Author: Editor web3
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, பிப்.20-ந்தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை அமர்வில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும், பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக பிப்.20-ந்தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரையாற்றுவார் என்றும் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும் என்று குறிப்பிட்டார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், திமுக அரசின் தற்பெருமைகளே அதிகமாக இருந்தன என்று தவெக அருண்ராஜ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், திமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் முதல்வரை பாராட்டு மழையில் நனைய வைத்திருக்கிறார் நிதியமைச்சர். முதலமைச்சரை பாராட்டுவதையும், தற்பெருமை பேசுவதையும்விட இந்த பட்ஜெட்டில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. 11.19% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிப்பதாக பெருமை பேசியிருக்கிறார் நிதியமைச்சர். அதேநேரத்தில் தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10.62 லட்சம் கோடியாக இருக்கும் என்ற தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியையும் கூறியிருக்கிறார். பொருளாதாரத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கும்போது இத்தனை லட்சம் கோடி ரூபாயை எதற்காக கடன் வாங்க வேண்டும்? பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யாத திமுக அரசு எதற்காக இத்தனை கோடி ரூபாயை கடன் வாங்கியது…
வரும் 23ம் தேதி தவெக தலைவர் விஜய் வேலூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தவுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதே அனைத்துக் கட்சியினரும் தங்களது பிரச்சார வியூகத்தை அமைத்து களத்தில் குதித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு ஊர்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் கரூரில் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதன் பிறகு கூட்டங்கள் எதிலும் பங்கேற்காமல் இருந்த அவர், கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். கரூர் சம்பவத்துக்கு பின் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…
இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக இடைக்கால பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2026-27ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தனர். தேர்தல் வரும் சயத்தில் மக்களை ஈர்பதற்காக புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அத்தகைய புதிய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக இடைக்கால பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை…
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இடைக்கால வேளாண் பட்ஜெட்டை உழவர் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்ணுயிர் காப்போம் திட்டத்தால் 21 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் மண்ணுயிர் காப்போம் திட்டம் ரூ.178 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 58,000 ஹெக்டேர் தரிசு நிலம் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேழ்வரகு விளைச்சலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும் என்றார். தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் 178 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எண்ணெய் வித்து பயிர்களின் பரப்பை அதிகரிக்க…
நிதிநிலை அறிக்கையானது வார்த்தை ஜாலங்கள் நிறைந்த துறையாக தான் இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 2மணி நேரத்திற்கும் மேலாக வாசித்தும் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”5 ஆண்டாக மக்களை வாட்டி வதைத் திராவிட மாடல் என்கிற ஏமாற்ற மாடல் திமுக அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த அரசு எந்த ளவிற்கு மக்களுக்கு காது குத்துகிறது என்பதை நாட்டு மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக இந்த அழைப்பிதழை உங்களிடம் கொடுத்திருக்கிறோம். 2021 ல் திமுக சட்டமன்றத் தேர்தலின் போது 535 வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அதில்…
தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் மொத்தமாக 2மணிநேரம் 22 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்தார். இது கடந்தாண்டு அவர் வாசித்த முழு பட்ஜெட்டை விட 16 நிமிடங்கள் குறைவாகும். (கடந்த 2025ல் 2 மணி நேரம் 38 நிமிடங்கள்). முன்னதாக, பட்ஜெட் தாக்கலின்போது, 2025-26 நிதி ஆண்டில் ரூ.69 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2026-27 நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி நிலுவையில் உள்ளது. 2025-26ல் தமிழகத்தின் கடன் நிலுவைத் தொகை ரூ.9.52 லட்சம் கோடி. இடைக்கால பட்ஜெட்டின் படி தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் ரூ.10.62 லட்சம் கோடி. மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் தாண்டி தமிழக அரசு சாதனை. தமிழக அரசின்…
இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதாவது, டாக்டர் கலைஞர் விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு 16,798 விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 4,226 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான விளையாட்டுக் கருவிகளைத் தமிழ்நாடு வாகையர் அறக்கட்டளை வழங்கி உள்ளது. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு 101 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா-இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளை நடத்திட 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடே வியக்கும் வண்ணம் கடந்த 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட்…
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரிவருவாய் ரூ.2.06 லட்சம் கோடி என்றும் மேலும், 11.15 சதவீதம் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கலின்போது, புயல், பெரு வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறம்படக் கையாண்டது. ரூ.50 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் நிதி கோரிய போதிலும் ரூ.1151 கோடி மட்டுமே கொடுத்தது. பேரிடர் நிவாரண நிதியில் சொற்பமான நிதியைத் தான் மத்திய அரசு கொடுத்தது. பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு தமிழகத்தில் ரூ.6,013 கோடி தான் கொடுத்துள்ளது. பேரிடர் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.9,160 கோடி செலவு செய்திருக்கிறது என்றார். இடைக்கால பட்ஜெட்டில் வறட்சி தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரிப் பகிர்வு பங்கை அதிகரிக்க வேண்டும் என கேட்ட…
2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ரூ.1000 கோடியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி, ரூ.44 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 29 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,317 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. 84 கோவில்களில் ரூ.425 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.…