Author: Editor web3

தமிழக அரசியல் களத்தில் தனித்துப்போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை உயர்த்தி வரும் நாம் தமிழர் கட்சி, சமீபத்திய தேர்தல்களில் எதிர்கொண்ட சவால்களைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு புதிய அதிரடி வியூகத்தை வகுத்து வருகிறது. 2021 தேர்தலில் காரைக்குடியை உள்ளடக்கிய சிவகங்கை தொகுதியில் நாதக 14.80% வாக்குகளை பெற்றது. அதேபோல்,  கடந்த 2024 தேர்தலில் ஒரேயொரு தொகுதியில் மட்டும் டெபாசிட் பெற்றுத் தனது செல்வாக்கை நிரூபித்திருந்தது. இதனை ஒரு பின்னடைவாகப் பார்க்காமல், அங்கிருந்து ஒரு மாபெரும் வெற்றியை நோக்கி நகர சீமான் திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு திருச்சியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிவிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பிஸியாக இருக்கும் வேளையில், தனித்து நின்றே…

Read More

உலக நாடுகளுடனான வர்த்தகத்தில் அதிரடி மாற்றத்தைப் புகுத்தும் வகையில், அமெரிக்கா தற்போது 10% உலகளாவிய வரியை (Global Tariff) உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அளித்த விளக்கத்தில், புதிய சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் வரை இந்த 10% வரி நடைமுறையிலேயே இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இந்தியா இந்த வரியிலிருந்து தப்பிக்குமா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இந்தியாவும் இந்த 10% வரியைச் செலுத்த வேண்டிய நாடுகளின் பட்டியலில் உள்ளது” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கு முன்பு ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின்’ (IEEPA) கீழ் விதிக்கப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, இனி இந்த 10% வரி நடைமுறையில் இருக்கும் என்று தெரிகிறது. மேலும், அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஏற்கனவே உள்ள வர்த்தக ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திடீர் வரி உயர்வு இந்திய ஏற்றுமதியாளர்கள்…

Read More

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக ரூ.1,020 கோடி ஊழல் புகாரை முன்வைத்து, அதிமுக தரப்பு முக்கிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு டெண்டர்களில் (Tenders) மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது. குறிப்பாக, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 7.5% முதல் 10% வரை கமிஷன் பெறப்பட்டதாகவும், அந்தத் தொகை ‘கட்சி நிதி’ என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அளித்த 258 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அதிமுக எம்.பி. இன்பதுரை உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க நேற்று (பிப்ரவரி 20, 2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களில் வாட்ஸ்அப்…

Read More

“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி! நம் தமிழைக் காத்து – அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு”! என்று வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.

Read More

தமிழக அரசியல் களம் தேர்தல் கூட்டணிகளால் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு எதிராக ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல மாதங்களாக தேமுதிகவுடன் அதிமுக தலைமை தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், திடீரென தேமுதிக திமுக கூட்டணியைத் தேர்வு செய்தது எடப்பாடி பழனிசாமியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஏமாற்றத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தேமுதிகவுக்கு ஒரு ‘புதிய ஸ்கெட்ச்’ போடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, திமுக கூட்டணிக்குச் சென்ற தேமுதிக தலைமையின் முடிவில் அதிருப்தியில் இருக்கும் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான முக்கிய நிர்வாகிகளை வளைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒரு ‘சீக்ரெட் அசைன்மெண்ட்’ வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேமுதிக அதிருப்தியாளர்களை நேரில் அணுகி, அவர்களைப் பேச்சுவார்த்தை மூலம் அதிமுகவுக்கு அழைத்து வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேமுதிகவின் அடித்தளத்தை…

Read More

உங்ககிட்ட இப்போ ஒரு 500 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ கண்டிப்பா நீங்க உஷாரா இருக்கணும்.. ஏன் என்றால் அது கள்ள நோட்டாகக் கூட இருக்கலாம். மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த பின்பு புதிதாக வெளியிட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் உயர்தர பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட நோட்டுகளாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது இருப்பினும், இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. கள்ள நோட்டுகளையும் கருப்பு பணத்தையும் ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது புதிய 200 ரூபாய் நோட்டுகளின் கள்ள நோட்டுகளின் புழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. போலி ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படும் மையின் நிழல், எழுத்துக்களின் வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் அசல் 200 ரூபாய் நோட்டுடன் மிகவும் ஒத்திருக்கும் வகையில் இந்த போலி நோட்டுகள் உலா வருகின்றனர். அச்சு அசல் போல் இருக்கும் போலி…

Read More

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை  (பிப்.20)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கும், சவரன் ரூ.640 ரூ. 1,15,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (பிப்.21)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ260 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,680க்கும், ரூ.2,080 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,17,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 அதிகரித்து ரூ.2 லட்சத்து 90,000க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.290க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. அந்த வகையில், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் முக்கியக் கட்டமாக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு சிறப்புக் குழுவை திமுக தலைமைக்கழகம் அமைத்துள்ளது. இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி உடன்பாடுகளை இறுதி செய்வதற்காக இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த குழுவின் தலைவராகக் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றும் குழு…

Read More

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, டெல்லி போலீசார் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR), பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொள்ளுதல், காவல்துறையினரைத் தாக்குதல் மற்றும் சட்டம் ஒழுங்குக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்சிமாநாட்டின்  5-வது அரங்குக்குள் நுழைவதற்காக முன்னதாகவே ஒரு QR குறியீட்டை  உருவாக்கியுள்ளனர். பின்னர், தாங்கள் அணிந்திருந்த வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை ஸ்வெட்டர்களுக்கு அடியில் மறைத்து வைத்துக்கொண்டு ரகசியமாக உள்ளே நுழைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகத் தெரிவதாக ஏசிபி மஹலா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில்,…

Read More

நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஸன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ளப் படம் தாய் கிழவி.  இப்படத்தில் ராதிகா 75 வயது மூதாட்டியாக ‘பவுனுத்தாயி’ என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்.27ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ராதிகாவின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கும். அப்போஸ்டரை ரீகிரியேட் செய்து தமிழ்நாடு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளன.  தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தாய் கிழவி ராதிகாபோல சித்தரித்து, இயக்கம் ஆர்.எஸ்.எஸ். எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை ஒன்றை வெளியிட்டுள்ளது. லூட்டஸ் புரொடக்ஷன்ஸ்” (Lootus Productions), ஓடுங்க அது நம்மள நோக்கிதான் வருகின்றது போன்ற கிண்டலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இதற்குப் பதிலடியாக, பாஜக தரப்பில் சோனியா காந்தியை சித்தரித்து மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அவர் கையில் துடைப்பம் வைத்திருப்பது போன்றும், 2ஜி ஊழல், போஃபர்ஸ்…

Read More