Author: Editor web3

தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று (பிப்ரவரி 25) கலைகட்டியுள்ளன. பல ஆண்டுகளாகத் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி, கடந்த பிப்ரவரி 22 அன்று சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தனர். ரசிகர்களால் சூட்டப்பட்ட ‘விரோஷ்’ என்ற பெயரையே தங்கள் திருமணத்திற்கு “தி வெடிங் ஆஃப் விரோஷ்” (The Wedding of VIROSH) எனச் சூட்டி அவர்கள் நெகிழ்ச்சியூட்டினர். உதய்பூரில் உள்ள ‘தி மெமெண்டோஸ்’ (The Mementos) என்ற பிரம்மாண்ட சொகுசு விடுதியில் இவர்களது திருமணச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (பிப். 24) மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இன்று ஹல்தி வைபவம் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தத் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என…

Read More

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராகச் சொத்துக்குவிப்பு புகார் மற்றும் பல்வேறு முறைகேடு புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. சார்பில் கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றம் இது தொடர்பாக ஏற்கனவே சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தும், லஞ்ச ஒழிப்புத்துறை மெத்தனமாகச் செயல்படுவதாக அ.தி.மு.க.வின் சட்டப்பிரிவு நிர்வாகிகள் இந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளனர். அமைச்சர் கே.என்.நேரு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்தக் கோரி அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார்கள் மீது முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், தற்போது வரை லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் மீது எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யவில்லை என்பது அ.தி.மு.க.வின் பிரதான…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நீடித்து வந்த இழுபறி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்க்கப் போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்த ஆலோசனையின் போது, கூட்டணியை உறுதிப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் 41 தொகுதிகளைக் கேட்டு ஒற்றைக்காலில் நின்ற காங்கிரஸிடம், தற்போதைய அரசியல் சூழலை மு.க. ஸ்டாலின் விளக்கிக் கூறியுள்ளார். இறுதியாக, காங்கிரஸுக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க திமுக தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் உடன்பாடு காரணமாக, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விஜய்யுடன் இணையக்கூடும் என்ற…

Read More

புழல் சிறைக்கு சென்று வந்த பிறகும் செந்தில் பாலாஜியிடம் எந்தவித மாற்றமும் இல்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் நடைபெற்ற பாஜக சார்பில் தெருமுனை பிரச்சார நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  தமிழக அரசின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகம் 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக முதலமைச்சர் பெருமையாகக் கூறி வருகிறார். ஆனால், எதார்த்த நிலவரம் வேறாக உள்ளது என்று அண்ணாமலை சாடினார். “தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத் துறையில் வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. விவசாயத்திற்குத் தேவையான வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, புதிய அணைகளும் கட்டப்படவில்லை. அமராவதி ஆற்றின் உபரி நீரை முறையாகக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்திருந்தால் விவசாயம் செழித்திருக்கும். அடிப்படைப் பணிகளைச் செய்யாமல் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதாகக் கூறுவது வெறும்…

Read More

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்குக் கூட்டணி மாற்றங்கள் குறித்த யூகங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளன. தற்போதைய ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட இடங்களைக் கோருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுக தரப்போ கடந்த தேர்தலைப் போலவே 25 இடங்களை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதால், இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழுபறியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், விஜய் தனது கட்சி சார்பில் காங்கிரஸிற்கு அதிக இடங்களை ஒதுக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வேலூர் மாநாட்டில் பேசிய விஜய், திமுக கூட்டணியைச்  கல்லாப் பெட்டி கூட்டணி என்று கடுமையாகச் சாடினார். அதே சமயம்,…

Read More

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ராமதாஸின் நிலைப்பாடு குறித்த சஸ்பென்ஸை உடைக்கும் வகையில்,  தனது தொண்டர்களுக்கு முக்கிய மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…? எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள். நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம். இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான…

Read More

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் வழக்கமான ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக, மே மாதத்திற்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த கள நிலவரத்தை ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு இன்று சென்னை வந்துள்ளது. பொதுவாக, ஒரு சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2026 மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ (One Nation One Election) கொள்கை அமல்படுத்தப்பட்டால் தேர்தல் தள்ளிப்போகலாம் என ஒரு தரப்பினர் கூறி வந்தனர். ஆனால், தற்போதைய நிலவரப்படி, தேர்தல் ஆணையம் வழக்கமான மே மாதக் காலக்கெடுவை முன்னிறுத்தியே தனது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, கொரோனா பேரிடர் காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 6-ஆம் தேதியே வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஆனால், தற்போது…

Read More

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 2 நாள் பயணமாக இன்று (பிப்ரவரி 25) கன்னியாகுமரி சென்றார். நாகர்கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில் பங்கேற்ற அவர், மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று 6 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு, அவர்கள் குறித்த இறுதித் தகவல் கிடைக்கும் வரை அல்லது அரசு நிவாரணம் வந்து சேரும் வரை மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இது மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த அறிவிப்புகளில் பழையாற்றில் இருந்து கூடுதல் நீர் வழங்க ரூ.28.20கோடியில் புதிய திட்டம். ரூ.25கோடியில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு மையம். குளச்சல் நகராட்சி, மண்டைக்காடு பேரூராட்சியில் AVM கால்வாய் ரூ.1.20கோடியில் புனரமைக்கப்படும். களியக்காவிளை – குமரி சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் ரூ.9கோடியில் சாலை அகலப்படுத்தப்படும். கல்குளம்…

Read More

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்ய, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தமிழகத்தின் தேர்தல் தயார்நிலை குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர். தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையம் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறது.…

Read More

தெலங்கானா மாநிலத்தில் பெற்ற தாயே தனது இரண்டு மாத குழந்தையை எரியும் அடுப்பில் வீசிக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விக்காராபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது குடும்பத் தகராறு காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அடுப்பு எரிந்து கொண்டிருந்தபோது, தனது 2 மாதக் குழந்தையைத் தாய் அதில் தூக்கி வீசியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், குழந்தை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்காராபாத் போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read More