Author: Editor web3

அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தனது கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் ஓபிஎஸின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மருது அழகுராஜ், சுப்புரத்தினம் உள்ளிட்ட பலரும் திமுக மற்றும் தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். இதேபோல், அதிமுகவில் இருந்து திமுகவிற்கும், திமுகவில் இருந்து அதிமுகவிற்கு நிர்வாகிகள் மாறி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி அதிமுக காய்களை நகர்த்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். அதாவது, திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கே.சி.வீரமணி உடனான கோஷ்டி பூசல் மற்றும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அக்கட்சியின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்த நிலோபர் கபில், தொடர்ந்து…

Read More

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர்கள் பானு பிரகாஷ், மனேஷ் கார்க், கியானேஷ் பார்த்தி, பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், கடந்த 12ம் தேதி சென்னை வந்தனர். இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தயார் நிலை, தேர்தல் பணிகளின், முழுமையான ஆயத்தை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அதன் ஒருபகுதியாக நேற்று முன் தினம்  அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட ஆட்சியர்கள்) துணை கமிஷனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேலும், அந்​தந்த மாவட்​டங்களில் இறுதி வாக்காளர் பட்​டியல் வெளி​யீட்​டுக்கு எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்​கைகள், எத்​தனை வாக்​குச்​சாவடிகள் மறு​வரையறை செய்​யப்​பட்​டுள்​ளன, பதட்​ட​மான வாக்​குச்​சாவடிகள் எத்​தனை,…

Read More

பாஜக – அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசுபவர் கிடையாது. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றார்.  திமுக ஐம்பதாயிரம் ரூபாய் அறிவித்தாலும் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்து விடும். விவசாயிகள் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் போராடி கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. தமிழ்நாட்டில் கூலிப்படைகள் உருவாகிற அளவிற்கு போதைப்பொருள்கள் பள்ளிக்கூடங்களின் அருகிலேயே கிடைக்கிறது. தேசிய ஜனநாய கூட்டணிக்கு வருவது குறித்து ஓபிஎஸ்-தான் முடிவெடுக்க வேண்டும். அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும் எனச் சொன்னவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்துவிடும். அது யாராக இருந்தாலும் சரி. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் யாரெல்லாம் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்களோ…

Read More

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், விஜய் – த்ரிஷா பற்றிய விமர்சனங்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருடைய பேச்சுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து கொண்டிருக்கின்றன. தவெக கட்சியினர் மட்டுமல்லாமல் திமுகவை சார்ந்தவர்களும் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில் தவெக நிர்வாகி செங்கோட்டையன், விஜய் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஏதாவது பிரச்சனை வந்தால் விஜய் ஓடி ஒளிந்து கொள்கிறார். நாங்க எல்லா பிரச்சனைக்கும் பதில் சொல்றோம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறாரே? அதுப்பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டனர். அதற்கு அவர் பதில் எதுவும் அளிக்காத செங்கொட்டையன், நயினார் நாகேந்திரனின் விமர்சனம் பற்றியும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அதெல்லாம் ஒரு கட்சியா. அவரெல்லாம் ஒரு ஆளா என கடுமையாக பதிலளித்துள்ளார். இதன் மூலமான நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சால், தவெக நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் இருப்பது உறுதியாகியுள்ளது.

Read More

 தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார்.  இந்த பயணம் மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார் இந்தநிலையில், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பயணத்தின் அடுத்தக்கட்டமாக வரும் 21–26 தேதிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இபிஎஸ் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு அறிந்து கொள்ளவும், கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும், வரவிருக்கும் அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளார். சுற்றுப்பயண அட்டவணை: 21.2.2026 (சனி) – திருவள்ளூர் தெற்கு – ஆவடி,…

Read More

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சார கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர். அதன்படி, இன்று காரைக்காலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் மிகவும் தொன்மையான மொழியை பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டார். இந்தியா  கூட்டணியின் தீய நோக்கத்தை கிழித்தெறிய வந்துள்ளதாக கூறிய அவர், ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து சுயமாக செயல்படும் அரசை என்.டி.ஏ. கூட்டணி உருவாக்கி இருக்கிறது என்றார். மேலும், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி டெல்லிக்கு அடிமையாக இருந்தது என்ற அமித் ஷா, புதுச்சேரியில்…

Read More

ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை, அதிகார பகிர்வு, அவசியம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மதுரை மாநகர் திமுக சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்.ராஜகண்ணப்பன், இந்த தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி எதிர் கட்சியாக வரப்போவது பாஜக தான். 93 சீட்டு இருந்தபோதே கலைஞர் ஆட்சியில் பங்கு தரவில்லை, இந்த தேர்தலில் 170 சீட்டுகளில் உதயசூரியன் நிற்கும், 160 சீட்டுகளில் வெற்றிபெறுவோம். முதலமைச்சரே கூட்டணியில் பங்கு இல்லை என முதலமைச்சரே சொல்லிட்டாரு. அதனால் கூட்டணி கட்சியை பற்றி பேச தேவையில்லை என்று பேசினார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், 2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம்.…

Read More

கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் , டவர் கட்டுமான பணியின் போது லிப்ட் கேபிள் அறுந்து விபத்துக்குள்ளானதில், சேலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். சென்னை கத்திட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் டவர் அமைக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மாலை, கட்டுமானப் பொருட்களை மேலே எடுத்துச் செல்லும் தற்காலிக லிப்டில், பொருட்களுடன் ஐந்து தொழிலாளர்களும் மேலே சென்றள்ளனர். அப்போது திடீரென லிப்ட் கேபிள் அறுந்து விழுந்தது. இதனால் சுமார் 20 அடி உயரத்திலிருந்து தொழிலாளர்கள் கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் (48), கணேசன் (51), மோகன் (38), மகேந்திரன் (48), சம்பத்குமார் (47) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் மூவருக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக…

Read More

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற தவெக கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற வடமாநில இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள தாளமுத்து நடராசன் திடலில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். திடலுக்குள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையிலும், கூட்டநெரிசல் மற்றும் கடும் வெயிலில் நின்றிருந்த மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் என்பவர் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். இவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த உடலை பெறமாட்டோம் என அவரது உறவினர்கள் கூறிவருகின்றனர். அதாவது குடும்பத்தை காப்பாற்ற தவெக சார்பில் விஜய் உதவி செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும், சூரஜ் மரணத்தை சந்தேக மரணம்…

Read More

விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யபட்டுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் எக்ஸ் தளத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 20ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த…

Read More