப்படையில், ஆளும் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதியாகியுள்ளது. திமுக தரப்பில் மூத்த தலைவர் திருச்சி சிவா மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பு அணிச் செயலாளர் ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸிற்கு ஒரு இடமும், தேமுதிகவிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காங்கிரஸ் சார்பில் எம். கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில், அதிமுக…

Read More

தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இன்று (மார்ச் 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  ஒவ்வொரு கட்சியாக அழைத்து முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொகுதி பங்கீடு பேச்சு வார்தை குழுவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து நாங்கள் அவர்களிடம் பேசுவோம். குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் எங்கெல்லாம் கடுமையான போட்டி இருக்குமோ அதையெல்லாம் திமுக எடுத்து எதிரணியில் உள்ளவர்களைத் தோல்வியடையச் செய்து வெற்றி கண்டிருக்கிறார். இது என் அரசியல் களத்தில் முதல் அனுபவம்.முன்பெல்லாம் எங்கு பிரச்சினை இருக்கிறதோ அதை வந்து கூட்டணி கட்சிக்குக் கொடுப்பார்கள். ஆனால் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பொது வாழ்க்கையில் இருக்கிறேன். தமிழ்நாட்டு அரசியலில் நான் பார்த்ததில் முதல் முறையாக நான் கண்டது – நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிந்தவுடன் அவரே அழைத்து,…

Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஓபிஎஸ்-ன் மகனும், முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் குமார், தனது தந்தைக்காகப் போடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். அத்துடன், ரவீந்திரநாத் தாமே போடி, கம்பம் அல்லது ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடவும் விருப்ப மனு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டத்தின் மற்ற 3 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற போதிலும், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபித்து வெற்றி பெற்றார். தற்போது அவர் திமுகவுடன் இணைந்துள்ள நிலையில், அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தனது சொந்த ஊர் மற்றும் சமூக மக்கள், உறவினர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி என்பதால், அங்குப் போட்டியிடுவதே பாதுகாப்பானது என ஓபிஎஸ் தரப்பு கருதுகிறது.…

Read More

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் தரப்பு தற்போது அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள விரும்புவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். இருப்பினும், ஈரானின் இந்த கோரிக்கை “சற்று தாமதமானது” என்று குறிப்பிட்ட அவர், “தற்போது அவர்களை விட நாங்களே (அமெரிக்கா) போரிட அதிக ஆர்வமாக உள்ளோம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவம் “அற்புதமான” இஸ்ரேலியப் படைகளுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்   கட்டமைப்புகளை “ஒவ்வொரு மணி நேரமும்” அழித்து வருவதாகத் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன்டர் மியாமி கால்பந்து அணியினருடன் (Inter Miami soccer team) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ஈரான் தற்போது அமெரிக்காவைத் தொடர்புகொண்டு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். “அவர்கள் எங்களை அழைத்து, எப்படி ஒரு ஒப்பந்தம் செய்வது என்று கேட்கிறார்கள். ஆனால், நான்…

Read More

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில், வருகிற மார்ச் 8, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஐசிசி (ICC) அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் BookMyShow தளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் விலையானது இருக்கை வசதிக்கு ஏற்ப ரூ.2,000 முதல் ரூ.75,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவான இருக்கைகள் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையிலும், பிரீமியம் மற்றும் கிளப் லெவல் இருக்கைகள் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையிலும், சொகுசு அறைகள் ரூ.50,000-க்கும் அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. அதிக தேவை காரணமாக, பெரும்பாலான டிக்கெட் பிரிவுகள் தற்போது விற்றுத் தீர்ந்துவிட்டன. பொதுவாக, சில டிக்கெட்டுகள் முக்கிய போட்டிகளுக்கு 24 முதல் 48 மணி நேரத்திற்கு முன்பு மீண்டும் வெளியிடப்படும். மும்பையில் நடந்த அரையிறுதிப் போட்டியின் போதும் இதுவே நடந்தது.…

Read More

திருச்சி எப்போதும் தமிழக அரசியலின் திருப்புமுனை மையமாகப் பார்க்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் அங்கு அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவின் 12-வது மாநில மாநாடு வருகிற மார்ச் 9ம் தேதி திருச்சியை அடுத்த சிறுகனூரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. “ஸ்டாலினே தொடரட்டும் – தமிழகம் வெல்லட்டும்” என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக 400 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மேடை மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுகவின் இந்த மாநாடு முடிந்து சில நாட்களிலேயே, அதே திருச்சி மண்ணில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது மாநில மாநாட்டை நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் தொடக்கத்திலோ இந்த மாநாடு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விக்ரவாண்டி மற்றும்…

Read More

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவிடம் பேசிவரும் மக்கள் நீதி மய்யம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா? அல்லது டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதா? என குழம்பிப்போய் உள்ளதாம். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினருடன், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, பொதுசெயலர் அருணாசலம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சந்திப்பின் போது, 12 தொகுதிகளின் பெயர் கொண்ட விருப்ப பட்டியலை வழங்கியுள்ளனர். மநீம கட்சி கடந்த 2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது. அதற்கு கைமாறாகவே கமலுக்கு ராஜ்யசபா ‘சீட்’ வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலை பொறுத்தவரை வரும் 2026 சட்டசபை தேர்தலில் தான் முதல் முறையாக திமுக கூட்டணியில் மநீம போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு வேளச்சேரி, கோவை தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘டார்ச் லைட்’ சின்னத்தை ம.நீ.ம., கட்சிக்கு தேர்தல் கமிசன் ஒதுக்கியுள்ளதால்…

Read More

தவெகவுடன் கூட்டணி அமைக்கலாமா? என்றிருந்த எண்ண ஓட்டத்தை திசை திருப்பி, திமுகவோடே இருக்கலாம் என்ற நிலைக்கு ராகுலை கொண்டு வர கார்கே என்ன விடயத்தை பயன்படுத்தினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் 2016-ல் போட்டியிட்டது போல் 41 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் தர வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதமாக இருந்த நிலையில், அதனை மையப்படுத்தி திமுக கூட்டணியில் இழுபறியம் சலசப்பும் நிலவி வந்தது. காங்கிரசின் கோரிக்கைகளை நிராகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது” என ஒரே போடாக போட்டார். மறுபுறம், “தமிழகத்தில் போதிய கட்டமைப்பு இல்லாத சூழலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் அது அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுத்துவிடும் என திமுகவினர் முட்டி மோடி வந்தனர். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற சட்டசபை தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். அதன் வெளிப்பாடாகவே, காங்கிரசும்…

Read More

அசாம் மாநிலத்திலிருந்து நேற்று மாலை புறப்பட்ட இந்திய விமானப்படையின் சுகோய் சு-30எம்கேஐ (Sukhoi Su-30MKI) போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 7 மணியளவில் கர்பி அங்லாங் பகுதியில் உள்ள சோகிஹோலா அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்து மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானப்படை அதிகாரிகள், உடனடியாக தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் தேடுதல் பணிகள் நடைபெற்ற நிலையில், அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கு அருகிலேயே விழுந்து நொறுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் கடினமான நிலப்பரப்பு கொண்ட பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த திறமையான போர் விமானிகளான அனுஜ் மற்றும் பூர்வேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மறைவு இந்திய விமானப்படைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. இந்தக் கொடூர விபத்துக்கான காரணம்…

Read More

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது நகை வாங்குபவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இன்று (மார்ச் 6) தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.14,960 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,280 குறைந்து ரூ.1,19,680 ஆகவும் விற்பனையாகிறது. விலையின் இந்த திடீர் சரிவு நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து கொண்டே வந்துள்ளது. வாரத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரை மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.6,520 வரை குறைந்துள்ளது. தொடர்ந்து பல நாட்களாகத் தங்கம் விலை சரிவைச் சந்தித்து வருவது, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பண்டிகை காலம் மற்றும் சுப காரியங்களுக்காகத் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள், தற்போதுள்ள விலை குறைவைச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின்…

Read More