Author: Editor web3
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில், “நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள். இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள். இதே நாங்குநேரி தொடங்கி, தென்…
நாங்குநேரியில் டீக்கடையில் நின்றிருந்தவர்களை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. என்ன நடந்தது அங்கு..? கள தகவல்கள் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் இயங்கி வரும் ஒரு டீக்கடை முன்பு திங்கட்கிழமையான நேற்று இரவு சிலர் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவ்வழியே 3 இருசக்கர வாகனத்தில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலால் அங்கிருந்து பயந்து ஓடியவர்களை விடாமல் துரத்தி தாக்கியுள்ளது அந்த கொடூர கும்பல். சரமாரியாக தாக்கிய அந்த கும்பல் பின் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும், இதில் மாற்றுத்திறனாளி ஜான்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன. நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்! இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை…
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று (மார்ச் 2) பஹ்ரைன் மன்னர் மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, அந்த நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் வன்மையாகக் கண்டித்தார். இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா அந்த நாட்டு மக்களுடன் தோளோடு தோள் நின்று ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். தொடர்ந்து, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடனும் பேசிய பிரதமர் மோடி, அப்பகுதியில் வேகமாக மாறிவரும் சூழல்கள் குறித்து தனது கவலையைத் தெரிவித்தார். முதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் வான்வழித்…
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். உலக…
டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மத்திய உள்துறை அமைச்சரை நேற்று சந்தித்தேன். தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து கலந்து பேசினோம். தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விவாதித்தோம். சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எந்த ஒரு விவாதமும் செய்யவில்லை. எங்கள் கூட்டணி நிலையான, சுமுகமாக இருந்து கொண்டிருக்கின்றது. விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும். திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. காங்கிரஸ் அந்த கூட்டணியில் இருக்குமா? இல்லையா என்பது தொடர்பாக ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது. தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனால் என்ன அவசரம் இருக்கிறது. தொகுதி உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இப்போது இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டி20 சர்வதேச கேப்டனாக மாறியுள்ளார். வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் அவர் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை முந்தியுள்ளார். மார்ச் 2026 நிலவரப்படி, சூரியகுமார் யாதவ் 50 டி20 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார், 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றி சதவீதம் 81.25% ஆகும், இது குறைந்தது 50 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய எந்த இந்திய கேப்டனிலும் சிறந்தது. மறுபுறம், ரோஹித் சர்மா 62 போட்டிகளில் 50 வெற்றிகளைப் பெற்றுள்ளார், வெற்றி சதவீதம் 79.83% ஆகும். சிறந்த இந்திய டி20ஐ கேப்டன்கள் (குறைந்தபட்சம் 50 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ் – 50 போட்டிகள், 40 வெற்றிகள், 81.25 சதம் ரோஹித் சர்மா – 62 போட்டிகள், 50 வெற்றிகள், 79.83 சதவீதம் விராட் கோலி – 50 போட்டிகள், 30 வெற்றிகள்,…
தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், ஆளும் திமுக தரப்பு காங்கிரஸுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் (இன்று) இறுதி முடிவை எடுக்குமாறு திமுக அறிவுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 முதல் 28 சட்டமன்றத் தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா இடத்தையும் ஒதுக்க திமுக உறுதியாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்போ 34 தொகுதிகளுக்குக் குறைவாக எதையும் ஏற்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது இந்த விவகாரத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ராஜ்யசபா இடங்கள் மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்ய வேண்டியிருப்பதால், செவ்வாய்க்கிழமைக்குள் இது குறித்து முடிவெடுக்குமாறு காங்கிரஸ் மேலிடத்தை திமுக கேட்டுக்கொண்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 5-ம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்பாகவே கூட்டணியை உறுதி செய்ய திமுக விரும்புகிறது. காங்கிரஸ் தனது பதிலை இன்று மாலைக்குள் தெரிவிக்காவிட்டால், ராஜ்யசபா வேட்பாளர்களை திமுக தன்னிச்சையாக அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.…
தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் ராஜ்யசபா எம்.பி. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (மார்ச் 4) சென்னையில் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடுகள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் மனநிலை மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்து மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளை இபிஎஸ் கேட்டறிய உள்ளார். தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 5-ம் தேதி கடைசி நாள் என்பதால், நாளை நடைபெறும் கூட்டத்திலேயே வேட்பாளர் யார் என்பது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் அல்லது கட்சியின் மூத்த…
ஓமன் கடற்பரப்பில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் மேற்கு ஆசியப் பகுதியில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. “தாக்குதலுக்குள்ளான கப்பல்களில் ஒன்று மார்ஷல் தீவுகளின் கொடி ஏந்திய ‘MKD Vyom’ ஆகும். மஸ்கட்டில் இருந்து சுமார் 52 கடல் மைல் தொலைவில் இக்கப்பல் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, ஒரு ட்ரோன் படகு இக்கப்பலைத் தாக்கியதில், எஞ்சின் அறையில் தீ விபத்து மற்றும் வெடிப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்ததை ஓமன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.” ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த உயிர்ச்சேதத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்ய உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தால் கப்பலின் எஞ்சின்…