Author: Editor web3

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததையடுத்து “200 தொகுதிகளில் வெற்றி” என்ற முதல்வரின் முயற்சி எளிதாகும் என திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இது பற்றி அறிவாலய வட்டார தகவல் தெரிவிப்பது, “தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் உறுதியாக வரும் என எதிர்பாத்த அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இதன்மூலம் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி வலிமையடையும் என எதிர்பார்த்தவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போயுள்ளது. வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாலேயே தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா திமுக கூட்டணிக்கு வந்துள்ளார். ஈஷா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியோடு பிரேமலதா பங்கேற்றதை வைத்து அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும்; தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாகும் என செய்தி பரவியது. அப்படிப்பட்ட சூழலில் பிரேமலதா எடுத்த முடிவு அந்தக் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததால் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியாக தேமுதிக…

Read More

பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தில் இந்தியா 175 ரன்கள் குவிக்க, பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்குச் சுருண்டது. ஆனால், இந்த வெற்றிக்கும் மேலாக ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் உலக சாதனை தற்போது வெளியாகியுள்ளது. ஜியோஸ்டார் (JioStar) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தப் போட்டியை டிஜிட்டல் தளத்தில் மட்டும் சுமார் 163 மில்லியன் (16.3 கோடி) மக்கள் பார்த்துள்ளனர். இது எந்தவொரு ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இதுவரை இல்லாத ஒரு மிக உயர்ந்த டிஜிட்டல் ரீச் ஆகும். 2024 இறுதிப் போட்டியை முறியடித்தது: கடந்த 2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப் போட்டியின் சாதனையை இந்த ஒரு லீக் போட்டி முறியடித்துள்ளது. அசுர வளர்ச்சி: 2024-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிடுகையில், இந்த முறை டிஜிட்டல்…

Read More

டிஜிட்டல் யுகத்தில் மோசடி செய்வது என்பது முன்பை விட இப்போது மிகவும் கடினமாகிவிட்டது; ஒரு நபர் எவ்வளவுதான் தந்திரமாகச் செயல்பட்டாலும், கணினியில் விடப்படும் டிஜிட்டல் தடயங்கள் இறுதியில் உண்மையை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன. அப்படித் தற்செயலாகக் கண்டறியப்பட்ட ஒரு சில “காணாமல் போன” பிரியாணி பில்கள் தான், இந்தியாவையே உலுக்கிய சுமார் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு மோசடியை அம்பலப்படுத்தின. 2019-ம் ஆண்டு முதல் சுமார் 1.77 லட்சம் உணவகங்களின் பில்லிங் தரவுகளை ஆய்வு செய்ததில், சராசரியாக 27% விற்பனை விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது; இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.70,000 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டதால், அரசுக்கு பில்லியன் கணக்கிலான டாலர்கள் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளும், தெலங்கானாவில் ரூ.1,500 கோடி மதிப்பிலான விற்பனை விவரங்களும் நீக்கப்பட்டுள்ளன; இதேபோல தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களிலும் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.…

Read More

மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீது ஒரு வரையறுக்கப்பட்ட ராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன; இதற்குப் பதிலடியாகத் தெஹ்ரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில், அடுத்த 10 நாட்கள் மிகவும் முக்கியமானவை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார், ஆனால் அதே சமயம் ஈரான் மீதான தாக்குதல்களுக்குத் தனது வான்படைத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரிட்டன் அனுமதி மறுத்துள்ளது இந்த விவகாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்குப் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம் எனத் தெஹ்ரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது; இது தொடர்பாக ஐநா சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில், போர் மூழும் பட்சத்தில் பிராந்தியத்தில் உள்ள எதிரிப் படைகளின் தளங்கள், ராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் ஈரானின் “சட்டபூர்வமான இலக்குகளாக” (Legitimate targets) கருதப்படும் எனத்…

Read More

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு அரசியல் சூடு பிடித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திடீர் திருப்பமாக நேற்று திமுக கூட்டணியில் இணைந்தது. இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில்  பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் உடன் இருந்தார். சந்திப்பையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் கூறியதாவது; “திமுகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி சிறப்பான ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்தேன். சிறப்பான ஆட்சியினால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்” என்றார். தொடர்ந்து திமுகவில் இணைவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஒ. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவிக்காமல் காரில் ஏறி சென்றார். இது அரசியலில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. பிரேமலதாவை தொடர்ந்து ஓபிஎஸும் திமுகவில் இணைய…

Read More

திமுக – தேமுதிக கூட்டணி குறித்து தமிழக வெற்றிக்கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வரும் காலத்தில் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதுதான் இன்று மக்களின் கனவாக உள்ளது என்றார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது தொடர்பாக பேசுகையில் அது அவர்களுடைய விருப்பம். நீங்க எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் செல்லலாம். எங்கிருந்தாலும் வாழ்க என பதிலளித்தார். மேலும் தவெகவின் கூட்டணி குறித்து பேசிய அவர், ஒவ்வொருவரும் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார்கள். கூட்டணியை பொறுத்த அளவில் எந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதை…

Read More

தமிழக நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விரிவான விசாரணையை மேற்கொண்டிருந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை 2 முறை கடிதம் எழுதி இருந்தது. இருப்பினும், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் ஜே.எஸ். இன்பதுரை கடந்த மாதம் 7-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அமலாக்கத்துறை வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக…

Read More

இந்திய வீடுகளில் ரொட்டி ஒரு முக்கிய உணவுப் பொருளாகும். ஆனால் ரொட்டி முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? “மனித குலத்தின் மிகப்பழமையான உணவுகளில் ஒன்றான ரொட்டி, மனித நாகரிகத்தின் வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்புடையது. இன்று இந்திய உணவுகளில் பிரிக்க முடியாத அங்கமாக ரொட்டி இருந்தாலும், இதன் கதை இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றிற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. தொல்பொருள் கண்டுபிடிப்புகளின்படி, மனிதன் விவசாயம் செய்யத் தொடங்குவதற்கு முன்பே ரொட்டியைத் தயாரித்துள்ளான் என்பது வியப்பிற்குரிய உண்மை. அப்படியென்றால், உலகின் முதல் ரொட்டி எங்கே செய்யப்பட்டது? உலகின் பழமையான ரொட்டி: ஜோர்டானின் வடகிழக்கு பாலைவனத்தில் உலகின் பழமையான மீதமுள்ள ரொட்டித் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த எச்சங்கள் தோராயமாக 14,400 ஆண்டுகளுக்கு முந்தையவை, ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயம் வருவதற்கு சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தையவை. இந்த ரொட்டி பார்லி, ஓட்ஸ் மற்றும் கிழங்குகள் போன்ற நிலத்தில் வெட்டப்பட்ட காட்டு…

Read More

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விட்டு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா? எனக் கூறி, நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என்று ராமதாஸ் தரப்புக்கு எச்சரிக்கை நீதிபதிகள் எச்சரிக்க விடுத்துள்ளனர். பா.ம.க. தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நிறுவனர் ராமதாசை தலைவராகவும், அவர் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று, பா.ம.க. சார்பில் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, உள்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, பா.ம.க. சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.…

Read More

குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைபிடித்ததற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 17ம் தேதி தொடங்கியது. அன்றைய நாளில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையையும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் பதிலுரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் அவைக்கு செல்லவில்லை. இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது, “கடந்த 5 ஆண்டுகாலத்தில் 5 நிதிநிலை அறிக்கைகள், இந்தாண்டு இடைக்கால பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை சமர்பித்துள்ளோம். இந்த நேரத்தில் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் இருவரும் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கியிருக்கிறார்கள். அதனை 2 மாதங்களில் மீண்டும் வந்து தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டைப் போல எனக்கும் இருக்கிறது.  எனக்கு தரப்பட்ட…

Read More