Author: Editor web3

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு பெண்களுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ – ‘விடியல் பயணம்’ – ‘தோழி விடுதிகள்’ – ‘புதுமை பெண் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கான ஆட்சியென நடைபெற்று வருகிறது. நமது சாதனைத் திட்டங்களால் பெண்கள் – வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்துள்ளனர். பெண்கள் பயனாளிகள் மட்டுமல்ல, மாநில வளர்ச்சியின் பங்குதாரர்கள் என்ற சீரிய சிந்தனையுடன் செயலாற்றும் ‘திராவிட மாடல் அரசு’ நிறைவேற்றியுள்ள நலத் திட்டங்களையும் – ‘பெண்களின் முன்னேற்றமே தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றம்’ எனும் கொள்கை உறுதியுடன் பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும் – சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்து சென்று சேர்ப்பதே இப்பரப்புரையின் நோக்கமாக இருக்க வேண்டும். இப்பரப்புரையை, வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் விதமாக தி.மு.கழகத்தின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாவட்டச் செயலாளர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டியலின்…

Read More

இந்தியாவின் தொழில் அதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் மோசடி மற்றும் பண மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து தப்பி ஓடினார். தற்போது இங்கிலாந்தில் உள்ளார். அவரை தப்பிய ஓடிய பொருளாதார குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதனை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் விஜய் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், கவுதம் அங்காத் கொண்ட அமர்வு, விஜய் மல்லையா இந்தியா திரும்பும் வரை இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. அவர் இந்தியாவுக்கு திரும்பும் எண்ணம் உள்ளதா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் தெரிவித்தது. இந்த நிலையில் அமித் தேசாய் என்ற வழக்கறிஞர் மூலம் விஜய் மல்லையா மும்பை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார். அதில் “இங்கிலாந்தில்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வலுவான பிரசாரத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தமிழகத்தில் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, வரும் மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், மார்ச் 6-ம் தேதி வேலூரிலும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே ஜனவரி 23-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் NDA கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். இப்போது அடுத்த கட்டமாக மதுரை மற்றும் வேலூர் பிரசாரங்கள் உறுதியாகியுள்ளன. மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடக்கும் பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார். இந்த நிகழ்ச்சி மதுரை ரிங் ரோடு மண்டேலா நகர் மைதானத்தில் நடைபெறும். கூட்டத்திற்கான முகூர்த்தக்கால் விழா ஏற்கனவே நடைபெற்றது. அதன்பிறகு மார்ச் 6-ம் தேதி வேலூரில் மற்றொரு…

Read More

நகரத்தில் ஆன்லைன் வாடகை வீடு தேடுபவர்களை குறிவைக்க சைபர் குற்றவாளிகள் புதிய நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆடம்பர வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளைத் தேடுபவர்களை எளிதில் சிக்க வைக்க இந்த மோசடி செய்பவர்கள் வேலை செய்கிறார்கள். இதுபோன்ற ஒரு சம்பவத்தில், பெங்களூரில் மருத்துவர் ஒருவர் ஏமாற்றப்பட்டார். மோசடி செய்பவர்கள் முதலில் ஆன்லைன் தளங்களில் வாடகைக்கு கிடைக்கும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். இந்த விளம்பரங்களில், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கவர்ச்சிகரமான, போலி புகைப்படங்களை அவர்கள் பதிவேற்றுகிறார்கள். இத்தகைய விளம்பரங்கள் Housing.com மற்றும் No Broker போன்ற பல பிரபலமான ரியல் எஸ்டேட் வலைத்தளங்களில் தோன்றுகின்றன. யாராவது இந்த விளம்பரங்களைப் பார்த்து, வீட்டை வாடகைக்கு எடுக்க ஆர்வம் காட்டி, அவர்களைத் தொடர்பு கொண்டவுடன், அவர்கள் மோசடிக்கு ஆளாக நேரிடும். மோசடி செய்பவர்கள் முதலில் இனிமையாகப் பேசுவதன் மூலம் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்கிறார்கள், பின்னர் வீட்டைப் பார்க்க நீங்கள் முன்பணம் செலுத்த…

Read More

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் விளாசியதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் 17 இடங்கள் முன்னேறி முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்தார் அதிரடி பேட்ஸ்மேன் இஷான் கிஷன். ஐசிசி இன்று புதன்கிழமை (பிப்ரவரி 18) தரவரிசைப் பட்டியலைப் புதுப்பித்துள்ளது, இதில் இஷான் கிஷன் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து இஷான் அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். முந்தைய போட்டியில், நமீபியாவுக்கு எதிராகவும் அவர் அரைசதம் அடித்தார்.  இதன் மூலம் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இஷான் 17 இடங்கள் முன்னேறியுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை அடித்த பிறகு பாதும் நிஸ்ஸங்கா மூன்று இடங்கள் முன்னேறியுள்ளார். கடந்த இரண்டு போட்டிகளில் பூஜ்ஜியத்திற்கு ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா, தரவரிசையில் எந்த இழப்பையும் சந்திக்கவில்லை, மேலும் முதலிடத்திலேயே நீடிக்கிறார். அதாவது, சில வாரங்களுக்கு முன்பு, இஷான் கிஷன் ஐசிசி…

Read More

ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 தமிழ்நாடு உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்கள் காலியாகின்றன.  இந்த 37 இடங்களுக்கான எம்.பிக்களை தேர்வு செய்ய மாநிலங்களவை தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை – மார்ச் 6 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9. போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு,…

Read More

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் யோகா மற்றும் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்படும் என்று சென்னை பட்ஜெட் 2026-27ல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் துறை வாரியாக 90 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 பூங்காக்களில் குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்களுடன் Inclusive Parks ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகராட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக 200 பூங்காக்ககளில் அறிவியல் பூர்வமாக தற்காலத்திற்கு ஏற்ற வகையில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.100 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஜார்ஜ்டவுன், கத்திவாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, இராமாபுரம், ஸ்ரீராம் நகர், நங்கநல்லூர், என்.ஜி.ஓ காலனி ஆதம்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம்…

Read More

இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் தொடங்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்த ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அறிக்கையில் முதல் பகுதியை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த அறிக்கையின் நகலை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கி, முதல்வர் பேசியதாவது, ”முன்னாள் முதல்வர் அண்ணா, தனது இறுதி உயிர் போல எழுதியது தான் மாநில சுயாட்சி கொள்கை. அவரது மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக கருணாநிதி வடிவமைத்து தந்தார். திராவிட ஆட்சியானது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு வழிகாட்டும் மாபெரும் முன்னெடுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை சட்டப்பேரவையில் வைக்க இருக்கிறோம். ஒரு மாநிலமாக மக்கள் காணும்…

Read More

ராஜ்ய சபா எம்பி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், அதிமுகவுக்கு 2 ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிமுக முக்கிய தலைகள் பலரும் ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு முட்டிமோதி காய்களை நகர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளும் திமுகவில் இருந்து 4, எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து ஒன்றும், அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஒன்றும் மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் என ராஜ்யசபாவில் மார்ச் 16 ஆம் தேதி தமிழகத்தின் சார்பில் 6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள் காலியாகின்றன. அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி.க்களாக உள்ள தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் தங்கள் பதவிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிகவிற்கு 2026 ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு பதவி வழங்கப்படும் என்று கையெழுத்துப் போட்ட கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி…

Read More

7.5% இட ஒதுக்கீட்டுக்காக போராடிய ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக  பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று அறிவித்திருந்தார், 2026-27-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், இன்று நடைபெற்றது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கேள்விக்கான விடைகள் அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  7.5% இட ஒதுக்கீடு கொண்டு வர வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்டு பேசினார். இதற்கு ஆத்திரமடைந்த அதிமுகவினர், 7.5% இட ஒதுக்கீட்டை தாங்கள் தான் கொண்டுவந்தோம் என்றும் கூறி கடும் எதிர்ப்பு…

Read More