Author: Editor web3
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் போர் பதற்றம் காரணமாக, அங்கு வசித்து வந்த இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை சுமார் 52,000 இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்துள்ளன. வணிக ரீதியிலான விமானங்கள் மட்டுமின்றி, தேவைப்படும் இடங்களில் சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். போர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்துள்ளன. இந்தியர்களின் பாதுகாப்பிற்குத் தங்களின் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், எஞ்சியுள்ள இந்தியர்களையும் தாயகம் அழைத்து வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய…
மத்திய கிழக்கில் தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் போர் உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் இராணுவ நடவடிக்கை நிலைமையை இன்னும் ஆபத்தானதாக மாற்றியுள்ளது. இதற்கிடையில், தொடர்ச்சியான இராணுவ அழுத்தங்களுக்குப் பிறகு, ஈரான் அதன் அண்டை நாடுகளுக்கு பணிந்து, எந்தத் தாக்குதலும் இல்லை என்று உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஒரு சமூக ஊடகப் பதிவில், ஈரான் வளைகுடா நாடுகளைத் தாக்க மாட்டோம் என்று உறுதியளித்ததாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் டிரம்ப் கூறினார். இருப்பினும், இந்த மோதல் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த மோதல் அதிகரித்தால், அது உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் இரண்டையும் பாதிக்கக்கூடும் என்றும் பல நாடுகளின் தலைவர்கள் கவலை கொண்டுள்ளனர். எனவே, முழு மத்திய…
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) தகவல்படி, முதல் நிலநடுக்கம் நேற்று (மார்ச் 7) நள்ளிரவு 11:55 மணியளவில் மேற்கு காமெங் பகுதியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 8) அதிகாலை 1:10 மணியளவில் மீண்டும் அதே பகுதியில் 2.7 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டது. சில மணி நேரங்களிலேயே, இன்று அதிகாலை அருணாச்சல பிரதேசத்தின் பிச்சோம் (Bichom) பகுதியில் 2.8 ரிக்டர் அளவில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் குறைந்த ஆழத்திலேயே (சுமார் 5 கி.மீ முதல் 10 கி.மீ வரை) ஏற்பட்டுள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதமோ அல்லது பெரிய அளவிலான சொத்துச்…
புராணக் கதைகள் மற்றும் சில வரலாற்றுப் பதிவுகள், போர்கள் வெடிப்பதற்குக் காரணமே பெண்கள்தான் என்ற தவறான பிம்பத்தைச் சமூகத்தில் கட்டமைத்துள்ளன. ஆனால், உண்மையில் கோடிக்கணக்கான உயிர்களைக் பலிவாங்கும் உலகப்போரை நிறுத்தி, அமைதியை நிலைநாட்டப் பெண்கள் முன்னெடுத்த வீரம் செறிந்த போராட்டங்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. குறிப்பாக, 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் நடத்திய புரட்சி, முதல் உலகப்போரின் போக்கையே மாற்றியமைத்தது. 1917-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி (பழைய ரஷ்ய நாட்காட்டியின்படி பிப்ரவரி 23), முதல் உலகப்போரின் உச்சகட்ட நெருக்கடியில் ரஷ்யா சிக்கியிருந்தது. பசி, பட்டினி, வறுமை மற்றும் எல்லையில் உயிரிழக்கும் வீரர்கள் என நாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ரஷ்யப் பெண்கள், பெட்ரோகிராட் நகரின் தெருக்களில் திரண்டனர். “Bread and Peace” என்ற முழக்கத்துடன் அவர்கள் நடத்திய வேலைநிறுத்தம் மற்றும் போராட்டம், ஜார் மன்னரின் ஆட்சிக்கு முடிவு கட்டியதோடு, உலகப்போர் நிறுத்தப்படுவதற்கான…
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், கூட்டணி விவகாரங்களில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காணாதது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பவர் ஷேரிங்’ (ஆட்சியில் பங்கு) என்ற கவர்ச்சிகரமான வாய்ப்பை முன்னிறுத்தியும், பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை தவெக பக்கம் வராதது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய், மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்த தெளிவான முடிவு எட்டப்படாதது அக்கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தவெக மாநாட்டிற்குப் பிறகு விஜய்க்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் “நம்ம வீட்டுப் பிள்ளை” எனப் பாராட்டிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தற்போது மாற்று அணிகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக, தேமுதிக தரப்பு திமுக தலைமையிலான அணியுடன் இணக்கமான போக்கைக்…
அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த முக்கியமான ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தொடரில் சில வீரர்களின் பார்ம் கவலையளிக்கும் வகையில் இருந்தாலும், இறுதிப்போட்டி போன்ற பெரிய ஆட்டத்தில் அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, 7 இன்னிங்ஸ்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மற்றும் சமீபத்திய போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை அணியில் தொடரச் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும், வருண் சக்கரவர்த்தி மீதே தான் நம்பிக்கை வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். “அபிஷேக் மற்றும் வருண் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாவிட்டாலும், இந்த…
திருச்சி சிறுகனூரில் நாளை நடைபெறவுள்ள திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாட்டில், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு திமுகவின் தேர்தல் வெற்றிக்கான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அமைச்சர் கே.என்.நேரு முன்னின்று கவனித்து வருகிறார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த மாநாடு அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான நகைக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு சிலிண்டர் மானியம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்…
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, சிலிகுரியில் நடைபெற்ற 9-வது சர்வதேச ஆதிவாசி சந்தால் மாநாட்டிற்கு ஜனாதிபதியை அழைத்தது ஒரு தனியார் அமைப்பு (சர்வதேச சந்தால் கவுன்சில்). இது அரசு நிகழ்ச்சி அல்ல. ஜனாதிபதி வருகையின் போது சிலிகுரி மேயர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் அவரை முறையாக வரவேற்று வழிஅனுப்பி வைத்தனர். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் எவ்வித பாதுகாப்பு அல்லது புரோட்டோகால் விதிமீறல்களும் நடைபெறவில்லை. நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஜனாதிபதியை, பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காகவும், கட்சி அஜெண்டாவிற்காகவும் தவறாகப் பயன்படுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது ஜனாதிபதி பதவியை அவமதிக்கும் செயலாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்து ஜனாதிபதி ஏன் கேள்வி…
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து தெரிவித்த சில கருத்துக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் சாந்தால் மாநாடு நடைபெற்றது. இதில் திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி முதலில் பிடாநகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி கோஷிபுர் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால், பழங்குடியின மக்கள் அதிகம் பேர் இதில் பங்கேற்கவில்லை. இதனைக் கவனித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஏன் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டது? என் மீது மம்தா பானர்ஜி அதிருப்தியில் உள்ளாரா? மம்தா பானர்ஜியோ அல்லது அமைச்சரவை சகாக்களோ என்னை வரவேற்க வரவில்லையே என்று சுட்டிக்காட்டி பேசினார். https://x.com/narendramodi/status/2030288345432244576? இந்தநிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவை மம்தா பானர்ஜி அவமதித்ததாகக் கூறி, அதை “வெட்கக்கேடானது” மற்றும் “இந்திய அரசியலில் முன்னெப்போதும்…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடும் இந்த நாள், பாலின சமத்துவம், உரிமைகள் மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்துகிறது. 1900-களின் முற்பகுதியில் தொடங்கி, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், உலகம் முழுவதும் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தை நினைவு கூர்கிறது. இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “வெல்லும் தமிழ்ப் பெண்களே… தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன் நிற்க நமது திராவிடமாடல் அரசு இருக்கிறது… அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்”! என்று பதிவிடப்பட்டுள்ளது.