Author: Editor web3
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளான இன்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சென்னையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் இருக்கும் ஜெயலலிதா சிலைக்கு ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செய்வதை ஓபிஎஸ் வழக்கமாக வைத்திருந்தார். இந்த ஆண்டும் அங்கு மாலை அணிவிப்பதாக முதலில் அறிவித்திருந்த நிலையில், திடீரென அந்த முடிவை மாற்றி, தனது சொந்த தொகுதியான போடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதாக அறிவித்துள்ளார். ஓபிஎஸ்-ஸின் இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் பெரிய அரசியல் பின்னணி இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், திமுக வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகப் புகழ்ந்து பேசியிருந்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அவர் விரைவில் திமுகவில் இணையக்கூடும் அல்லது அந்த அணியில்…
தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணையவுள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் புதிய படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைவதால், இந்தத் திரைப்படம் கோலிவுட்டின் மிகப்பெரிய ‘மெகா பட்ஜெட்’ படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணிக்கு வழங்கப்படவுள்ள சம்பளம் குறித்துப் பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, இந்தப் படத்திற்காக ரஜினிகாந்துக்கு சுமார் ரூ.225 கோடி சம்பளமாகப் பேசப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது சமீபத்தில் வெளியான ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடிகர் விஜய் ரூ.210 – ரூ.220 கோடி வரை சம்பளம் பெற்றதால் இதற்கு இணையாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் சம்பளம் பேசப்பட்டதாக…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று பசும்பொன்னில் சசிகலா பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார். இதில் தனிக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24, 2026), வி.கே. சசிகலா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடத்தும் இந்த எழுச்சி மாநாடு போன்ற கூட்டத்தில், தனது புதிய அரசியல் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சசிகலாவின் இந்த அதிரடி அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்திற்காக தென்மாவட்டங்களில் இருந்து சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களைத் திரட்டி, தனது பலத்தை நிரூபிக்க சசிகலா திட்டமிட்டுள்ளார். இதற்காகக் கடந்த சில வாரங்களாகவே அவர் தென்மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி (பிப்ரவரி 24), பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தனது இதயப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்றும், கருணைமிக்க தலைவராகவும், மிகச்சிறந்த நிர்வாகியாகவும் அவர் அனைவராலும் மதிக்கப்படுபவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். குறிப்பாக, ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கப்படும் ஜெயலலிதாவின் பெயரைக் கேட்டாலே தமிழக மக்களின் முகத்தில் ஒரு பொலிவு உண்டாவதை இன்றும் தன்னால் உணர முடிகிறது என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி…
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு மேல் சிகிச்சைக்காக ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம், நேற்று (பிப்ரவரி 23) இரவு சத்ரா மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது. ரெட் பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பீச்கிராஃப்ட் C90 (Beechcraft C90) ரக விமானம், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்திலிருந்து இரவு 7:11 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களில், அதாவது இரவு 7:34 மணியளவில் கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் சிமாரியா பகுதியில் உள்ள கசாரியா காடுகளில் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த நோயாளி சஞ்சய் குமார், மருத்துவர் விகாஸ் குமார் குப்தா, உதவியாளர் சச்சின் குமார் மிஸ்ரா, நோயாளியின் உறவினர்களான அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார், மற்றும் விமானிகள் விவேக் விகாஸ் பகத், சவ்ராஜ்தீப்…
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அலுவலகமான ‘சேவா தீர்த்தில்’ (Seva Tirth) இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 13-ஆம் தேதி தெற்கு பிளாக்கில் இருந்த பழைய அலுவலகத்தில் கடைசி கூட்டம் நடைபெற்ற நிலையில், புதிய அலுவலகத்திற்கு மாறிய பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். பழைய அலுவலகத்தில் நடந்த இறுதிச் சந்திப்பின் போது, சுதந்திரத்திற்குப் பின் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மற்றும் போர் உத்திகள் வகுக்கப்பட்ட அந்த கட்டிடத்தின் நினைவுகளை பிரதமர் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த அமைச்சரவைக் கூட்டங்களில் ஒரு சிறப்பம்சமாக, வழக்கமான நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால், அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த அல்லது தனிப்பட்ட வாழ்வின் ‘நல்ல செய்திகளை பகிருமாறு பிரதமர் ஊக்குவிக்கிறார். ஒரு நஷ்டத்தில் இயங்கிய அரசு நிறுவனத்தை லாபத்திற்கு மாற்றியது போன்ற நிர்வாக வெற்றிகளையோ அல்லது அமைச்சர்களின் குடும்பத்தில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையோ இதில் பகிர்ந்து…
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவுக்குப் புதிய சட்டச் சிக்கல் உருவாகியுள்ளது. துறை சார்ந்த ஒப்பந்தங்கள் மற்றும் உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் ரூ.1000 கோடி ரூபாய் லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களின் அடிப்படையில், அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது அமைச்சர் நேரு தரப்புக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தன் மீதான வழக்குப் பதிவுக்குத் தடை கோரியும், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்து சட்டரீதியான நிவாரணம் தேடும் முயற்சியில் அமைச்சர் கே.என்.நேரு தரப்பினர் இறங்கினர். இந்த நிலையில், அமைச்சர் நேரு தாக்கல்…
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டின் தரம் மற்றும் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில், திருமலையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த நவீன பரிசோதனை கூடம் அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க இந்த அதிரடி முடிவை திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது. இந்த ஆய்வகத்தின் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் இது செயல்பாட்டுக்கு வரும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள மாவு மில் வளாகத்தில் 12,000 சதுர அடி பரப்பளவில் இந்த இருதள ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் சிறப்பம்சமாக, நெய்யின் தரம் மற்றும் வாசனையைத் துல்லியமாகப் பரிசோதிக்கப் பிரான்ஸ் நாட்டிலிருந்து ‘E-Tongue’ (மின்னணு நாக்கு) மற்றும் ‘E-Nose’ (மின்னணு மூக்கு) ஆகிய கருவிகள் 3.5…
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நேற்று (பிப்ரவரி 22, 2026) நள்ளிரவில் அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. நங்கர்ஹார், பக்திகா மற்றும் கோஸ்ட் ஆகிய மூன்று மாகாணங்களில் உள்ள ஏழு முக்கிய பயங்கரவாத மையங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் ஐஎஸ்-கே (IS-KP) அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாகப் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பன்னு மற்றும் பஜார் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த “உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்திப் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகப் பாகிஸ்தான் அரசு நீண்டகாலமாக குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்கள் மற்றும் பதுங்கு…
2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று சென்னை வந்தடைந்தது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மா (Mahieka Sharma) என்பவருடன் நெருக்கமாகக் காணப்பட்டார். அவரது தோளில் கை போட்டபடி ஹர்திக் நடந்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://x.com/ANI/status/2025876091492311050 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷா ஷெட்டியுடன் வந்திருந்தார். மற்ற வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய நேரப்படி பிப்ரவரி 26 அன்று மாலை 7 மணிக்கு ஜிம்பாப்வே உடனான ஆட்டம் தொடங்குகிறது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்திய அணிக்கு இந்த வெற்றி மிகவும் அவசியமானது. முன்னதாக அகமதாபாத்தில் நடைபெற்ற சூப்பர்-8…