Author: Editor web3

“பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகை, பிரான்ஸ் நாட்டின் மிக முக்கியமான சட்டங்களில் ஒன்றின் மீது மீண்டும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்சில், வணிக ரீதியாக உண்ணக்கூடிய உணவை வீணாக்குவது ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு உணவுகளைக் குப்பையில் கொட்டினால், அவர்களுக்கு 75,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 80 லட்சம் ரூபாய்) வரை அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். இத்தகைய உணவுகளைத் தொண்டு நிறுவனங்களுக்குத் தானமாக வழங்குவது அங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மீதமாகும் உணவுகளைக் கட்டாயமாகத் தொண்டு நிறுவனங்களுக்குத் தானமாக வழங்க வேண்டும் என்பது விதியாகும். உலகிலேயே இத்தகைய சட்டத்தைக் கொண்டுவந்த முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின்படி, 400 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், விற்பனையாகாத மற்றும் உண்ணக்கூடிய உணவுகளைக் குப்பையில் கொட்டத் தடை விதிக்கப்பட்டது. மாறாக, அத்தகைய கூடுதல் உணவுகளைத் தொண்டு நிறுவனங்களுக்கும்…

Read More

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வந்த ஓ. பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பு மூலம் தனியாக செயல்பட்டு வருகிறார். ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, கடந்த ஜன. 21ம் தேதி திமுகவில் இணைந்தார். முன்னதாக, ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் திமுகவிலும் ஜே.சி.டி. பிரபாகர் தவெகவிலும் இணைந்தனர்.  கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ஓபிஎஸ் காலதாமதப்படுத்துவதால், அவரின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் திமுக-அதிமுக உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை மவுனமாக இருந்த பிரேமலதாவும், நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைவிட்டார். மறுபுறம் தனிமரமாக இருக்கும் ஓ.பி.எஸ்., என்.டி.ஏ. கூட்டணியில் இணைய…

Read More

ஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவல்களை பராக் ஒபாமா கசியவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு  நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மீது ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏலியன்கள் (வேற்று கிரக வாசிகள்) தொடர்பான ரகசியத் தகவல்களை ஒபாமா கசியவிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இது அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் (UAP) மற்றும் பறக்கும் தட்டுகள் (UFO) குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. அதிபர் பதவியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் ரகசிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஒபாமா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தால், அது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான தகவல்களை வெளியிடுவதற்குச் சமம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் – ஒபாமா: டிரம்ப் கூறியதாவது,”இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதரிக்க அவர் (ஒபாமா) எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. ரகசியத் தகவல்களிலிருந்து இதைப் பகிர்ந்துள்ளார். அவர் இதைச்…

Read More

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிறகு 2023ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொறு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.16 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில், தற்போது தமிழகத்திற்கு தேர்தல் நெருங்கும் வேளையில் கடந்த 14ம் தேதி காலை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ரூ.5000 பெண்களுக்கு வரவு வைத்தது. இதனால் தமிழக பெண்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து…

Read More

இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்றத்திற்கு வராமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 17ம் தேதி 2026 – 2027ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண்மை பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். விவாதத்தின் நிறைவு நாளான நேற்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அவருடைய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.  இருப்பினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவாதத்தின்போது அவையில் இல்லை. இந்த நிலையில், சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்கி வருகின்றனர்.…

Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக மண்டல வாரியாக இளைஞரணி, மகளிரணி, வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். அதிமுக கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே திமுக மகளிரணி மாநாட்டை நடத்திவிட்டனர். அதனுடன் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்கள். திமுகவுக்கு கடந்த காலங்களில் கொங்கு மண்டலம் சாதகமாக இருந்ததில்லை. இந்தமுறை செந்தில் பாலாஜியை திமுக மேற்கு மண்டல தளபதியாக களமிறக்கியுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அந்தக் கட்சியினரும் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்தநிலையில், கோவையில் திமுக மாநாடுகளை நடத்தும் பணியில் செந்தில் பாலாஜி தீவிரமாக இறங்கியுள்ளாராம். அதாவது, அதன்படி வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)…

Read More

கமல்ஹாசன் ஏற்பாட்டில் நாளை மதுரையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் இணைந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களமும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. அந்தவகையில், கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு போற்றும் நிகழ்ச்சி Rememberimg Bapuji & Brothers என்ற தலைப்பில் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன், காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். நாளை மறுநாள் முதல் கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை திமுக நடத்த உள்ள நிலையில் நாளைய தினம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளனர். இதில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய ஆலோசனை…

Read More

உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிந்து போயிருக்கும் என்ற வைகோவின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக கூட்டணியில் கூடுதல் சீட் வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்து வருகிறார். இதே போன்று காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்படும் உட்கட்சி பூசல்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், மாணிக்கம் தாகூர் பேசி வருவது உள்ளூர் சண்டை போல இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது வழக்கம் தான். அவர்களின் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிந்து போயிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. அதேசமயம் அக்கட்சி சொல்வதை எல்லாம் திமுக கருத்தில் எடுத்து கொள்ள வேண்டியதில்லை என்று வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்து…

Read More

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியாததால் 234 தொகுதிகளுக்கும் பிரத்யேக வீடியோ பிரசாரம் செய்ய தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கிடைத்த பனையூர் வட்டார தகவலின் படி, “தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் பின் விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளை தொடர்ந்து திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் பிரசாரம் செய்துள்ளார். அடுத்ததாக வேலூரில் வரும் 23ல் கூட்டம் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 27 மாவட்டங்களுக்கு விஜய் ஒருமுறை கூட இன்னும் செல்லவில்லை. மார்ச் முதல் வாரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பின் முக்கிய நகரங்களுக்கு மட்டுமே செல்ல விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி பல மாவட்டங்களுக்கு விஜய்யால் நேரடியாக செல்ல முடியாது. இதனால் முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை தவிர, 234 தொகுதிகளிலும் வீடியோ பிரசாரம் செய்ய…

Read More

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு தடத்தில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும், 2.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் எழும்பூரில் வழக்கமாக நின்று செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடையில் இனி ரயில்கள் இயக்கப்படாது. அதற்கு பதிலாக 5 மற்றும் 6 நடைமேடைகளில் இனி புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ரத்து காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்…

Read More