Author: Editor web3

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மிகப்பெரிய அணு ஆயுதப் போரைத் தான் தடுத்து நிறுத்தியதாகக் கூறி மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ‘ஆபரேஷன் சிந்துார்’  காரணமாகக் கடுமையான போர் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. அப்போது இரு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைக்குச் சென்றதாகச் செய்திகள் வெளியாகின. இதுவரை இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட 8 போர்களை தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் கூறிவருகிறார். அந்தவகையில், தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ‘ஸ்டேட் ஆஃப் தி யூனியன்’ ( உரையில், “நான் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், இந்தப் போரில் சுமார் 3.5 கோடி  மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்”…

Read More

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக்கோப்பைத் தொடரில், இங்கிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலாவது அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று (பிப்ரவரி 24, 2026) கண்டியில் நடைபெற்ற பரபரப்பான சூப்பர்-8 சுற்றில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு அடுத்தபடியாக, இந்தத் தொடரில் மிகவும் பலமான அணியாக இங்கிலாந்து உருவெடுத்துள்ளது. இலங்கை மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் 164 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். பின்னர் 165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் (Harry Brook), இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் விளையாடி வெறும் 51 பந்துகளில் சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.…

Read More

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில், சிப்ஸ், குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் போன்ற ‘அல்ட்ரா-புரோசஸ்டு’ (Ultra-processed) உணவுகளுக்கு அடிமையாவது, புகையிலை அல்லது சிகரெட்டிற்கு அடிமையாவதைப் போலவே ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹார்வர்ட் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வு, நவீன உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் புகையிலை நிறுவனங்களைப் போலவே வாடிக்கையாளர்களைத் தங்கள் தயாரிப்புகளுக்கு அடிமையாக்கத் திட்டமிட்டுச் செயல்படுவதாகத் தெரிவிக்கிறது. இந்த வகை உணவுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு மற்றும் வேதிப்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்க்கப்படுகின்றன. இது மூளையில் உள்ள ‘ரிவார்டு சிஸ்டத்தை’  தூண்டி, அந்த உணவை மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இது சிகரெட் பிடிக்கும்போது ஏற்படும் அதே போன்ற ஒரு போதைப் பழக்கத்தை உருவாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த உணவுகளின் தீய விளைவுகளைக் கருத்தில் கொண்டு, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்படுவது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை இவற்றிற்கும் விதிக்க வேண்டும்…

Read More

தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக, ஐபிஎல் 2026 தொடருக்கான அட்டவணையை இரண்டு கட்டங்களாக வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மார்ச் 26 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், தேர்தல் தேதிகளுக்கு ஏற்ப போட்டிகளைச் சீரமைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரங்களில் மாநில காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் மும்முரமாக இருப்பதால், சென்னை (சேப்பாக்கம்) மற்றும் கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்) போன்ற மைதானங்களில் ஐபிஎல் போட்டிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். இதனால், தேர்தல் நடைபெறும் தேதிகளில் அந்த மாநிலங்களில் போட்டிகள் நடத்தப்படுவதைத் தவிர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக பிப்ரவரி மாத இறுதியில் சுமார் 20 முதல் 25 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்த பிறகு, மார்ச்…

Read More

கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ (Keralam) என மாற்றுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (பிப்ரவரி 24,) ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் புதிதாகத் திறக்கப்பட்ட பிரதமர் அலுவலகக் கட்டிடமான ‘சேவா தீர்த்தில்’  நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவைச் செய்தியாளர்களிடம் அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே, மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்ததாகக் குறிப்பிட்டார். மக்களின் இந்த நீண்ட நாள் விருப்பத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. கேரள மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரி அம்மாநில சட்டமன்றத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 24 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் சில தொழில்நுட்ப மாற்றங்களைப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாகத் தீர்மானம்…

Read More

கனடா பிரதமர் மார்க் கார்னி வரும் பிப்ரவரி 26-ம் தேதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான தஹவூர் ஹுசைன் ரானாவின் கனடா குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் தொடங்கியுள்ளது. 26/11 தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 65 வயதான ரானா, தற்போது இந்தியப் புலனாய்வு அமைப்புகளின் கட்டுப்பாட்டில் டெல்லியில் சிறையில் உள்ளார். இந்த தாக்குதலில் 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ரானா கடந்த 1997-ம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்து 2001-ல் அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். ஆனால், அவர் தனது குடியுரிமை விண்ணப்பத்தின் போது தவறான தகவல்களை வழங்கியதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியுரிமைத் துறை (IRCC) தெரிவித்துள்ளது. அவர் கனடாவில் வசித்த கால அளவைக் குறித்து பொய்யான தகவல்களைத் தந்துள்ளதாகவும், விண்ணப்பத்தில் குறிப்பிட்ட காலங்களில் அவர் கனடாவில் தங்கியிருக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக,…

Read More

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், காதலித்த பெண்ணிற்காகத் தனது கணவரை மனைவி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாகப் பணம் பெற்றுக்கொண்டு “விற்பனை” செய்த வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 42 வயதுடைய பெண் அரசு அதிகாரி ஒருவருக்கும், அவருடன் பணிபுரிந்த  54 வயதுடைய நபருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அந்த நபர் ஏற்கனவே திருமணமாகி 23 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குடும்பத்திற்குள் வெடிக்கவே, பாதிக்கப்பட்ட மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, கணவரின் காதலி தனக்குச் சொத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும், காதலனுடன் வாழத் தான் எதையும் இழக்கத் தயார் என்றும் தெரிவித்தார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தனது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப நலனைக் கருத்தில் கொண்ட மனைவி, ஒரு அதிரடி முடிவை எடுத்தார். அதன்படி, கணவரின் காதலியிடமிருந்து 1.5 கோடி ரூபாயைப்…

Read More

தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாதத்தில்தான் வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களிலேயே கோடை காலத்தைப் போன்ற கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, உள் மாவட்டங்களில் சூரியனின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் காலையிலேயே வெப்பத்தின் கொடுமையை உணரத் தொடங்கியுள்ளனர். இந்த வெப்ப அலை பாதிப்பில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் (37.8 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் சதம் அடித்துள்ளது ஈரோடு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டைத் தொடர்ந்து கரூர் பரமத்தி, திருப்பூர், மதுரை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் வெப்பம் 98 டிகிரிக்கும் அதிகமாகப் பதிவாகி, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும்…

Read More

கட்சிக்கு சோதனை வந்தபோது முதல்வர் பதவியை என்னிடம் கொடுத்தவர் ஜெயலலிதா, அவரது மறைவுக்கு பின் என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் ஆக்கினார்கள் என்று கூறி ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பை கிளப்பியுள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையும், வீரவணக்கமும் என்று கூறினார். தமிழ்நாட்டு மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த தன்னலம் பாரத உன்னத தலைவர் ஜெயலலிதா. மேலும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா. ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று சொன்னது தவறா? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சிக்கு சோதனை வந்தபோது முதல்வர் பதவியை என்னிடம் கொடுத்தவர் ஜெயலலிதா, ஆனால், அவரது மறைவுக்கு பிறகு என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் ஆக்கினார்கள். நான் எந்த துரோகமும் செய்யவில்லை. தமிழ்நாட்டின் முதல்வராக 3வது முறையாக கட்டாயத்தின்பேரில் பொறுப்பேற்றேன் என்றார். தொடர்ந்து பேசிய…

Read More

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக ஏற்கனவே 2 அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில், குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் அம்மா இல்லம் திட்டம் மூலம் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தரமான கான்கிரீட் வீடு கட்டி தரப்படும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு…

Read More