Author: Editor web3

அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அதிமுக திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே! இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன். நேற்று மாலை, தனது தொடர் “ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்” அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய முதல்வர், “விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு” திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது. விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது,…

Read More

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. திமுகவுடன் முதல்முறையாக இணைந்துள்ளது தேமுதிக.இது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணிகள் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தரப்பில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிறு சிறு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இரு தரப்பும் முட்டி மோதி வந்த நிலையில் எந்த கூட்டணியிலும் சேராமல் இருந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் பிப்ரவரி 19ம் தேதியான இன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. காலை சுமார் 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் வந்த கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைத்துள்ளார். தேமுதிக யாரோடு இணையப்போகிறார்கள் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. இதையடுத்து முதல்வரை சந்தித்துவிட்டு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “திமுக கூட்டணியில் இணைந்ததில் மகிழ்ச்சி.…

Read More

தொண்டர்களின் விருப்பத்திற்காக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் இன்று இணைந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் கே.என். நேரு, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தொண்டர்களின் விருப்பத்திற்காக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதாக கூறினார். 2016ல் விஜயகாந்த் விரும்பியது 10 ஆண்டுகள் கழித்து நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை சீட்டுகள், போட்டியிடும் தொகுதிகளை திமுக-தேமுதிகவின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு முடிவு செய்யும் என்று கூறிய…

Read More

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் பிரேமலதா. இந்தற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! #DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! #வெல்வோம்_ஒன்றாக! என்று பதிவிட்டுள்ளார்.

Read More

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. சற்று முன் அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்ற பிரேமலதாவை உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா, எல்.கே. சுதிஷ் உள்ளிட்டோர் திமுகவுக்கு ஆதரவு அளித்து பேசியுள்ளனர். இதன் மூலம் 2005ல் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக, அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. NDA கூட்டணிக்கு தேமுதிக உறுதியாக வரும் என எதிரபார்த்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா விற்கு இது பெருத்த ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது. வலிமையான கூட்டணி அமையும் என எதிர்பார்த்த அதிமுக-பாஜக வின் எதிர்பார்ப்பு பொய்த்து உள்ளது. அதிமுக கூட்டணியா -திமுக கூட்டணியா என முடிவெடுக்காமல் இருந்து வந்த பிரேமலதா கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கூட்டணியான திமுக கூட்டணி பக்கம் வந்துள்ளார். ஈஷா மையத்தில் நடந்த மகா சிவ ராத்திரி நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணியோடு இணைந்து பிரேமலதா கலந்து கொண்டதை…

Read More

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கடைசியாக போட்டியிட்ட, அதிமுக இதுவரை வெற்றி கண்டிராத திருவாரூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. திருவாரூர் சட்டமன்றத் தொகுதி அரசியல், சமயம் ஆகியவைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாகும். மாவட்ட தலைநகராகவும் திருவாரூர் விளங்குகிறது. கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 2,374 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் அமைக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம். கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. சைவ மதத்தில் பெரிய கோயில் என்றழைக்கப்படுகின்ற தியாகராஜர் கோயில் இந்த தொகுதியில்தான் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக திருவாரூர் ஆழித்தேர் விளங்குகிறது. நீதி கேட்டு வந்த பசுவுக்காக தனது மகனைத் தேர்க்காலில் வைத்து கொன்ற மனுநீதிச் சோழன் அரசாண்ட ஊர் இது என ஆன்மீகவாதிகள் தெரிவிக்கின்றனர். இதுபோல் தமிழக அரசியல் வரலாற்றில் கோலோச்சிய மறைந்த…

Read More

கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும், 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும், நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.14,500-க்கும், சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

மண்டபம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மண்டபம், ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசந்துறை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மீன்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது…

Read More

தமிழகத்தில் புனித ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பது. இஸ்லாமிய மாதமான ரம்ஜான் மாத பிறை பார்த்து நோன்பு தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் ரம்ஜான் பிறை நேற்று இரவு காணப்பட்டது. இதனால் ரம்ஜான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி என்.பி. உஸ்மான் முஹியித்தின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பார்ந்த இஸ்லாமியப் பெருமக்களே. அஸ்ஸலாமு அலைக்கும். 18-02-2026 மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புனித ரமலான் மாதத்திற்கான முதல் பிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாளை (இன்று , 19-02-2026) முதல் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குவதாகத் தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி என்.பி. உஸ்மான் முஹியித்தின் பாகவி. மழாஹிரி காஸிமி…

Read More

தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் இடையே சலசலப்பு நீடித்து வருகின்றது. இந்தநிலையில், இன்று சட்டசபையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்லபெருந்தகை  ‘தொழிற்சாலை அதிகம் உள்ள திருப்பெரும்புதூர் தொகுதியில் பல சாலைகள் பழுதடைந்துள்ளது. 2வது முறை நீங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டாலும், தேர்தலுக்கு முன்பாக பழுதடைந்த சாலைகலை பழுது பார்த்து கொடுங்கள்’ என கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, “செல்வப்பெருந்தகையின் கோரிக்கை நியாயமானவை. எந்தெந்த சாலைகள் என்று முறைப்படி கடிதம் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், அடுத்த நிதியாண்டில் செய்து கொடுக்கிறோம்” என்றார்.

Read More