Author: Editor web3
உலகளவில் அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு மத்தியில், காடுகளின் முக்கியத்துவம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. காடுகள் பல்லுயிர் பெருக்கத்தின் அடித்தளமாக மட்டுமல்லாமல், கார்பனை உறிஞ்சுவதன் மூலம் உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் பெரும்பாலான வன வளங்கள் ஒரு சில நாடுகளில் மட்டுமே குவிந்துள்ளதாக சமீபத்திய உலகளாவிய தரவு காட்டுகிறது. எனவே, மிகப்பெரிய காடுகளைக் கொண்ட ஐந்து நாடுகளைப் பார்ப்போம். உலகிலேயே மிகப்பெரிய காடுகளைக் கொண்ட நாடு ரஷ்யா: உலகின் மிக அதிக காடுகள் கொண்ட நாடு ரஷ்யா. தோராயமாக 832.6 மில்லியன் ஹெக்டேர் காடுகள் உள்ளன, இது உலகளாவிய காடுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாகும். ரஷ்யாவின் பெரும்பாலான காடுகள் சைபீரியப் பகுதியில் அமைந்துள்ளன, இது டைகா காடு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், ரஷ்யாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, பெரும்பாலான காடுகள் ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும். ரஷ்யாவின் காடுகள் உலகின் மிகப்பெரிய காடுகளாகக்…
தமிழ்நாட்டில் உரிமைத்தொகை பெறும் மகளிருக்கு அடுத்த 3 மாதங்களுக்கான தொகை முன்கூட்டியே இன்று வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் மற்றும் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகளை பார்க்கலாம். 1.31 கோடி மகளிருக்கு ரூ.5000 கிரெடிட்:- தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் அவர்களுடைய வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் முதலில் 1.14 கோடி பெண்கள் பயனடைந்து வந்த நிலையில், ‘மக்களுடன் முதல்வர்’ முகாம் மூலமாக மேலும் தகுதி வாய்ந்த பயனாளர்கள் மேலும் இணைக்கப்பட்டு, தற்போது மகளிர் உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் திராவிட மாடலின் தற்போதைய ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில்,…
2026 டி20 உலகக் கோப்பையின் 19வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜிம்பாப்வே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 170 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் கொழும்புவின் பிரேமதசா கிரிக்கெட் திடலில் இன்று (பிப்.13) நடைபெறும் லீக் சுற்றின் 19-வது போட்டியில் ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் டிராவிஸ் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் பிரையன் பென்னட் – மருமாணி ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 35 ரன்களில் மருமணி அவுட் ஆக, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பிரையன் பென்னட் 64 ரன்கள் எடுத்து…
கரூர் சம்பவத்திற்கு பின் பல நிபந்தனை, கட்டுப்பாடுகளுடன் முக்கியமாக காவல்துறை அனுமதியுடன் விஜய் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன்படி, இன்று சேலம் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில். கூட்டத்தில் பங்கேற்றிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக சூரஜ் (37) என்பவர் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஏற்கனவே சூரஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ், வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து இன்றைய கூட்டத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றி வரும் விஜய், மற்றவர்கள் தொடங்கிய கட்சியில் இருப்பவர்கள், தன்னை போல் தனியாக நின்று 1% வாக்கு வாங்க முடியுமா என்று விஜய் சவால் விடுத்துள்ளார். தன்னை அனுபவமில்லாதவர் என கூறுவதற்கு பதிலடி கொடுத்த அவர், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் தங்களுக்கு அனுபவமில்லை என்றார். மேலும் கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதன்மையான சக்தியாக மாறி, 30%க்கு மேல் மக்கள் ஆதரவை கொண்டிருக்கும் தவெகவுக்கு அனுபவமில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிறுவர்களின் எதிர்காலத்திற்காகவும் தான் கட்சி ஆரம்பித்ததாக கூறிய விஜய், தனக்காக பெற்றோர்களிடம் சிறுவர்கள் வாக்கு சேகரிக்கும் க்யூட் வீடியோக்களை பார்த்ததாக கூறி, அனைவரிடமும் இதையே செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் யார் மீது, தனிப்பட்ட வன்மமோ, கோபமோ இல்லை எனவும் தேர்தலில் ஜெயித்து மக்களுக்கான நன்றிக்கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்திருப்பதாகவும் விஜய் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 4.45 ஆண்டுகளுக்கு பிறகு…
மக்கள் பலமுறை நிராகரித்தவர்களை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் என்று அதிமுகவை விஜய் மறைமுகமாக விமர்சித்தார். சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிர்வாகிகள் மத்தியில் விஜய் உரையாற்றி வருகிறார். அப்போது “ஏய் விஜய் வீட்டை விட்டு வெளிய வா” என சொல்பவர்களுக்கு என் வீடு எங்கிருக்கிறது என தெரியுமா என கேள்வி எழுப்பிய விஜய், தாய்நாடான தமிழ்நாடு மற்றவர்களுக்கு மாநிலமாக இருக்கலாம். ஆனால் தனக்கு அதுதான் வீடு என்றார். 8 கோடி மக்கள் தன்னுடைய குடும்பத்தினர் எனவும் மேலும் தமிழ்நாட்டின் முதல் படை வீரனாக பாதுகாவலனாக மக்களுடன் நிற்க வேண்டும் என்பதுதான் தனது குறிக்கோள் எனவும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து தலைவர்களுக்கு Standard Operating Procedure என்ற SOP வழங்கப்படுகிறது ஆனால் தனக்கு Stalin Sir Operatin Procedure ஆக உள்ளது என்று விஜய் கூறினார். மக்களை சந்திக்கவே அரசு அனுமதி…
சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது. சேலம் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று காலை சேலம் வந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த நிலையில் கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்தார். அப்போது தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார். முன்னதாக கூட்டத்திற்காக தவெகவினருக்கு காவல்துறை தரப்பில் இருந்து 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விஜய் வேனில் நின்றபடி மட்டுமே பேச வேண்டும், இருக்கைகள் அமைக்கக்கூடாது. கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு…
உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், 2026 டி20 உலகக் கோப்பையின் இந்திய அணியின் இரண்டாவது போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடவில்லை. வயிற்றில் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நமீபியாவுக்கு எதிரான போட்டிக்காக அவர் இந்திய அணியுடன் இருந்தபோதிலும், அவரது தோற்றம் அவர் முழுமையாக ஆரோக்கியமாக இல்லை என்பதைக் குறிக்கிறது. இந்தியாவின் அடுத்த போட்டி பாகிஸ்தானுக்கு எதிரானது. இந்த பெரிய போட்டிக்கு முன்பு அபிஷேக் தனது உடல்நிலை குறித்த புதுப்பிப்பை வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லியில் உள்ள தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் வீட்டில் நடந்த ஒரு விருந்தில் அபிஷேக் சர்மா கலந்து கொண்டார், ஆனால் சீக்கிரமாகவே வெளியேறினார். விருந்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், அவருக்கு வயிற்றில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிப்ரவரி 11 ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் அணியில் சேர்ந்தார்,…
மகளிரின் உரிமைத் தொகை கணக்கில் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டிருப்பது தோல்வி பயமே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான தொகை ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 இன்று காலை மகளிர் உரிமைத் தொகை கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் அறிவித்தார். மேலும், திமுக ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000-ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். இதனை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ”தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக “1000 ரூபாய்” கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து “கோடைக்கால சிறப்புத் தொகை” கொடுக்கிறாராம்.…
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2026) வரவிருக்கும் சீசனுக்கு முன்னதாக, கர்நாடக அரசு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அந்த அணியின் சொந்த மைதானமான எம். சின்னசாமி ஸ்டேடியத்தின் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. இந்த பிரச்னையில் ஆர்சிபி அணி நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த குடும்பத்திற்கு…