Author: Editor web3
மேற்கு வங்கத்தில் SIR பணிகளில் அலட்சியமாக இருந்ததாக ஏழு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. SIR தொடர்பாக கடமை தவறியதாகவும், 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 13CC இன் கீழ் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தின் சக்ரவர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்ட தொடர் கடிதங்களில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தாமதமின்றி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, இந்த விஷயத்தை ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு பணியாளர் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்? இந்த 7 அதிகாரிகளில் 3 பேர் முர்ஷிதாபாத்திலும், 2 பேர் தெற்கு 24 பர்கானாவிலும், தலா ஒருவர்…
இன்ஸ்டாகிரமில் ஒரு போஸ்ட்டுக்கு நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி லைக் போடுகிறார் இப்படிபட்டவர் நாட்டுக்கு தேவையா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசி விமர்சித்து வருகின்றனர். மக்களிடம் ஆதரவு பெறவேண்டும் என்பதற்காக எதிர் தரப்பினரை குற்றம்சாட்டி பிரச்சாரம் செய்துவருவது வழக்கமாகிவிட்டது. அதன்படி, ஈரோடு பவானிசாகர் தொகுதி அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி தானாக அமைந்தது. இது வலிமையான கூட்டணி. திமுக – காங்கிரஸ் கூட்டணி இருப்பது சந்தேகம். காங்கிரஸ் ஆட்சியில் பங்கு தர வேண்டும், தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிடின் பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்பி ஒருவர் கூறியுள்ளார். காங்கிரஸ் – திமுக கூட்டணி கலக்கத்தில் உள்ளது. திமுக கெஞ்சிக்கொண்டு இருக்கிறது. படத்தில் ஒரு பாடல் இருக்கிறது..…
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றும், நேரில் ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது, மேலும் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையம் விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அந்தவகையில், அசாம் மாநிலத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சாந்து மற்றும் விவேக் ஜோஷி தலைமையிலான குழு இன்று முதல் பிப்.18ம் தேதி வரை பயணம் செய்கிறது. இவர்கள் மாநில தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரிகள், தலைமைச் செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர்…
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. தாறுமாறாக எகிறி வரும் தங்கம் விலை, நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மையால், உலக நாடுகள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருவதே, இந்த நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280க்கும், கிராமுக்கு ரூ. 160ம் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,16,480க்கும், ஒரு கிராம் ரூ.14,560க்கும் விற்பனை ஆனது. இந்தநிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று(பிப்.16) கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,440-க்கும், பவுனுக்கு ரூ.960 குறைந்து ஒரு பவுன் 1,15,520-க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ரூ.2 லட்சத்து 650க்கும் விற்பனையாகிறது
வாசுதேவநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) மனோகர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நிற்பதற்கு மனோகரனுக்கு ஜெயலலிதா சீட் கொடுத்தார். அப்போது 18,758 வாக்குகள் வித்தியாசத்தில் புதிய தமிழகம் கட்சியின் எஸ்.அன்பழகனை தோற்கடித்து மனோகரன் பெற்ற வாக்குகள் 73,904. இதன் தொடர்ச்சியாக 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவில் மீண்டும் சீட் கிடைத்தது. ஆனால் மதிமுக வேட்பாளர் டி.சதன் திருமலைக்குமாரிடம் அதிமுகவின் மனோகரன் தோல்வியை தழுவினார். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சீட் எதிர்பார்த்து மனோகரன் காத்திருந்தார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இம்முறை பாஜகவிற்கு வாசுதேவநல்லூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் அதிருப்தியில் இருந்த மனோகரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவில் சீட்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24ம் தேதி அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக களம் காண்கின்றன. அதன் ஒருபகுதியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தியுள்ளனர். ஆளும் திமுகவின் பிரச்சாரப் பயணம் தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது தேர்தல் தயாரிப்புகளைப் படிப்படியாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் முதல் ஆளாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 109வது பிறந்தநாளையொட்டி, தேர்தல் வாக்குறுதியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போதுவரை 2 கட்டங்களாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த நகர்வுகளில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். அதாவது, வழக்கமாக அரசியல் கட்சிகள் பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று தேர்தல் அறிக்கையை…
4 நாட்கள் பயணமாக இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஏ.ஐ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023- ஆம் ஆண்டு பிரிட்டனில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. 2024-ல் தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்றது. கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி வரும் 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியா குத்ரோஸ், இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க, பிரேசில் அதிபர் லூயிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேகிறார்கள்.…
டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அலி அகா பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் அடித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன்னும், ஷிவம் துபே 27 ரன்னும் எடுத்தனர். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்தியா அசத்தலாக பந்து வீசியது. முதல் ஓவரிலேயே, ஃபர்கான் விக்கெட்டை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். உஸ்மான் கான் ஒரளவு…
கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கானவர்களின் உணர்வாகவும், ஆயிரக்கணக்கானவர்களின் தொழிலாகவும் உள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, தற்போது உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இந்த விளையாட்டு, பல நாடுகளின் பொருளாதாரத்திற்கும் முக்கிய பங்களிப்பு செய்கிறது. ஆனால் அனைத்து கிரிக்கெட் சங்கங்களும் ஒன்று போலவே செல்வத்தை வைத்திருப்பதில்லை. அவை ரசிகர்களுக்கு ஏற்பவும், அந்த நாடுகளில் உள்ள சூழலுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது. இந்தநிலையில், உலகில் உள்ள கிரிக்கெட் சங்கங்களில் பணக்கார கிரிக்கெட் சங்கமாக இருப்பது இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ தான். இந்தியா முழுவதும் ஒரு மதத்தை போல கிரிக்கெட் இருக்கும் என்பதற்கேற்ப, அதன் ரசிகர்களும் கோடிகணக்கில் உள்ளார்கள். முக்கியமாக, ஐபிஎல் காரணமாக பிசிசிஐ-க்கு அதிக வருமானம் வரத்தொடங்கியது. தற்போது, சுமார் ரூ.2,200கோடி மதிப்போடு, பிசிசிஐ உலகின் மிகப் பணக்கார சங்கமாக உள்ளது. உலகளாவிய வருமானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 70 சதவீதத்துக்கும் மேலாக கிடைக்கிறது. 2024 முதல்…
நேபாளத்திற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, 2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 கட்டத்தை எட்டிய முதல் அணியாக மேற்கிந்திய தீவுகள் தகுதிபெற்றது. தோல்வியுடன் நேபாளம் வெளியேறியது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் சுற்றின் 25வது போட்டியில் நேபாளத்தை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய அணி வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பையிலிருந்து ஓமன் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட இரண்டாவது அணியாக நேபாளம் மாறியது. மேற்கிந்திய தீவுகள் அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற்றது. ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு புள்ளிகளையும் சேர்த்து +1.820 என்ற நெட் ரன் ரேட்டை பெற்றுள்ளது. அதிகபட்ச புள்ளிகள் மற்றும் உயர்ந்த நெட் ரன் ரேட்டுடன், இந்த அணி குழு C புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில், மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்காட்லாந்தை 35…