Author: Editor web3
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது திமுக அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுடன் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை தி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் திமுக அமைச்சர் சேகர்பாபுவும் தங்கியிருப்பதாகவும், இருவருக்கும் இடையே முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. ஓபிஎஸுடன் அவரது ஆதரவாளரான எம்.எல்.ஏ. ஐயப்பன், முன்னாள் எம்.பியும், ஓபிஎஸ்ஸின் மகனுமான ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது, இதனால், தற்போது அறிவாலயத்தில் ஓபிஎஸின் ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்ததோடு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றது இந்த இணைப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு, சபாநாயகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மார்ச் இரண்டாவது வாரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்து மக்களைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று மக்களைச் சந்திக்கும் விஜய், விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சையில் விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் மக்களின் தேவைகள் குறித்து அவர் பேச வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அவர் நடத்திய கூட்டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தஞ்சை வருகை அரசியல் ரீதியாக…
8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்துத் தவறான தகவல்கள் இடம்பெற்ற விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “இந்திய நீதித்துறையின் மீது அரசுக்கு முழுமையான மரியாதை உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு முறையாகப் பின்பற்றும். நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துகள் மற்றும் தகவல்கள் குறித்து உரிய ஆய்வு செய்யப்படும்,” என்று தெரிவித்தார். சர்ச்சைக்குரிய அந்தப் பாடத்தைத் தயாரித்தவர்கள் மற்றும் அதைச் சரிபார்த்தவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். இது ஒரு மிகப்பெரிய தவறு என்றும், இதற்குக் காரணமானவர்களின் பொறுப்பு நிலை உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில்…
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்தித்த சீமான், 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேடிய மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழ் நாடு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது, வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களை நடத்துவதில் இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்து வரும் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அதே வேளையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் தேர்தல் செயல்முறைகள் குறித்து எங்கள் கட்சியின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம். தேர்தல் கட்டங்கள் குறித்த கோரிக்கை: ஒரே மாதிரியான புவியியல் நில அமைப்பை…
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தனது 101-வது வயதில் நேற்று மரணம் அடைந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு முதுமை காரணமாக உயிர் இழந்ததை தொடர்ந்து தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நல்லகண்ணு உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். நல்லகண்ணு தனது உடலை ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் உயிர் இழந்தவுடன் நேற்று உடனடியாக பதப்படுத்தப்பட்டது. இதன் பிறகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.…
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு தற்போது சிக்கலாகியுள்ளது. இந்தியா நேரடியாக அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ: தற்போது சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பெரும் சரிவைச் சந்தித்ததால் அதன் நெட் ரன் ரேட் -3.800 என்ற மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதிலிருந்து மீண்டு வர இந்தியா என்ன செய்ய வேண்டும். கட்டாய வெற்றி: இந்தியா தனது அடுத்த இரண்டு போட்டிகளில் அதாவது, இன்று நடைபெறும் ஜிம்பாப்வே மற்றும் மார்ச் 1ல் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதில் ஒன்றில் தோல்வியடைந்தாலும் இந்தியா தொடரை விட்டு வெளியேற நேரிடும். பெரிய ரன் ரேட் வித்தியாசம்: வெறும்…
தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், விசிக உள்ளிட்ட மாநில கட்சிகளும் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை முன்வைத்தன ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திமுகவிற்கு விசுவாசமாக இருப்பார்கள், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப் பறக்கும் படையில் மத்திய அரசு ஊழியர்களைச் சேர்க்க வேண்டும். வாக்குச்சாவடி அபகரிப்பு மற்றும் கள்ள ஓட்டுகளைத் தடுக்க ரவுடிகளைக் கைது செய்ய வேண்டும்” என்றார். இதேபோல் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், கட்சித் தலைவர் விஜய், எவ்வித நேர்காணலையும் நடத்தாமல், முதற்கட்டமாக 80 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வரும் பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் முடிவு விருப்ப மனு அளித்திருந்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முதற்கட்டப் பட்டியல் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ரகசியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாகத் தேர்தல் களத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முன்பு தலைமை நேரடியாகவோ அல்லது குழுக்கள் மூலமாகவோ நேர்காணல் நடத்தித் தகுதியானவர்களைத் தேர்வு செய்வது வழக்கம். ஆனால், தவெக-வில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் பட்டியல் தயாராகியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது. நேர்காணல் நடத்தப்பட்டால் தங்களது திறமையையும், தொகுதியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் தலைமையிடம்…
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், திமுக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் தரப்பிலிருந்து இன்னும் இரண்டு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோருக்கு இடையே நிலவும் முரண்பட்ட கருத்துகளால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவினாலும், கூட்டணி உறுதியாக இருப்பதாகத் தலைமை அறிவித்துள்ளது. திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை: சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செல்வப்பெருந்தகை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் என்றைக்குமே செல்லாது, நல்லுறவு தொடர்ந்து நீடிக்கிறது” என்று கூறிய அவர், விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்கு அண்ணா அறிவாலயம் செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதற்குச் சிலர் காத்திருப்பதாகவும், அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்றும் அவர்…
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பட்டியலை கொடுத்திருக்கிறோம் என்று அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில், ஐஜேகே (IJK) கட்சி நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று அவரை நேரில் சந்தித்துப் பேசினர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை சக்தியாக அதிமுக விளங்கி வருவதாகத் தெரிவித்தனர். இந்த ஆலோசனையின் போது, ஐஜேகே சார்பில் போட்டியிட விரும்பும் 7 தொகுதிகள் அடங்கிய பட்டியலை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கியதாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்தப் பட்டியலைப் பெற்றுக்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர், கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனை…