Author: Editor web3
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அலுவலகமான ‘சேவா தீர்த்தில்’ (Seva Tirth) இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 13-ஆம் தேதி தெற்கு பிளாக்கில் இருந்த பழைய அலுவலகத்தில் கடைசி கூட்டம் நடைபெற்ற நிலையில், புதிய அலுவலகத்திற்கு மாறிய பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். பழைய அலுவலகத்தில் நடந்த இறுதிச் சந்திப்பின் போது, சுதந்திரத்திற்குப் பின் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மற்றும் போர் உத்திகள் வகுக்கப்பட்ட அந்த கட்டிடத்தின் நினைவுகளை பிரதமர் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த அமைச்சரவைக் கூட்டங்களில் ஒரு சிறப்பம்சமாக, வழக்கமான நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால், அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த அல்லது தனிப்பட்ட வாழ்வின் ‘நல்ல செய்திகளை பகிருமாறு பிரதமர் ஊக்குவிக்கிறார். ஒரு நஷ்டத்தில் இயங்கிய அரசு நிறுவனத்தை லாபத்திற்கு மாற்றியது போன்ற நிர்வாக வெற்றிகளையோ அல்லது அமைச்சர்களின் குடும்பத்தில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையோ இதில் பகிர்ந்து…
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவுக்குப் புதிய சட்டச் சிக்கல் உருவாகியுள்ளது. துறை சார்ந்த ஒப்பந்தங்கள் மற்றும் உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் ரூ.1000 கோடி ரூபாய் லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களின் அடிப்படையில், அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது அமைச்சர் நேரு தரப்புக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தன் மீதான வழக்குப் பதிவுக்குத் தடை கோரியும், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்து சட்டரீதியான நிவாரணம் தேடும் முயற்சியில் அமைச்சர் கே.என்.நேரு தரப்பினர் இறங்கினர். இந்த நிலையில், அமைச்சர் நேரு தாக்கல்…
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டின் தரம் மற்றும் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில், திருமலையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த நவீன பரிசோதனை கூடம் அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க இந்த அதிரடி முடிவை திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது. இந்த ஆய்வகத்தின் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் இது செயல்பாட்டுக்கு வரும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள மாவு மில் வளாகத்தில் 12,000 சதுர அடி பரப்பளவில் இந்த இருதள ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் சிறப்பம்சமாக, நெய்யின் தரம் மற்றும் வாசனையைத் துல்லியமாகப் பரிசோதிக்கப் பிரான்ஸ் நாட்டிலிருந்து ‘E-Tongue’ (மின்னணு நாக்கு) மற்றும் ‘E-Nose’ (மின்னணு மூக்கு) ஆகிய கருவிகள் 3.5…
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நேற்று (பிப்ரவரி 22, 2026) நள்ளிரவில் அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. நங்கர்ஹார், பக்திகா மற்றும் கோஸ்ட் ஆகிய மூன்று மாகாணங்களில் உள்ள ஏழு முக்கிய பயங்கரவாத மையங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் ஐஎஸ்-கே (IS-KP) அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாகப் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பன்னு மற்றும் பஜார் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த “உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்திப் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகப் பாகிஸ்தான் அரசு நீண்டகாலமாக குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்கள் மற்றும் பதுங்கு…
2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று சென்னை வந்தடைந்தது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மா (Mahieka Sharma) என்பவருடன் நெருக்கமாகக் காணப்பட்டார். அவரது தோளில் கை போட்டபடி ஹர்திக் நடந்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://x.com/ANI/status/2025876091492311050 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷா ஷெட்டியுடன் வந்திருந்தார். மற்ற வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய நேரப்படி பிப்ரவரி 26 அன்று மாலை 7 மணிக்கு ஜிம்பாப்வே உடனான ஆட்டம் தொடங்குகிறது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்திய அணிக்கு இந்த வெற்றி மிகவும் அவசியமானது. முன்னதாக அகமதாபாத்தில் நடைபெற்ற சூப்பர்-8…
ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானில் இருக்கும் இந்தியக் குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தலை விடுத்துள்ளது. வரும் நாட்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், வணிக ரீதியிலான விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது ஈரானில் தங்கியிருக்கும் மாணவர்கள், ஆன்மீகப் பயணிகள் (Pilgrims), வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவருக்கும் பொருந்தும். மேலும், ஏற்கனவே ஜனவரி 14 அன்று விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தூதரகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூர் ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து கவனித்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில் உள்ள இந்தியர்கள் தங்களின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், ஏதேனும் உதவி…
தேர்தலைக் காரணம் காட்டி தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சியின் காரணமாகத்தான் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5000 உரிமைத்தொகையாக வழங்கப்பட்டது என்று முதலைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது ‘பூமராங்’ ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்” என்று கூறியுள்ளார். மகளிர் உரிமைத்தொகையை முன் கூட்டியே கொடுத்தது பற்றி குறிப்பீட்ட முதலமைச்சர், அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர். பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்” இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர் ”விடியல்…
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (பிப்ரவரி 23) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்தப் புதிய பட்டியலின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 ஆக உள்ளது. இந்தச் சிறப்புத் திருத்தப் பணியின் போது, உயிரிழந்தவர்கள், ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பது மற்றும் குடிபெயர்ந்தவர்கள் எனச் சுமார் 97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்டவர்கள் எனச் சுமார் 27.53 லட்சம் பேர் புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, ஆண்களை விடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை மீண்டும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் தற்போது 2.89 கோடி பெண் வாக்காளர்களும், 2.77 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர். 7…
வேலூா் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய விஜய், லஞ்சம், ஊழல் உள்ளிட்டவை முதல்வரின் நண்பர்கள். மாதம், மாதம் கரெண்ட் பில் கட்டும்படி செய்வதாக சொன்னீர்களே செஞ்சீங்களா. மலை கிராமங்களில் பேருந்து வசதி, மருத்துவமனை வசதி இல்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு we safe model இல்லை We are not safe model. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு காணாமல் போய் பல நாட்கள் ஆனது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தவெக ஆட்சியில் முதல்பணியாக இருக்கும், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். மாவட்ட எஸ்.பி ஆட்சியர் சரிபாதியாக தமிழ்நாட்டில் நியமிக்கப்படுவார்கள். மலை கிராமங்களில் கல்வி, மருத்துவம் முழுமையாக வழங்கப்படும். திமுக கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி. நடைப்பெற போவது விசில் புரட்சி எலக்ஷன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும் ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்துக்கொள்வதாக விமர்சித்தார். கொள்ளையடித்த பணத்தை வைத்து கல்லாப்பெட்டி கூட்டணியை ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாகவும் சாடிய அவர்,…
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் கொல்லமங்கலம் பகுதியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, மக்களை நேரடியாக சந்திக்க விடாமல் தன்னை தடுக்க சதி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் தான் இங்கு போட்டியே. இதில் இன்னொரு காமெடி வேற. அவருடைய ஆட்சியில் தான் தமிழ்நாடு சூப்பர்ஸ்டார் மாநிலமாக உள்ளதாம். ஆம், காமராஜர், அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அப்படி தான் இருந்தது. ஆனால், இன்று ஒன்றுக்கும் உதவாத உல்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டேண்டர்ட்-அப் காமெடிக்காரர் வழிநடத்தும் மாநிலமாக உள்ளது. வருகிற தடைகளை எல்லாம் மீறி மக்களுக்காக இந்த தேர்தலில் தவெக தில்லாக நிற்கிறது. வழக்காமாக நடைபெறும் தேர்தலாக இதனை கருதாமல், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிசயமாக நடைபெறும் தேர்தலாக இதை கருதுங்கள். என் மீது…