Author: Editor web3
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், அதிமுக-திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் . என்னைப் போல் தனியாக நின்று தேர்தலில் 1% வாக்கு வாங்க முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,”பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்” என்றார். பொதுவெளியில் ஒரு பெண்ணை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் பேசிய இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். அந்தவகையில், தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தேசியக்…
தேர்தல் நெருங்கி வருவதால் அரசு, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 1 கோடி 31 லட்சம் பெண்களின் வங்கி கணக்கில் நேற்று காலையில் 5000 பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகை 3000 ரூபாய் முன்பணமாகவும், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் அடுத்து அமைய இருக்கும் திமுக ஆட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்பை பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் அதிர்ந்து போயினர். குறுக்கு வழியில் நலத்திட்டங்களை முடக்க பாஜ போட்ட சதியை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த அறிவிப்பின் மூலம் பெண்கள் நலனின் மீது திராவிட மாடல் அரசிற்கு இருக்கும் அக்கறையை மீண்டும் நிரூபித்து…
ஈரானுடனான அணுசக்தி திட்டம் தொடர்பான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பதட்டங்கள் அதிகமாக இருப்பதால், அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை அனுப்ப அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஐந்தாவது நிமிட்ஸ்-வகுப்பு விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனை அமெரிக்கா கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய கிழக்கில் நிறுத்தியிருந்தது, மேலும் தி நியூயார்க் டைம்ஸ் (NYT) அறிக்கையின்படி, அது விரைவில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை நிலைநிறுத்தும். உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான ஃபோர்டு, கடந்த மாதம் அமெரிக்கப் படைகளால் ஒரு திடீர் நடவடிக்கையில் வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய உதவியதாகும். இது தற்போது, கரீபியன் பிராந்தியத்திலிருந்து மத்தியதரைக் கடலில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி ஆட்சியை அகற்ற அழுத்தம் கொடுப்பது தொடர்பாக நிருபர்கள்…
உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த நாளி்ல்தான் அந்த பெருந்துயர் சம்பவம் நிகழ்ந்தது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2,547 துணை ராணுவப் படை வீரர்களை ஏற்றிக்கொண்டு 78 ராணுவ வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அன்று மதியம் 3.30 மணியளவில் ராணுவ வாகனங்கள் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு கார் வேகமாக வந்து, துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. அந்தக் காரில் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்தது. இதனால், அந்தக் கார் மோதிய பேருந்து வெடித்துச் சிதறியது. இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது பொறுப்பேற்றது. இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில்,…
தேர்தல் பயம் எங்களுக்கு கிடையாது, அது எதிரணியினருக்குதான் இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி திருவெறும்பூரில் நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம் என்றும், இதனால் NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்றும் அவர்கள் நினைப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். “சர்ஜிகல் ஸ்டிரைக்” என்ற சொல்லக்கூடிய அளவில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரவேண்டிய மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால், அதையும் சேர்த்து யாரிடமும் சொல்லாமல் உடனடியாக 5000 ரூபாயை அறிவித்தார்” என்று முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையை அமைச்சர் விளக்கினார். “எங்களுக்கு தேர்தல் பயம் கிடையாது எதிரணியினருக்கு தான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நல மக்களுக்கான பணிகளை செய்வார்”…
பாகிஸ்தானில் எண்ணெய் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மாவட்டம், சிந்து மாகாணத்தில் கராச்சி அருகே M9 நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த எண்ணெய் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் உள்ள மோசமான சாலைகள், தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், பனிமூட்டம் மற்றும் போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திமுக கூட்டணியில் கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சிகளின் குரல்கள் ஆவப்போது திடீர் திடீரென வலுத்து வருகின்றன. அந்த வரிசையில் விசிகவும் ‘ஆட்சியில் பங்கு’ என குரலெழுப்பியதெல்லாம் ஒரு காலம். தற்போது ‘இரண்டு இலக்கத்தில் தொகுதி’ என்பது இப்போதைய குரலாக இருந்து வருகிறது. ஆனால், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து தற்போது ஒருவித அமைதி, மவுனம் திருமாவிடம் தென்படுகிறது, ராமதாஸ் பாமகவுக்கு எதிரான குரலை தவிர. அந்த மவுனத்தின் பின்னணி பற்றி ஒரு தகவல் தற்போது பேசப்படுகிறது. அதைப்பற்றி இங்கு காணலாம். சமீப நாட்களாக திருமாவளவன் அவர்கள் அடிக்கடி பேசி வரும் இரண்டு விஷயங்கள், “நிச்சயமாக பாமக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம்” என்பதும் “இரண்டு இலக்கத்தில் தொகுதிகள் கேட்டுப்பெற வேண்டுமென்பது எண்ணம்” என்பதும் தான். அனால், அதில் இரண்டாவது குரல் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறதோ? என்ற உணர்வு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட அதற்கு காரணம் உடனிருக்கும் சில…
நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை மாநகரக் காவல்துறை தீவிர ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தகவலின்படி, சென்னையில் காதலர்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு மோதல்கள் அல்லது அநாகரீகச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை (பெசன்ட் நகர்) மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன் (Drone) கேமராக்கள் மற்றும் கடற்கரை மணலில் செல்லக்கூடிய அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடற்கரை மணல் பரப்பில் குதிரைப்படை போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பார்கள். காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில அமைப்புகள், காதல் ஜோடிகளுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைப்பது அல்லது அவர்களைத் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.…
சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அதிமுக – திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதாவது, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது யார்? மக்கள் விரோத திமுக அரசை எதிர்ப்பதே முதன்மை. மக்கள் பலமுறை நிராகரித்தவர்களை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் என்று அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார். இதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் தொடங்கிய கட்சியில் இருப்பவர்கள், தன்னை போல் தனியாக நின்று 1% வாக்கு வாங்க முடியுமா என்றும் விஜய் சவால் விடுத்திருந்தார். இந்தநிலையில் இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு என்னத் தெரியும்? ஒருப் பிரச்னை நடந்தது. 72 நாள்கள் வீட்டை விட்டே வெளியில் வரவில்லை. ஒருத் தலைவன் என்றால் பதில் சொல்லியாக வேண்டும். ஒருக் கட்சித் தொடங்கிவிட்டால், நிருபர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும், மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது…
நடிகர் தனுஷுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நான் ருத்ரன் என்ற படத்திற்காக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அந்த படத்துக்கு பதில், வேறு படத்தை நடித்து இயக்கி தருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். அதை ஏற்று, தனுஷ் உள்பட படத்தில் நடித்த நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு முன்பணம், பிற செலவினங்களுக்காக, 20 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில், தனுஷ் முழுமையான திரைக்கதையை வழங்காமல், பிற படங்களுக்கு கால்ஷீட்டுகளை கொடுத்ததாலும் இந்தப் படம் பாதியிலேயே முடங்கியதாகக் கூறி, தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 2025ம் ஆண்டு இறுதியில் கால்ஷீட் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைவில் முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், 20 கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும். அத்துடன் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய்…