Author: Editor web3

இஸ்ரேல், அமெரிக்காவுடனான மோதலில், வளைகுடா நாடுகளில் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவது கவலையளிப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வருகை தந்துள்ள கனடா பிரதமர் கார்னியுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த பேச்சு வார்த்தை தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. பேச்சு வார்த்தைக்கு பின் இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய பிரதமர் மோடி கூறியதாவது, பல உலகளாவிய பதட்டங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. புது டெல்லி தொடர்ந்து அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுக்கிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அனைத்து தகராறுகளுக்கும் தீர்வு காண இந்தியா ஆதரவளிக்கிறது. வளைகுடா நாடுகளில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியா அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் சூழலில், லெபனானின் கிழக்கு பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு (Bekaa Valley) மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள பால்பெக் (Baalbek) பகுதியில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில் கட்டிடம் தரைமட்டமானது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவரான ஹுசைன் யாகி (Hussein Yaghi) கொல்லப்பட்டார். இவர் முன்னாள் ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் முகமது யாகியின் மகன் ஆவார். லெபனான் பாதுகாப்பு வட்டாரங்களின்படி, இந்தத் தாக்குதலில் 10 முதல் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பெய்ரூட் நகரின் தெற்கு பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல்…

Read More

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவைத் வான்பரப்பில் அமெரிக்காவின்F-15E ஸ்ட்ரைக் போர் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் விமானம் குவைத்தின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விமானத்தின் சிதறிய பாகங்கள் குவைத்தில் உள்ள ‘மினா அல் அஹ்மதி’ (Mina Al Ahmadi) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையப் பகுதியில் விழுந்தன. இதில் அங்கிருந்த தொழிலாளர்கள் இருவர் காயமடைந்ததாகத் தெரிகிறது. ஈரானின் அரசுச் செய்தி நிறுவனமான IRNA, அமெரிக்காவின் F-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் போர் விமானம் தீப்பிடித்து எரிந்தபடி சுழன்று கீழே விழுவது போன்ற காட்சிகள் உள்ளன. https://x.com/SputnikInt/status/2028335528945340517? விமானம் கீழே விழுவதற்கு முன்பே, அதிலிருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் பத்திரமாக குதித்தனர். அவர்கள் இருவரும் குவைத் அதிகாரிகளால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள்…

Read More

அமெரிக்காவுடனான போர் பதற்றம் மற்றும் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இருந்து ஈரான் விலகக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் சூழ்ந்துள்ளன. 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன. ஈரான் அணி தனது பிரிவில் உள்ள போட்டிகளை அமெரிக்க மண்ணிலேயே விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஈரான் அணி தொடர்ந்து நான்காவது முறையாக FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது, மேலும் அதன் அனைத்து குழு நிலை போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெறும். அந்த…

Read More

சனிக்கிழமை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை அமெரிக்காவும் இஸ்ரேலும் குறிவைத்து, அவரைக் கொன்றன. அப்போதிருந்து, ஈரான் பல வளைகுடா நாடுகளை குறிவைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் பல அமெரிக்க இராணுவத் தளங்கள் குறிவைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம், ஈரானில் இருந்து இதுவரை 165 பாலிஸ்டிக் மற்றும் இரண்டு கப்பல் ஏவுகணைகள் மற்றும் 541 ட்ரோன்கள் ஏவப்பட்டதாகக் கூறியது. பெரும்பாலான ஏவுகணைகள் வான் பாதுகாப்புப் படைகளால் இடைமறிக்கப்பட்டன, ஆனால் விழுந்த இடிபாடுகள் பல எமிரேட்ஸில் பொதுமக்கள் பகுதிகளை சேதப்படுத்தின. மூன்று பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்தாபியில் இடைமறிக்கப்பட்ட இடிபாடுகள் சர்வதேச விமான நிலையத்தில் ஒருவரைக் கொன்றன, மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனின் இடிபாடுகள் இஸ்ரேலிய தூதரகத்தைக் கொண்ட எதிஹாட் டவர்ஸ் வளாகத்தையும் சேதப்படுத்தின, மேலும் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை லேசான காயங்களுக்கு ஆளானார்கள். ஈரானிய ட்ரோனின் இடிபாடுகள் இரண்டு…

Read More

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவின் தல்லைமையகம் அறிவாலயத்தில் தேர்தல் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக விசிக வளர்ந்துள்ள நிலையில், அதற்கு ஏற்றாற்போல் கூடுதல் இடங்களைப் பெறுவது கட்சியின் வளர்ச்சிக்கு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். திமுக குழுவினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். 2026 தேர்தலானது வழக்கமான பொதுதேர்தல் அல்ல. வலது சாரி சக்திகளை காலுன்ற விடக்கூடாது. மதசார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு இடம் அளிக்க வேண்டும். மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடம் இல்லை. திமுகவுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை. எங்களுக்கான அதிகார பகிர்வு குறித்து கருத்துக்களை பகிர்ந்து…

Read More

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், வரும் நாட்களில் ஈரானுக்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தனக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார். இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலுடன் நேரடியாகக் கைகோர்த்துள்ளதாக நெதன்யாகு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக இஸ்ரேல் எதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததோ, அதைச் செய்து முடிப்பதற்கான தருணம் தற்போது வந்துள்ளதாக அவர் கூறினார். பிராந்தியத்தில் நிலவும் அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தங்களுக்கு எதிரான சக்திகளை முற்றிலும் முடக்கவும் அமெரிக்காவின் ஆதரவு தங்களுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளதாக அவர்…

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள நேரடி போர் பதற்றம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தங்கள் கவலையைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அரசும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் இந்த அசாதாரண சூழலால் இந்தியாவில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகமானது மாநிலங்களின் தலைமைச்…

Read More

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தையில் இன்று மிகப்பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை அவசர அவசரமாக விற்று வருவதே இந்த கடும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இந்த பதற்றத்தின் எதிரொலியாக, இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கிடுகிடுவென 1,000 புள்ளிகள் வரை சரிந்து 80,285 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இதற்கு இணையாக, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் சுமார் 300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,854.50 புள்ளிகளுடன் தனது வர்த்தகத்தை ஆரம்பித்துள்ளது. இதனால் சந்தையின் முன்னணி துறைகளைச் சேர்ந்த பல நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன. சந்தை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட இந்த அதிரடி சரிவினால்,…

Read More

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதலைக் கண்டித்து, சென்னையில் இன்று பெரும் போராட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரால் நகரின் முக்கியப் பகுதியில் பதற்றம் நிலவியது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தனியரசு மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் இந்த நடவடிக்கை உலகப்போருக்கு வித்திடும். இந்த விவகாரத்தில் இந்தியாவின் மௌனம் ஆரோக்கியமானது அல்ல” என்று கவலை தெரிவித்தார். போராட்டத்தை ஒட்டி 3 உதவி…

Read More