Author: Editor web3

பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகங்களில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை (Followers) பெற்ற உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். தனது இஸ்ரேல் பயணத்தின் போது அவர் இந்த மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளார். உலக அளவில் டிஜிட்டல் தளத்தில் அதிக செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். மற்ற உலகத் தலைவர்களுக்கும் இவருக்கும் இடையேயான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் உள்ளது. அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட இரண்டு மடங்கு அதிகம் , பிரதமர் நரேந்திர மோடி 10 கோடி (100 மில்லியன்)  பின்தொடர்பவர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  4.32 கோடி (43.2 மில்லியன்) என இரண்டாம் இடத்திலும், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 1.5 கோடி (15 மில்லியன்) என மூன்றாம்…

Read More

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன. தமிழ்நாட்டில் தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின் எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 37 இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று முதல் மார்ச் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் மார்ச் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார். இன்று புதன்கிழமை (பிப்ரவரி 25) காலை இஸ்ரேலுக்குப் புறப்பட்டு மாலை 4:30 மணியளவில் டெல் அவிவ் சென்றடைந்தார். அங்கு அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அன்புடன் வரவேற்றார். தனது பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடுவார். இஸ்ரேல் நாடாளுமன்றத்திலும் உரையாற்றுவார், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுவார். இந்திய புலம்பெயர்ந்தவர்களுடனும் அவர் கலந்துரையாடுவார். பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் மற்றும் ஈரானின் வான்வெளியைத் தவிர்த்தது. அவரது விமானம் டெல்லியில் இருந்து குஜராத் வழியாக அரேபியக் கடலைக் கடந்து ஓமானுக்குள் சென்றது. பின்னர் அது சவுதி அரேபிய வான்வெளியைக் கடந்து ஜோர்டானுக்குள் நுழைந்தது. ஜோர்டானுக்குப் பிறகு, இஸ்ரேலிய எல்லை தொட்டது. பிரதமர் மோடி இந்திய…

Read More

டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கின் அதிரடி சதத்தால் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு தற்போது மிகவும் கடினமாகியுள்ளது. அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு கேப்டன் சல்மான் ஆகா சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் மேலும், ரசிகர்கள் தரம் தாழ்ந்து சல்மான் ஆகாவின் குடும்பத்தினரையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். சல்மான் ஆகாவின் மனைவி சப்பா மன்சர் மற்றும் அவர்களது  மகனை இணையதளத்தில் ஆபாசமான வார்த்தைகளால் ரசிகர்கள் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சப்பா மன்சர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “என்னையும் என் மகனையும் திட்டுவதால் நீங்கள் உலகக் கோப்பையை வென்றுவிட முடியாது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://x.com/VidyutVyom/status/2026597011244679242? பாகிஸ்தான் ரசிகர்கள் வீரர்களின் குடும்பத்தினரை இவ்வாறு தரக்குறைவாக…

Read More

டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி அமெரிக்கா போன்ற வெளிநாட்டுச் சக்திகளிடம் “சமரசம் செய்து கொண்டார்” (அதாவது நாட்டின் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார்) என்று ராகுல் காந்தி விமர்சித்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த கோயல், காந்தி குடும்பமே ஒரு முழுமையான “சமரச அரசியல் குடும்பம்” என்றும், காங்கிரஸ் ஒரு “சமரச அரசியல் கட்சி” என்றும் பகிரங்கமாகச் சாடினார். ராகுல் காந்தி எதிர்மறை அரசியலின் அடையாளமாக   மாறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி வெளிநாட்டு சக்திகள், இந்திய எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களின் கையில் ஒரு பொம்மையாகச் செயல்படுகிறார் என்று கோயல் விமர்சித்தார். வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு ராகுல் காந்தி நாட்டின் பொது நலன் மற்றும் தேசிய நலனில் சமரசம் செய்து…

Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நல்லக்கண்ணு மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன். அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.

Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (101) வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,  எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் – தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் – “சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத் தூக்கினில் ஏற்றினாலும் விட்டுப்பிரியாது – செங்கொடி வீரம் குறையாது” என்று…

Read More

மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பம் போலவே மருத்துவ மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லக்கண்ணு இன்று காலமானார். வயதுமூப்பு காரணமாக எழுந்த உடல்நலக் கோளாறுகளால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 20க்கும் நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இன்று 1.55 மணியளவில் காலமானார். இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் இரங்கல்களை பதிவுசெய்து வருகின்றனர். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட உள்ளது. கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ மாணவர்களின் ஆய்வுகளுக்காக நாளை சென்னை மருத்துவக் கல்லூரிக்கு…

Read More

தமிழக அரசியலில் தூய்மைக்கும், நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு (101) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்த அவர், தனது வாழ்நாளின் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும், பொதுவுடைமைத் தத்துவத்திற்காகவும் அர்ப்பணித்தவர். இவரது மறைவுச் செய்தி கேட்டு தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தியாகங்கள் நிறைந்த அரசியல் பயணம்: 1925-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லக்கண்ணு, இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் குதித்தவர். சுமார் 80 ஆண்டுகால பொதுவாழ்விற்குச் சொந்தக்காரரான இவர், விவசாயிகளுக்காகவும், அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர். பலமுறை சிறைவாசம் அனுபவித்த போதிலும், தனது கொள்கையிலிருந்து இம்மியும் பின்வாங்காதவர். “பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்” குறிப்பாக,…

Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுப்பெரும் தலைவரான தோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சற்றுமுன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 101. சமூக நீதிக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி வந்த தோழர் நல்லக்கண்ணு, வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால்  கடந்த 25 நாட்களாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. இதுதொடர்பாக, ராஜீவ் காந்தி மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நல்லக்கண்ணு, இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதி தீவிர சிகிச்சையில் இருந்தபோதும், முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால், நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று…

Read More