Author: Editor web3

தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள்  குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் வருமானவரித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா, ஜனநாயகத்தின் தாய். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஜனநாயகத் திருவிழாவை மக்கள் கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டில் அதிக பெண் வாக்காளர்கள் உள்ளனர். 22 முதல் 29 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 1 கோடி உள்ளது. 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் தமிழ்நாட்டில் 12.5 லட்சம் பேர் இருக்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடுக்கு பிறகு 216 பேர் மட்டுமே மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளனர். ஒரே கட்ட தேர்தல் நடத்த…

Read More

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் இன்று  விடுவித்துள்ளது. . சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். “நான் ஊழல்வாதி அல்ல. கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும் உண்மையான நேர்மையாளர்கள் என்பதை இன்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனது வாழ்நாள் முழுவதும் நான் சம்பாதித்தது நேர்மை மட்டுமே. அந்த நேர்மையைச் சிதைக்க மிகப்பெரிய சதி நடந்தது. இறுதியில் உண்மை வென்றுள்ளது,” என்று அவர் கூறினார். அப்போது அருகிலிருந்த மணீஷ் சிசோடியா அவரைத் தேற்றினார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதற்காகத் தீட்டப்பட்ட மிகப்பெரிய அரசியல் சதி இது என கெஜ்ரிவால்…

Read More

பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து அன்புமணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றார். கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம், பா.ம.க-வுக்கு மாம்பழச் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதம் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் முகவரிக்கு அனுப்பப்படாமல், அன்புமணியின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்தும், அந்தக் கடிதத்தை ரத்து செய்யக் கோரியும் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ராமதாஸ் தரப்பில் “கட்சியின் உறுப்பினராகவே இல்லாத முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸின் முகவரிக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது சட்டப்படி தவறு. எனவே, அந்த உத்தரவை ரத்து…

Read More

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் குறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, கூச்சமே இல்லையா @OfficeOfOPS…??!! “ரோஸி டீக்கடை” நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள். ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்! பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் இரத்தத்தின் இரத்தமான @AIADMKOfficial தொண்டர்கள்! பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப் பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா…

Read More

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

Read More

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர், வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை. ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது வரலாற்றில் பதிவானது. தி.மு.க.வில் இணைந்த பின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடிய பண்பு அதிமுகவில் இல்லை என்ற அவர், தாய் கழகத்தின் மனமகிழ்ச்சியுடன் தி.மு.க.வில் இணைந்துள்ளேன் என்றார். வரும் பேரவைத் தேர்தலில் முதல்வர் வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். திமுகவை எதிர்க்க எந்த சக்தியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். அனைத்து மக்களும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும். அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் தளபதி மு.க.ஸ்டாலின்…

Read More

தமிழக அரசியலில் ‘விசுவாசத்தின் அடையாளம்’ என்றும், ‘அமைதியான அரசியல்வாதி’ என்றும் அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இன்று ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு சாதாரணத் தொண்டனாகத் தொடங்கி, தமிழகத்தின் உச்சபட்ச பதவியான முதலமைச்சர் நாற்காலி வரை அவர் பயணித்த பாதை வியக்கத்தக்கது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன்: பெரியகுளத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்தவர். 1982ல் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தைத் தீவிரப்படுத்திய காலத்தில், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். இவரது சுறுசுறுப்பைக் கண்டு, பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் பதவியை எம்.ஜி.ஆரே வழங்கினார். 1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் கட்சி உடைந்தபோது, ஓபிஎஸ் ஜானகி ராமச்சந்திரன் அணிக்குத் தனது ஆதரவை வழங்கினார். கட்சி மீண்டும் இணைந்த பிறகு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெறத் தொடங்கினார். 1996ல் உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சித் தலைவராக வென்று, தனது நிர்வாகத் திறமையை நிரூபித்தார். 2001ல் முதல்முறையாகச் சட்டமன்ற…

Read More

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த ‘இரு துருவ’ அரசியலின் ஒரு முக்கியப் பக்கம் இன்று மாறியுள்ளது. அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அமைச்சர் சேகர்பாபுவுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து விடுதியிலிருந்து புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்-சேகர்பாபு இருவரும், நேராக அண்ணா அறிவாலயம் வந்தடைந்தனர். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்துத் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் தனது போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைச் சட்டப்பேரவைச் செயலாளரிடம் வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாகவே அவர் திமுக அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுடன் ஆலோசனை நடத்தி வந்ததும்,…

Read More

தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு முக்கிய நகர்வாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நாதக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இம்முறை சட்டமன்றத்திற்குள் நுழையப் பலமான திட்டங்களை வகுத்துள்ளார். இதுவரை நடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி களம் கண்டிருந்தாலும், ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இந்நிலையில், 2026 தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்திய சீமான், தான் காரைக்குடியில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி, 1.63 லட்சத்திற்கும்…

Read More

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் வியூகங்கள் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, மாநில அரசியலில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் கனிமொழி போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூர் தொகுதி திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஆறு தேர்தல்களில் (துணைத் தேர்தல் உட்பட) அனிதா ராதாகிருஷ்ணன் இங்கு தொடர்ந்து வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது உடல்நிலை சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனுக்குப் பிறகு அந்தத் தொகுதியைத் தக்கவைக்கவும், தென் மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தவும் கனிமொழி சரியான தேர்வாக இருப்பார் என்று தலைமை கருதுவதாகத் தெரிகிறது. ஏற்கனவே தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழிக்கு,…

Read More