Author: Editor web3

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பின் இன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியாகிறது. இதனை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் மாவட்டவாரியாக வாக்காளா் விவரங்களை வெளியிடவுள்ளாா். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. நீக்கப்பட்டவா்களில் இறந்தவா்களைத் தவிர மீதம் உள்ள 66 லட்சம் வாக்காளா்களில் தகுதியானவா்களும், புதிய வாக்காளா்களும் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்றொருபுறம் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் உரிய தகவல்களை அளிக்காத 12,43,363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உரிய ஆவணங்கள் மற்றும் சுய உறுதிமொழிச் சான்றுகளை சமா்ப்பிக்குமாறு அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல்…

Read More

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தையொட்டி, அப்பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் இன்று தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 4,900 போ் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் க்யூ.ஆா்.கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கூட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், காவல் துறை அறிவுறுத்தலின்பேரில், கூட்டம் நடைபெறும் இடத்தில் 140 அடி அகலம், 600 அடி நீளம் என்று மொத்தம் 84 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், 36 அடி உயரத்தில் மேற்கூரையும், கேலரிகளுடன் 4,900 போ் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தவெக சார்பில் 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. விஜய்யை…

Read More

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple), தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னையில் புதிய பிரம்மாண்ட அலுவலகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. பெங்களூரு மற்றும் ஐதராபாத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் உற்பத்தி மையமாகத் திகழும் சென்னையை ஆப்பிள் தேர்ந்தெடுத்திருப்பது தமிழகத் தொழில் துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அலுவலகம் வெறும் நிர்வாகப் பணிகளுக்காக மட்டுமல்லாமல், மென்பொருள் மேம்பாடு மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மைக்கான முக்கிய மையமாகவும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை போரூரில் உள்ள DLF Cyber City வளாகத்தில் புதிய அலுவலகத்தை தொடங்குகிறது. இதற்காக சுமார் 20,000 சதுர அடி இடத்தை நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப துறையில் அனுபவமுள்ளவர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன்களை (iPhone), ஃபாக்ஸ்கான் (Foxconn) மற்றும் பெகாட்ரான் (Pegatron) போன்ற நிறுவனங்கள் உற்பத்தி…

Read More

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. ஸ்மிரிதி மந்தனா 82 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்களும் விளாசினர். பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்தரேலியா களம் இறங்கியது. அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆஸ்லே கார்ட்னெர் அதிகபட்சமாக 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சாரணி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன. இந்த…

Read More

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் காவி உடை அணிவித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுடன் இணைந்தவுடன் அவரின் சிந்தனை காவி மயமாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. அவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர். திருவள்ளுவரின் உருவப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாயலை ஏற்படுத்துவது தமிழர் பண்பாட்டு மரபுக்கு எதிரான செயல் ஆகும் என்று பதிவிட்டுள்ளார்.

Read More

2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடைபெற்று வரும் சூழலில், தேசியக் கட்சியான காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த முதற்கட்டத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலில் வழங்கப்பட்டதை விடக் கூடுதல் இடங்களை காங்கிரஸ் கோரிய நிலையில், தற்போது 28 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், இரு தரப்பு உயர்மட்டத் தலைவர்களுக்கிடையே பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக, செல்வாக்கு மிக்க தொகுதிகளைக் கண்டறிந்து, அங்கு வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது. தகவலின்படி, 28 தொகுதிகள் என்பது உறுதியானால், அது திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு வழங்கப்பட்ட ஒரு கௌரவமான எண்ணிக்கையாகப்…

Read More

இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள பிரேசில் அதிபர் லூலா டி சில்வா, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், இரு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. https://x.com/ANI/status/2025124870364037244? அதிபர் லூலா மற்றும் அவரது உயர்மட்டக் குழுவினரை வரவேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “அதிபர் லூலாவையும் அவரது குழுவினரையும் இந்தியாவிற்கு வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா – பிரேசில் இடையிலான உறவுகள் நீண்ட காலமாக அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் ஊக்கமளிக்கும் தலைமையால் பெரும் பலன்களைப் பெற்றுள்ளன” என்று புகழாரம் சூட்டினார்.…

Read More

டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் தலைநகரான தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதிகளில் குண்டுவெடிப்பு நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த லக்‌ஷர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பு இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்புக்குத் தகுந்த பதிலடி கொடுக்கவே, இந்தியாவில் இத்தாக்குதலை நடத்த லக்‌ஷர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டைக்கு எதிரே உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாந்தினி சௌக் பகுதிகளைப் பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளனர். குறிப்பாக, ஐஇடி (IED) வெடிகுண்டுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் மாதம் 10ம் தேதி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புச்…

Read More

புதுச்சேரியில் ஆளும் பாஜக – காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவுகிறது. டெல்லியில் நடைபெற்ற ஏ.ஐ. (AI) உச்சிமாநாட்டின் போது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அரை நிர்வாணமாகப் போராட்டம் நடத்தி நாட்டின் நற்பெயரைக் குலைத்துவிட்டதாகக் கூறி, நேற்று புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகம் முன்பாக பாஜக இளைஞர் அணியினர், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இன்று சனிக்கிழமை புதுச்சேரி மாநில பாஜக அலுவலகத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்தனர். பிரதமர் மோடியின் உருவப் பொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். அப்போது, அங்கு ஏற்கனவே திரண்டிருந்த பாஜக தொண்டர்களுக்கும் காங்கிரஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்கள் மற்றும் காலணிகளை வீசித் தாக்கிக் கொண்டனர். காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்குக் காயம்…

Read More

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பல்வேறு வியூகங்களுடன் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், தேர்தல் பணிகளை முன்கூட்டியே திட்டமிடவும் “சட்டப்பேரவை தேர்தல் முதன்மை கண்காணிப்பாளர்கள்” பட்டியலை தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெக-வில் இணைந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கு இந்த பட்டியலில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். https://x.com/TVKVijayHQ/status/2025101270479241685? அதாவது புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்தப்படியாக செங்கோட்டையன் பெயர் இடம்பெற்றுள்ளது. கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளராகவும், தவெக-வின் நிர்வாகப் பிரிவை வழிநடத்தும் முக்கியத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, செங்கோட்டையனின் கோட்டையாகக் கருதப்படும் ஈரோடு மற்றும் கொங்கு மண்டலத்தின் தேர்தல் பணிகளைக் கண்காணிக்கும் முழு அதிகாரமும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருடன் தவெகவில் இணைந்த முன்னாள் எம்.பி.…

Read More