Author: Editor web3
பாஜக அரசின் இந்தித் திணிப்பு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “பாஜக அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பாஜக! ‘மொழி ஒன்று – வரிவடிவம் மூன்று’ எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு! திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயரைத் திணித்து விட்டனர். குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ ஆகிவிட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத்…
தஞ்சை கூட்டத்தில் பேசிவரும் தவெக தலைவர் விஜய், தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை என பேசியுள்ளார். திமுகவை தொடர்ச்சியாக 2வது முறை ஆட்சிக்கு கொண்டுவர கருணாநிதியால் கூட முடியவில்லை என்ற அவர், நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என தெரிந்தே திமுக வாக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மோசடி ஆட்சியில் முன்மாதிரியான ஆட்சி; முக்கியமான ஆட்சி என திமுக அரசு மீது கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். மேலும் மணலைக் கொள்ளை குறித்து பேசி அவர், மணல் மாஃபியாவுடன் திமுகவுக்கு உறவில்லை என்று சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும் ஒட்டுமொத்தமாக இந்த முதல்வரின் ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப் போகிறது என்று கூறினார். மேலும் சமீப காலமாக விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக தவெகவினர் சொல்கின்றனர். இதற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய், தன்னை முடக்கிவிடலாம்…
தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பேசிய விஜய், முதல்வரின் மனநிலை தற்போது எப்படி இருக்கும் தெரியுமா? ஏற்கெனவே கட்சிகாரங்க தூங்க விடுவதில்லை. தற்போது விஜய்யும் மக்கள் சக்தியுடன் வந்து தூங்க விடுவதில்லை. மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறார். ரூ.1000-க்கு பதிலாக ரூ. 5,000 கொடுத்தால் அதையும் கேள்வி கேட்கிறார்கள். விசில் சப்தம் வேற விண்ணை எட்டுகிறது. கூட்டணி கட்சிகள் தொல்லை வேற தாங்க முடியவில்லை. இந்த விஜய்யை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற விஜய்யை முடக்க முடியாது. உங்க அப்பாவுக்கு வெண்கல சிலை வைக்க நினைத்தபோது, மக்கள் பணத்தில் யாருக்கு புகழ் பாடப் பார்க்கிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்டது. அதற்கு அர்த்தம் ஊரான் வீட்டு நெய்யில் இனிப்பு செய்யாதீங்க என்பது தான். மக்கள் பிரச்னைக்கு நிதியில்லை, இதற்கு மட்டும் எங்கிருந்து வந்தது. மக்கள் பிரச்னையை முதலில் பாருங்கள். சிலையை எல்லாம் பிறகு பார்க்கலாம்.…
தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் நடைபெறும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஜனநாயகன் பட சென்சார் சர்ச்சை குறித்து முதல்முறையாக மவுனம் கலைத்து பேசினார். அப்போது கரூர் விவகாரம் முதல் ஜனநாயகன் வரை தன் மீது பழி மேல் பழி போடப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சனையில் தனக்காக ஆதரவு குரல் கொடுத்தவர்களுக்கும், முக்கியமாக பூசி மெழுகி குரல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மீனவர்கள் கைது செய்யப்பட்டால் பிரதமர் மோடி கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்க சென்றுவிடுவார் ஸ்டாலின் என விஜய் கிண்டலடித்துள்ளார். மீனவர்கள் விவகாரத்தில் மானே, தேனே, பொன்மானே என கடிதம் எழுதாமல் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை தேவை என்ற அவர், தான் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் மீது கைவைக்கவே முடியாது எனவும் உறுதியளித்துள்ளார். மேலும் திமுகவை மக்கள் வெறுத்துவிட்டதாகவும் கூறினார்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெக தலைவா் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த நிலையில் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு வந்தார். அப்போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பேசியவர், “தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். நான் என்ன பேசினாலும் அதை திரித்து பேசுகிறார்கள். திமுக ஒரு தீய சக்தி என்று சிறிய குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டனர். தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை…
திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறிக்கு மத்தியில், மூத்த காங்கிரஸ் தலைவர் பி. சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை ஆகியோர் செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதியும் கலந்து கொண்டார். 34 சட்டமன்ற இடங்களுக்கான காங்கிரஸின் கோரிக்கையை திமுக தலைமை ஏற்க விரும்பவில்லை என்றாலும் , இரண்டு மாநிலங்களவை இடங்களுடன் கூடுதலாக 29 இடங்களை வழங்க விருப்பம் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், திமுகவின் இருக்கை பங்கீட்டுக் குழு புதன்கிழமை இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸை அழைத்துள்ளதாக திமுக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திமுக அளித்திருக்கும் இந்த வாய்ப்பை உறுதிப்படுத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், கட்சி தற்போது இடங்களின் எண்ணிக்கையைச் சரிபார்த்து வருவதாகவும் இது குறித்த இறுதி முடிவுக்குக் கட்சியின்…
உலக உடல்பருமன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ‘வேர்ல்ட் ஒபிசிட்டி அட்லஸ்’ (World Obesity Atlas) அறிக்கையின்படி, சிறுவர்களிடையே நிலவும் உடல்பருமன் பிரச்சினையில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் சிறுவர்களிடையே உடல்பருமன் விகிதம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2040-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மட்டும் சுமார் 20 மில்லியன் (2 கோடி) குழந்தைகள் உடல்பருமன் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது. உலகம் முழுவதும் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கு மேல் (20.7 சதவீதம்) உடல்பருமன் அல்லது அதிக உடல் எடையுடன் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இது கடந்த 2010-ஆம் ஆண்டில் 14.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. போதிய உடற்பயிற்சியின்மை, மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவையே இந்த நிலைக்கு முக்கியக்…
சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. இதனிடையே நேற்று காலை தங்கம் விலை குறைந்திருந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,25,200-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,650-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.1,480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,23,720 -க்கும், கிராமுக்கு ரூ.185 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,465-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கும், சவரனுக்கு…
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அங்கு பணியில் இருந்த 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், அமெரிக்கா இதற்குப் பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதால் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போரில் உயிரிழந்த தங்களது முதல் துருப்புக்களின் பெயர்களை அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, குவைத்தில் உள்ள ஷுவைபா துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கட்டுப்பாட்டு மையத்தின் மீது ஈரானின் ‘ஆளில்லா விமானம்’ நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய கட்டளை…
ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உள்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை 787 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் மீது கடந்த சனிக்கிழமை அன்று முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களிலும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்றவை அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்துள்ளன. இந்தியாவும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஈரான் தனது தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதலைத் தொடர்ந்தது. மத்திய கிழக்கில் போர்பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய…