Author: Editor web3

சட்டசபை தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தே.மு.தி.க. மற்றும் ராமதாஸ் தரப்பு ஆகியவை இன்னும் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் மவுனம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் சசிகலாவும் புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சசிகலா சமீபத்தில் தென் மாவட்டங்களில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கடந்த 3-ந்தேதி அண்ணா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இதுபற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற…

Read More

கனடாவில் ஏப்ரல் 30 வரை விஜய்யின் ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை என்று படத்தை வெளியிடும் York Cinemas நிறுவனம் அறிவித்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜன நாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜன.9-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை. தணிக்கை சான்றிதழ் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த வழக்கை வாபஸ் பெற்ற பட தயாரிப்பு நிறுவனம் ஜன நாயகன் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளது. https://x.com/Chrissuccess/status/2022737262157664657? இந்நிலையில், சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன், ஏப்ரல் 30ம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் York Cinemas அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த அனைவரும்…

Read More

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களின் உயரத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. உலகிலேயே மிகக் குட்டையான மக்கள் எந்த நாட்டில் உள்ளனர் என்பதை தெரிந்துகொள்வோம். அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளின்படி, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடான திமோர் லெஸ்டேவின் சராசரி உயரம் உலகிலேயே மிகக் குட்டையானதாகக் கருதப்படுகிறது. அந்நாட்டில் ஆண்களின் சராசரி உயரம் சுமார் 160 செ.மீ. மற்றும் பெண்களின் சராசரி உயரம் சுமார் 152 செ.மீ. ஆகும். உயரம் என்பது மரபியல், ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைமுறை போன்ற பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பாக சிறுவயதில் போதிய சத்துணவு இல்லாமை மற்றும் சுகாதார வசதிகளின் பற்றாக்குறை வளர்ச்சியை பாதிக்கக்கூடும். பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை சந்தித்துள்ள திமோர் லெஸ்டே நாட்டில் இந்த காரணிகள் மக்களின் சராசரி உயரத்தில் தாக்கம் ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு நாட்டின் சராசரி உயரம் அந்நாட்டின் அனைத்து மக்களையும் பிரதிபலிக்காது; ஒரே நாட்டுக்குள்…

Read More

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9 முதல் அமெரிக்காவில் காணாமல் போன 22 வயது இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் வசிக்கும் சாகேத் ஸ்ரீனிவாசய்யா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்து வந்தார். கலிபோர்னியாவில் உள்ள டில்டன் பிராந்திய பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு ஏரிக்கு அருகில் அவர் கடைசியாகக் காணப்பட்டார். https://x.com/CGISFO/status/2022473936676753764? சாகேத்தின் உடல் மீட்கப்பட்டதை உள்ளூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய தூதரகம் சமூக ஊடக தளமான X இல் தெரிவித்துள்ளது. தூதரகம் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாகவும், உடலை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் பணியில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும்…

Read More

அமைச்சர் ராஜ கண்ணப்பனை ராஜினாமா செய்யக்கோரி தலைமை கூறுவதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஆட்சியில் பங்கு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக திமுக-காங்கிரஸ் கூட்டணிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதற்கு டெல்லி காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டாலும், கட்சி நிர்வாகிகள் இசைவு கொடுக்காமல் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், 170 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு 160 தொகுதிகள் வரை வெற்றிப்பெறும் என்று பேசியிருந்தார்.  அதில், 2021ல் 173 தொகுதியில் போட்டியிட்ட திமுக 133 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது என்றும், காங்கிரஸ் கேட்பது திமுக தோல்வியடைந்த இடங்களைத்தான் என்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்திருந்தார். பொதுவெளியில் அமைச்சர் கூறிய கருத்துக்களால் இந்த கூட்டணியில்…

Read More

வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்கவுள்ள நிலையில், இவ்விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. இது வங்கதேசத்தின் 13வது பொதுத்தேர்தல் தேர்தல் ஆகும். இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது. இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி…

Read More

நேற்றைய ரூ.5000 அறிவிப்பில் இருந்து மக்களின் ஆதரவு திமுகவிற்கு அதிகம் இருப்பதை உணர்ந்து ஆட்சியில் பங்கு என்பதை காங்கிரஸ் கட்சியினர் யாரும் பேச மாட்டார்கள் எனவும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என்றும் ஆர்.எ.ஸ் பாரதி திட்டவட்டமாக கூறியுள்ளார். திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் , மண்டல பொறுப்பாளர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திமுக சட்டத்துறை தலைவர் விடுதலை மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, திமுக சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோ ஆகியோர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 2026 சட்டமன்றத் தேர்தலில் சட்டத்துறை நிர்வாகிகள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும், 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு திமுக சட்டத்துறை நிர்வாகிகள் சட்ட ரீதியாக எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக…

Read More

அசாமின் மோரான் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட அவசர தரையிறங்கும் வசதியில் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானம் சனிக்கிழமை காலை தரையிறங்கியது. மாநில உள்கட்டமைப்பு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் இந்த நிகழ்வு முதன்முறையாக நடைபெற்றது. அவசர காலங்களில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் புறப்படவும் தரையிறங்கவும் ஏதுவாக இந்த சிறப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சூழ்நிலையில் ஒரு நாள் பயணமாக சென்ற பிரதமர், இந்த வசதியை திறந்து வைத்தார். தொடர்ந்து இந்திய விமானப்படையின் 40 நிமிட வான்வழி காட்சியையும் பார்வையிட்டார். மேலும் ரூ.5,500 கோடிக்கும் மேற்பட்ட மேம்பாட்டு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சாபுவா விமான நிலையம் வந்த பிரதமரை மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் வரவேற்றனர். அங்கிருந்து இந்திய விமானப்படையின் C-130J விமானத்தில் மோரான் நெடுஞ்சாலை பகுதிக்கு சென்றார். ரூ.100 கோடி செலவில் 4.2 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட இந்த…

Read More

அயர்லாந்து அணி ஓமனுக்கு எதிராக 235 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தது. இதுவரை டி20 உலகக் கோப்பையில் இது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இறுதியில், கேப்டன் லோர்கன் டக்கர் மற்றும் ஜார்ஜ் டாக்ரெல் ஆகியோர் அதிரடியான இன்னிங்ஸ் விளையாடி அணியை வரலாற்று ஸ்கோரை எட்ட வைத்தனர். கேப்டன் 184.31 ஸ்ட்ரைக் ரேட்டில் 94 ரன்கள் எடுத்தார். கடைசி 19 பந்துகளில் அயர்லாந்து 70 ரன்கள் எடுத்தது. 2026 டி20 உலகக் கோப்பையின் 22வது போட்டியில் ஓமன் டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. போட்டி தொடங்கிய உடனேயே, ஓமன் பந்துவீச்சாளர் ஷகீல் அகமது அதிரடி காட்டினார். முதல் ஓவரிலேயே அவர் டிம் டெக்டரை (5)அவுட் செய்தார். தொடர்ந்து மூன்றாவது ஓவரில் துவக்க வீரர் ரோஸ் அடேரையும் வெளியேற்றினார். அதற்குப் பிறகு களமிறங்கிய ஹாரி டெக்கர் (14) கூட ஷகீல் அகமது பந்தில் பெவிலியன் திரும்பினார். ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை…

Read More

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிதான் உலகெங்கும் பேசப்படும் விஷயம். இந்த போட்டி நாளை பிப்.15 ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் நடைபெறவுள்ளது. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அற்புதமான மோதலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், வானிலை பற்றிய செய்தி கவலை ஏற்படுத்தியுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் 85 சதவீதம் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற கவலை எழுந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக ஏராளமான பார்வையாளர்கள் மைதானத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைதானம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வானிலை துறையின் அறிக்கை ரசிகர்களின் பதட்டத்தை அதிகரித்துள்ளது. accuweather.com இன் படி, இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது கொழும்பில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. போட்டிக்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பு மழை பெய்யக்கூடும். மேலும், போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. போட்டியின் போது…

Read More