Author: Editor web3
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாகத் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 28) ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,200 உயர்ந்த நிலையில், இன்று வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில், பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறையானாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி வாரவிடுமுறையான இன்று தங்கம் கிராமுக்கு 225 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும் சவரனுக்கு 1800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200-க்கும் விற்பனையாகிறது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் போர் பதற்றம் காரணமாகச் சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாகவே இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்று ஒரு…
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். https://x.com/narendramodi/status/2027957728254300431? பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். இதேபோல், ஆளுநர் ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார். கனிமொழி எம்.பி.வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நீதியையும் தமிழ்நாட்டின்…
ஐபிஎல் 2026 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஜெர்சி, ஒரு பிரத்யேக கான்செப்ட் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘Dencoming Chapter 7: The Jersey Heist’ என்ற பெயரில் ஒரு அதிரடியான சினிமா பாணியிலான டிரைலர் மூலம் இந்த புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மர்மமான கடத்தல் (Heist) பாணியிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஜெர்சி அறிமுகத்தை முன்னிட்டு, எம்.எஸ்.தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://x.com/ChennaiIPL/status/2027922485363281934 2026-ஆம் ஆண்டுக்கான இந்த புதிய ஜெர்சியில், தோனியின் புகழ்பெற்ற ‘நம்பர் 7’ மற்றும் அணியின் அடையாளமான சிங்கம் மற்றும் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கான்செப்ட் வீடியோவிற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பின்னணி இசை அமைத்துள்ளார் . மார்ச் 1 (இன்று) முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்குகிறது.…
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி சற்று முன்னிலை வகிக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணி 3 முறையும், இந்திய அணி 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன. 2009 & 2010: இந்த இரு உலகக் கோப்பை தொடர்களிலும் மேற்கிந்திய தீவுகள் அணியே இந்தியாவை வீழ்த்தியது. இதேபோல், 2014 வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில், அமித் மிஸ்ராவின் அபார பந்துவீச்சால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2016 (அரையிறுதி): மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதியில், இந்தியா நிர்ணயித்த 193 ரன்கள் என்ற இலக்கை சிம்மன்ஸ் மற்றும் ரஸல் அதிரடியால் எட்டிப்பிடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தது மேற்கிந்திய தீவுகள் அணி. உலகக் கோப்பை தவிர்த்து ஒட்டுமொத்த சர்வதேச டி20 போட்டிகளைப் பார்த்தால் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது. மொத்தப் போட்டிகள்:…
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில், இலங்கை அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற போதிலும், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. நேற்று (பிப்ரவரி 28) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் 212 ரன்கள் குவித்தது. அரையிறுதிக்குத் தகுதி பெற இலங்கையை 147 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இருந்தது. இலங்கை கேப்டன் தசுன் ஷனகா (76*) மற்றும் பவன் ரத்நாயக்க (58) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை 207 ரன்களை எட்டியது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், அரையிறுதி வாய்ப்பை நியூசிலாந்து அணியிடம் இழந்தது. இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், நியூசிலாந்து இரண்டாவது அணியாகத் தகுதி பெற்றது. இந்திய அணியின் நிலை: இன்று ‘வாழ்வா-சாவா’ போராட்டம்: பாகிஸ்தான் வெளியேறிய நிலையில், இந்திய ரசிகர்கள் அனைவரின் பார்வையும் இன்று (மார்ச் 1)…
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஈராக் நாட்டின் எர்பில் (Erbil) பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. எர்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தங்கியுள்ள இராணுவத் தளம் ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரால் (IRGC) இலக்கு வைக்கப்பட்டது. ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் ஏந்திய ட்ரோன்கள் காரணமாக எர்பில் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. அங்கிருந்த அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அமெரிக்கத் தரப்பில் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சில ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், ஈரான் தனது ‘உண்மை வாக்குறுதி 4’ (Truthful Promise 4) நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஈராக் மட்டுமல்லாமல் கத்தார், குவைத், ஐக்கிய…
ஈரானில் நிலவி வரும் அசாதாரணமான சூழலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாப் என்ற இடத்தில் உள்ள ‘ஷஜாரே தய்யபே’ என்ற சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை மாணவிகள் பள்ளியில் இருந்தபோது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு வான்வழித் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்தப் பள்ளி நேரடியாகத் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் பலி எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது அது 85 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். “தற்காப்பு இல்லாத அப்பாவிச் சிறுமிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித்தனமான…
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழந்தாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காமேனி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் காமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தார். நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 28) அன்று தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோரும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காமேனியின் மறைவையொட்டி ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. காமேனியுடன் சேர்த்து ஈரானின் பாதுகாப்பு அமைச்சரும், புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) முக்கியத் தளபதிகளும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான்…
நாம் யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது என்று தன்னுடைய பிறந்த நாளில் உறுதிமொழி எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை! உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன். தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன். அந்த உறுதியோடுதான், திராவிட மாடலில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன். கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல்…
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், வளைகுடாவாழ் தமிழர்களுக்கான உதவி எண்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான்-இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும்…