Author: Editor web3
2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில், கப்பல் கட்டுமானத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கை விரைவில் வெளியிடப்படும். தொழில் முதலீடு ஊக்குவிப்புத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.10.70 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் ரூ.405 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு செமி கண்டக்டர் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை பரவலான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை தரமணியில் செமி கண்டக்டர் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.819 கோடி நிதி…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரான செல்வப்பெருந்தகை அக்கட்சி தலைவராக பொறுப்பேற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில் அவரது இரண்டு ஆண்டு பணிகள் குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கடந்த 2024 பிப்ரவரி 17 ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். தலைவராக வர பதவியேற்கும் போது காங்கிரஸ் கட்சியை மீண்டும் பழையபடி வளர்த்தெடுக்க வேண்டும்; தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் வரை இருக்கும் காங்கிரசின் வேர்களை மீண்டும் துளிர்க்க செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பெரும் சவால்கள் அவர் முன் இருந்தன. அத்தகைய சவால்களை சரி செய்யும் வகையில் அவர் என்னென்ன முன்னெடுப்புகளை கட்சிக்குள் செய்துள்ளார் என்பதை பார்க்கலாம். கிராம கமிட்டி சீரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்கம்: காமராஜர் காலத்திலேயே உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் வாயிலாக கிராமங்கள் தோறும் கட்சியை கொண்டு சென்று வலுவான அமைப்பாக இருந்தது காங்கிரஸ். காமராஜருக்கு பின் வந்தவர்கள் யாரும் பெரிதாக…
2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில், இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு பதக்கம் பெற்றுத் தந்த 5403 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.176 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மூலம் ரூ.101 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 1.14 லட்சம் வீடுகள் ரூ.969 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளன. கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20,484 கி.மீ. சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 87 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பிக்க ரூ.809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரை மேம்பாட்டிற்காக ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறைக்கு…
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, பெண் ஓதுவார் நியமனம் தமிழக அரசின் மகத்தான சாதனை. 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டு பெண்கள். ஏழை எளிய தாய்மார்களின் துயரை துடைக்கும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம். ரூ.1884 கோடியில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறையில் உள்ளது. 25 இடங்களில் மூத்த குடிமைக்களுக்காக அன்பு சோலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. * பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தில் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு, பணி உயர்விலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மிகவும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில்…
2026-27 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதோடு, வேலைகளில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதையும் தமிழக அரசு உறுதி செய்துள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.1,471 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ‘முதல்வர் காலை உணவு திட்டம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களின் வகுப்பறை வருகையையும் அவர்களின் கற்றல் திறனையும் அதிகரித்ததாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான நிதி அதிகரிப்பு: ஏற்றுமதியை அதிகரிக்கவும், பணவீக்கத்தைக் குறைக்கவும், தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் ஒரு மகத்தான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது; உணவு உற்பத்தியில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை அடைந்துள்ளோம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம்’: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (KMUT)…
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும்…
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அ.தி.மு.க. நூதன முறையில் விமர்சனம் செய்துள்ளனர். பட்ஜெட் என்ற பெயரில் ‘மாபெரும் காது குத்தும் விழா’ நடைபெற உள்ளது என பத்திரிகை அடித்து அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார். கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக காது குத்தும் விழா. விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி…
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான `பராசக்தி’ படத்திற்கு பிறகு, சிவா நடிக்கும் படத்தை யார் இயக்கப் போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சமீபத்தில் சிவா இது பற்றி பதில் அளித்த போது சீக்கிரமே அறிவிப்பு வரும் எனக் கூறியிருந்தார். இந்தநிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள படம், ‘தாய் கிழவி’. வரும் 27ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடிக்கும் 26வது படத்தை அவர் எழுதி இயக்கி வருகிறார். இப்படத்துக்கு ‘சேயோன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் துடிப்பு மிகுந்த அதிரடி யான வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. கிராமிய பின்னணியில் நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், பாடல்கள் என்று, குடும்பத்திலுள்ள அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் எண்டர்டெயினராக ‘சேயோன்’ உருவாக்கப்படுகிறது. ‘அமரன்’ படத்துக்கு பிறகு…
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிடப்போவதாக இந்திய குடியரசு கட்சி தலைவர் போட்டியிடும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அறிவித்திருப்பதால் நாம் தமிழர் கட்சியினர் ஒருவித அதிர்ச்சியில் உள்ளனர். இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே இரு தினங்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். சென்னையில் பேசும்போது, “தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., கூட்டணியில் எங்களது கட்சிக்கு 10 தொகுதிகள் கேட்டு உள்ளோம்; ஒருவேளை தொகுதிகள் ஒதுக்கவிட்டாலும் 51 தொகுதிகளில் எங்கள் கட்சியின் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் தனித்து போட்டியிடுவோம்” என்றார். ராம்தாஸ் அத்வாலேவின் இந்த அறிவிப்பு பாஜக கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். இது குறித்து ராவணன் குடில் வட்டார தகவல் சொல்வது, “நாம் தமிழர் என்றாலே ‘கரும்பு…
சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் ரூ.31.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை 1914ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக இங்கு வருகின்றனர். ஏழை எளிய மக்கள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், இந்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.31.47 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி அவர்களின் முயற்சியின் பேரில், கட்டப்பட்டுள்ள இதனை இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி…