Close Menu
    What's Hot

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»குற்ற வழக்குகளில் வழிகாட்டு நெறிமுறை; மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    குற்ற வழக்குகளில் வழிகாட்டு நெறிமுறை; மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 forensic
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குற்ற வழக்குகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரை ஊத்தங்குடியை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், அரசு மருத்துவமனைகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகள் நடத்துவதில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இது குற்ற வழக்கு புலன் விசாரணையிலும், மருத்துவ ஆதாரங்களை பாதுகாப்பதிலும் பிரச்சனையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அறிவியல் அலுவலர் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை 2020ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்திருந்தும், அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த மருத்துவ ஆதாரங்கள் சேகரிப்பதில் பல குறைபாடுகள் உள்ளன; உடற்கூராய்வுக்கு பிறகு தவறான உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவங்களும் நடந்துள்ளன; இன்னும் சில நிகழ்வுகளில் மரணமடைந்து விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்ட நபர்கள், பின்னர் உயிருடனும் கண்டுபிடிக்ப்பட்டுள்ளார்கள் என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனை பிணவறைகளில் அடையாளம் காணப்படாத உடல்கள் ஆண்டு கணக்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். தற்போது வரை தமிழநாட்டில் தடயவியல், உடற்கூராய்வு நடைமுறைகளுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    தடயவியல் ஆதாரங்கள் , குற்ற நீதி பரிபாலனத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; மருத்துவ ஆதாரங்களை சேகரிப்பதிலும், பாதுகாப்பதிலும் குறைபாடுகள் எழுந்தால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதால், குற்ற வழக்குகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, வழக்கு குறித்து மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    Court Order Criminal Cases High Court judicial directions legal guidelines State Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவயநாடும்.. மீண்டும் ஜூலை துயரமும்!. இயற்கை கோரத்தாண்டவத்தின் வலியும் வடுக்களும்!
    Next Article முதலமைச்சரின் திடீர் செயல் ; பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை
    Editor TN Talks

    Related Posts

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    July 8, 2026

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    July 8, 2026

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்… கம்பீரின் புதிய வியூகம் என்ன..??

    ”எவ்வளவு பெரிய அணை கட்டினாலும் காவிரி தமிழகம் வந்தே தீரும்” – மு. வீரபாண்டியன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.