Author: Editor web3
வார இறுதி நெருங்கிவிட்டாலே சினிமா ரசிகர்களின் கவனம் OTT பக்கமே திரும்பும். அந்த வகையில் இந்த வாரம் நாளை (பிப்ரவரி 27) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் சுவாரஸ்யமான திரைப்படங்களும், இணையத் தொடர்களும் (Web Series) வெளியாகின்றன. அந்தவகையில், தமிழ் ரசிகர்களுக்காக ‘தடையம்’ (Thadayam) இணையத் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகிறது. தெலுங்கில் ‘ஹனி’ (Honey) சன் நெக்ஸ்ட் (Sun Nxt) தளத்திலும், ‘டாட்டர் ஆஃப் பிரசாத் ராவ் காணபடுதலேது’ ஜீ5 தளத்திலும் வெளியாகின்றன. தடையம்: 1999ல் தமிழ்நாடு, ஆந்திரா பார்டரில் நடந்த தொடர் கொலைகளைப்பற்றி இன்வெஸ்டிகேசன் செய்யும் ஒரு போலீஸ் ஆபீசரின் கதை இது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் அதியமான் ஆக சமுத்திரக்கனி, இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆக ஷிவாதா நடிக்கிறார்கள் .இது ஒரு யு/ஏ படம் 16+ ஒரு விறுவிறுப்பான புலனாய்வு க்ரைம் த்ரில்லர் (Investigative Crime Thriller) தொடராகும். இத்தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு…
கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றும் முயற்சிகளைத் தொடர்ந்து, தற்போது நாட்டின் தலைநகரான டெல்லியின் பெயரை ‘இந்திரப்பிரஸ்தம்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாஜக எம்.பி பிரவீன் கண்டேல்வால் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தச் சூழலில், மகாபாரத காலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரை டெல்லியின் பெயர் எப்படியெல்லாம் மாறியது என்பதைப் பார்ப்போம். டெல்லியின் வரலாறு புராண காலத்திலிருந்தே தொடங்குகிறது. மகாபாரதத்தின்படி, பாண்டவர்கள் காண்டவப் பிரஸ்தம் என்ற காட்டை அழித்து ‘இந்திரப்பிரஸ்தம்’ என்ற நகரத்தை உருவாக்கித் தங்களது தலைநகராகக் கொண்டனர். இன்றைய டெல்லியின் சில பகுதிகள் அந்தப் புராண கால இந்திரப்பிரஸ்தத்துடன் தொடர்புடையவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கி.பி 8-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை ஆண்ட தோமரா வம்ச மன்னர்கள், இதற்கு ‘தில்லிகா’ அல்லது ‘தில்லி’ என்று பெயரிட்டனர். பின்னர் சவுகான் மன்னர்களின்…
மத்தியப் பாடநூல் கழகமான NCERT, 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் இந்திய நீதித்துறை குறித்துத் தவறான மற்றும் அவதூறான தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று NCERT நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், “8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்துத் தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு மிகப்பெரிய தவறு. ஆய்வு மற்றும் அச்சிடும் பணியின் போது ஏற்பட்ட இந்த கவனக்குறைவிற்காக நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்திய நீதித்துறையையும், அதன் உன்னத மாண்பையும் நாங்கள் எப்போதும் உயர்வாக மதிக்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைப் பாடம் நீக்கம்: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட பாடம், புத்தகத்தில் இருந்து உடனடியாக முழுமையாக நீக்கப்படும் NCERT உறுதி அளித்துள்ளது. மேலும், மாணவர்களுக்குத் தவறான வரலாற்றுத்…
திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் (87), வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூட, உடல்நல பாதிப்பால் அவரால் பங்கேற்க முடியவில்லை. பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கும் அவர், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஏற்கனவே வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி-யாகப் பணியாற்றி வருகிறார். வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களைத் தவிர்க்கவும், அதே சமயம் தொகுதியில் கட்சியின் பிடியைத் தக்கவைக்கவும் துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி தொகுதியில் இம்முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்து வரும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கோ அல்லது அப்பகுதியின் செல்வாக்குமிக்க இளைய தலைமுறையினருக்கோ இந்த…
தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கான உரிமை மீட்புக்காகவே செலவிட்டு வாழ்ந்த போராளி அய்யா நல்லக்கண்ணு (101) அவர்கள் இன்று (25.02.2026) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமான இன்று அவரின் ஓய்வற்ற போராட்ட வாழ்வை, சுகபோகத்தை விரும்பாத எளிய வாழ்வை பற்றி அறியலாம். ஐந்து வயதிலேயே போராட்ட வாழ்வு: தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டத்தில் 26 டிசம்பர் 1925 ஆம் ஆண்டு பிறந்தார் இரா.நல்லகண்ணு. ஒரு சிறப்பு என்னவென்றால், அவர் பிறந்த அதே நாளில் தான் பொதுவுடைமை கட்சியும் தொடங்கப்பட்டது. முதலில் அய்யா நல்லக்கண்ணு காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டார். தூத்துக்குடியில் வ.உ.சி நடத்திய சுதேசி இயக்கத்தாலும், கிராமியக் கூட்டங்களில் பாடப்பட்ட பாரதியார் பாடல்களாலும் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். அப்போதைய சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த இயக்கமான காங்கிரசால் அவர் முதலில் ஈர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. அச்சூழலில் அவரது ஆரம்ப…
விஜய் எனது நண்பர் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இன்று அரசியலில் பலர் புதிய அவதாரம் எடுத்து வருகிறார்கள். குறிப்பாக தம்பி விஜய் அவர்கள் கட்சித் தொடங்கி அரசியலுக்கு வந்துள்ளார். எனக்கு நடிகர் விஜய் ஒரு நல்ல நண்பர், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு காலகட்டத்தில் அவரது திரைப்படம் வெளியாக முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தபோது, நானே முன்நின்று அன்றைய முதலமைச்சர் எடப்பாடி அவர்களை எனது காரிலேயே அழைத்துச் சென்று, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு படம் வெளியாக உதவி செய்தேன். ஆனால், தனிப்பட்ட நட்பு என்பது வேறு, மக்கள் பணி என்பது வேறு. ஒருவர் தன்னை ‘மக்கள் தலைவன்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டு வரும்போது, அவருக்கு முதல் கடமை மக்களின் உயிரைப் பாதுகாப்பதாகத்தான் இருக்க வேண்டும்.…
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் படைகளின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்திற்கும் இந்திய மக்களின் இரங்கல் செய்தியை கொண்டு வந்துள்ளேன். நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிப்பாட்டில் இஸ்ரேலுடன் இந்தியா இன்றும் என்றும் துணை நிற்கும். பயங்கரவாதத்தை எந்தவொரு காரணமும் நியாயப்படுத்த முடியாது. இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்குமான உறவு வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அது ஆழமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது என்பதை பிரதமர் உறுதிப்படத் தெரிவித்தார். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணைப்பு ரத்தத்தாலும் தியாகத்தாலும்…
தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தம்பதி இன்று (பிப்ரவரி 26) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஆடம்பரமான ‘ITC மெமெண்டோஸ்’ (ITC Mementos) ஓட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இன்று காலை 10.10 மணியளவில் தெலுங்கு முறைப்படி தாலி கட்டும் சடங்கு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி காலையில் திருமணம் முடிந்த நிலையில், ராஷ்மிகாவின் குடகு (Kodava) பாரம்பரிய முறைப்படி மாலையிலும் சடங்குகளுடன் இந்தத் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. திருமணத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே இந்தத் தனியார் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். உதய்பூரில் நடைபெறும் இந்தத் தனிப்பட்ட திருமணத்தைத் தொடர்ந்து, மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் திரையுலக நண்பர்களுக்காகப் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று தவெக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் எக்ஸ் தல பதிவில், “தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன் அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்த முடிவு இலங்கை அணியின் தொடர் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததோடு மட்டுமின்றி, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பையும் பெரும் சிக்கலில் தள்ளியுள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல வேடிக்கையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எப்படி சிக்கல்? குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்றால், நியூசிலாந்து அணியை இலங்கை வீழ்த்த வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால், இந்த முக்கியப் போட்டியில் நியூசிலாந்து அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தானின் அரையிறுதி கனவு மங்கத் தொடங்கியுள்ளது. திடீர் திருப்பம்: போட்டியின் தொடக்கத்தில் நியூசிலாந்து அணி 84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இலங்கை வெற்றி பெற்றுவிடும், அதன்மூலம் பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் உருவாகும் என பாகிஸ்தான்…