Close Menu
    What's Hot

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலமைச்சரின் திடீர் செயல் ; பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை
    Featured

    முதலமைச்சரின் திடீர் செயல் ; பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    018 cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் திடீரென மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால், பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர்  திடீரென தலைமைச் செயலகம் வெளியே பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதற்காக வாகனத்தை நிறுத்துவதால்  பாதுகாப்பு குறைபாடுகளை கலைவதற்காக தலைமைச் செயலகம் சுற்றியுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் பழுது நீக்கி (service) செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதால் அனைத்து கேமராக்களையும் முறையாக இயங்குகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது

    தமிழ்நாடு முதலமைச்சரை பாரப்பதற்காக தினமும் தலைமைச் செயலகம் வெளியே சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மாலை நேரங்களில் கூடி தமிழ்நாடு முதலமைச்சர் செல்லும் பொழுது அவருக்கு கையசித்து மகிழ்ச்சி வெளிப்படுகின்றனர் முதலமைச்சரும் அவரைப் பார்க்க வந்தவர்களுக்கு கை அசைத்து அவர்களை ஆரவாரப்படுத்துகிறார்

    தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ தினமும் வீட்டிற்கு செல்கிறார்

    சில தினங்களுக்கு முன்பு திடீரென தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே செல்லும் பொழுது மனுக்களோடு நின்றிருந்த பொது மக்களிடம் பாதுகாப்பு வாகனங்களை நிறுத்த கூறி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்

    தலைமைச் செயலகம் உள்ளே வருபவர்கள் பலத்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு உள்ளே வருகிறார்கள். ஆனால் தலைமைச் செயலகம் வெளியே நிற்கக்கூடிய பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வந்து நிற்கக்கூடிய பகுதியாக இருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.

    தலைமைச் செயலகம் வெளியே உள்ள ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கியில் இருந்து போர் நினைவு சின்னம் வரை உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் தலைமைச் செயலகம் உள்ளே உள்ள கண்ட்ரோல் ரூமில் நேரலையாக பார்க்க முடியும். காவல்துறையினர் அங்கு அமர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

    முதலமைச்சர் திடீரென பாதுகாப்பு வாகனங்களை நிறுத்த கூறி மனுக்களை பெறுவதால் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாமல் இருப்பதற்காக தலைமைச் செயலகம் சுற்றியுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் சரி செய்வது பழுது நீக்குவது என தற்போது செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முதலமைச்சருக்கு மத்திய பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் உயரிய பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

    அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் தலைமைச் செயலகத்தை சுற்றியோ அல்லது முதலமைச்சர் வெளியே செல்லும் பொழுது மனுக்கள் கொடுப்பது போல ஏதேனும் தவறான செய்கைகளோ அல்லது பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகளையோ செய்து விடக்கூடாது என்பதற்காக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை பழுது நீக்குவது, சர்வீஸ் செய்வது என அனைத்து கேமராக்களையும் ஆய்வு  செய்ய அதற்கான பொறியாளர்களை அழைத்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    Chief Minister Government Action security arrangements security measures State Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுற்ற வழக்குகளில் வழிகாட்டு நெறிமுறை; மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Next Article சீனாவை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு..!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!
    Editor TN Talks

    Related Posts

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    July 8, 2026

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    July 8, 2026

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்… கம்பீரின் புதிய வியூகம் என்ன..??

    ”எவ்வளவு பெரிய அணை கட்டினாலும் காவிரி தமிழகம் வந்தே தீரும்” – மு. வீரபாண்டியன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.