Author: Editor web3

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜு ஏயை தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய உலகில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்சியாளர்கள் என்ற வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பவர் கிம் ஜாங் உன். ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்காவுக்கு ஒரு வகையில் சவாலாக இருக்கிறார் என்றால், மற்றொரு‌ முறையில் சவால் கொடுப்பவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். கிம் ஜாங் உன் மக்களைக் கொடுமைப்படுத்துவார். பிடிக்காதவர்களைக் கொல்வார். அண்டை நாடுகளை அச்சுறுத்துவார். தற்கால உலகத்தில் மிகவும் அதிகமாகக் கேலி செய்யப்பட்ட ஒரு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் இருக்கின்றன. அவர் நினைத்தால் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் அணு ஆயுதப் போரைத் தொடங்க முடியும். அவர் விரும்பினால் அண்டை நாடுகளுடன் உறவை…

Read More

1980கள் மற்றும் 1990களில் தூர்தர்ஷன் செய்திகளின் மிக முக்கியமான முகங்களில் ஒருவராக இருந்த மூத்த தூர்தர்ஷன் தொகுப்பாளினி சரளா மகேஸ்வரி இன்று காலமானார். அவருக்கு வயது 71. இதுதொடர்பாக DD நேஷனல் தனது எக்ஸ் தளத்தில், மகேஸ்வரியின் “எளிமை, கட்டுப்பாடு மற்றும் தனித்துவமான பண்புகள்” பார்வையாளர்களின் இதயங்களில் ஆழமான நம்பிக்கையை உருவாக்கியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. அவரது குரல்வளம், தெளிவான உச்சரிப்பு மற்றும் செய்தி வழங்கும் முறைக்காக மக்களிடையே மிகவும் பரிச்சயமானவர்.  டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, மகேஸ்வரி டிடி-க்காக ஆடிஷன் செய்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில், அவர் ஒரு அறிவிப்பாளராக இருந்தார், ஆனால் செய்தி வாசிப்புக்கு மாறி 2005 வரை ஒரு தொகுப்பாளராகப் பணியாற்றினார். கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சி காலத்திலிருந்து வண்ணத் தொலைக்காட்சி காலம் வரை தூர்தர்ஷனில் அவர் ஒரு முக்கிய முகமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை…

Read More

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய அரசு உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வராது, ஆனால் அவரது கருத்துக்கள் நாடாளுமன்றப் பதிவேடுகளிலிருந்து நீக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று புதன்கிழமை மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் போது அவர் தெரிவித்த கருத்துக்களை நீக்கக் கோரி அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற விதிகளின்படி, அவையில் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகளை உறுப்பினர்கள் நிரூபிக்க வேண்டும். சரிபார்க்கப்படாத, அவதூறான அல்லது நிறுவப்பட்ட நடைமுறைக்கு இணங்காததாகக் கருதப்படும் கருத்துக்களை அவைத் தலைவரால் அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நீக்க உத்தரவிடலாம். மக்களவையில் உள்ள பாஜக உறுப்பினர்கள், ” அவையைத் தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிட்டதற்காகவும்” ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்வார்கள் என்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண்…

Read More

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தங்கள் மொபைல் போன்களைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள் அல்லது தலையணைகளுக்கு அருகில் தங்கள் தொலைபேசிகளை வைத்துக்கொண்டு தூங்குவார்கள். இந்தப் பழக்கம் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது, ஆனால் அது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா? கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் டாக்டர் மைரோ ஃபிகுரா, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் இந்தப் பிரச்சினை குறித்து எச்சரித்துள்ளார். புற்றுநோயை உண்டாக்குமா? மொபைல் போன்கள் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்குமா? தூங்கும் போது உங்கள் தொலைபேசியை உங்கள் தலைக்கு அருகில் வைத்திருப்பது நல்ல யோசனையல்ல என்று டாக்டர் ஃபிகுரா கூறுகிறார். தொலைபேசிகளைப் பயன்படுத்தாதபோதும் அவை கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இது தூக்கத்தின் தரத்தை பாதிக்கும், தலைவலியை ஏற்படுத்தும் மற்றும் நீண்ட காலத்திற்கு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.” கதிர்வீச்சைப் பொறுத்தவரை, மொபைல் கதிர்வீச்சு “அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சு” ஆகும். இது சூரிய ஒளி, மருத்துவ சோதனை கதிர்கள், ரேடியோ ஆக்டிவ் பொருட்கள்…

Read More

விஜய் ஒரு துரோகி” எனவும் செங்கோட்டையன் ஒரு ஊழல்வாதி எனவும் பி.டி.செல்வகுமார் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் மேலாளராக இருந்த பி.டி.செல்வகுமார், ”புலி” திரைப்படத்தின் தயாரிப்பாளர். விஜய் நடித்த போக்கிரி உள்ளிட்ட படங்களுக்கு பி.ஆர்.ஓவாகவும் பணிபுரிந்தார். பின்னர் விஜய்யிடம் இருந்து விலகி கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார் பி.டி.செல்வகுமார். இந்நிலையில் தமது கலப்பை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருடன் பி.டி.செல்வகுமார், கடந்த டிச.11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அன்றுமுதல் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் அவர், “விஜய் ஒரு துரோகி” என வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளார். செங்கோட்டையனையும் ஊழல்வாதி என சாடிய அவர், இளைஞர்கள் விஜயை நம்பி பணம் செலவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். தேர்தலில் தோல்வியடைந்தால் விஜய் வெளிநாட்டுக்கு சென்று விடுவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், விஜய்க்கு தோல்வி பிடிக்காது என கூறினார். தோல்வியடைந்த படத்தின் தயாரிப்பாளர்…

Read More

திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்  ராஜு விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஒரிரு சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடுகிறது. இதனை தமிழகத்தின் விலைவாசி உயர்வுடன் ஒப்பிட வேண்டாம். அதிமுக ஆட்சியில் வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளது. திமுக ஆட்சியில் நிலவும் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளன. 2026 ல் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்பதை முதலமைச்சர் யாரிடம் கேட்டார். சாதாரண மக்களை சந்தித்து பேசினால் மட்டுமே மக்கள் பிரச்சினை தெரியவரும். தவெக குறித்தும், விஜய் குறித்தும்…

Read More

2025ல் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்திய விமான விபத்தை அதன் விமானி செய்திருக்கலாம் என்று தகவல் கசிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏா் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியது. நாட்டை உலுக்கிய விமான விபத்தில், விமானப் பயணிகள் 241 போ் உள்பட 260 போ் பலியாகினர். முதற்கட்ட அறிக்கையில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், ரன் என்பதில் இல்லாமல் கட்-ஆப் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நிறுத்தப்பட்டு, இரு என்ஜின்களும் செயலற்றுப் போயிருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், விபத்து மதியம் 1.40 மணியளவில் நிகழ்ந்திருக்கும் நிலையில், 11.17 மணியிலிருந்து என்ன நடந்தது என்பது குறித்த தகவலும் வெளியானது, மேலும், விமானிகளின் அறையில் இருக்கும் குரல் பதிவில், ஒரு விமானி, ஏன்…

Read More

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கடந்த 2014-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு…

Read More

கடலின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு, இயற்கை அழகும், அமைதியும், ஆன்மிகச் சாந்தியும் நிரம்பிய இடம். அங்கு செல்வது சுலபம் தான். ஆனால், அனைவருக்கும் அனுமதி இல்லை. குறிப்பாக, ஆண்களுக்கு அங்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த இடம் ஏன் உருவாக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? உலகில் ஆண்கள் அனுமதிக்கப்படாத ஒரே தீவு இதுதானா? இந்த தனித்துவமான இடத்தின் முழு கதையையும் அறிந்து கொள்வோம். இந்த தீவு பால்டிக் கடலில், ஃபின்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது சூப்பர் ஷி தீவு (SuperShe Island) என்று அழைக்கப்படுகிறது. சுமார் 8.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தனி தீவு, அடர்ந்த காடுகள் மற்றும் அமைதியான கடல் சூழலால் சூழப்பட்டு, ஒரு தனியான, அமைதியான இடமாக அமைந்துள்ளது. இது ஏதோ மர்மமான அல்லது தடைசெய்யப்பட்ட அரசாங்கப் பகுதி அல்ல, மாறாக பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு தனியார் சுகாதார ஓய்வு விடுதி. இந்த…

Read More

மக்களவையில் நேற்றைய பட்ஜெட் விவாதத்தின் போது, ​​காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டையும், பாரத மாதவையும் “விற்றுவிட்டார்” என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் நாட்டை “விற்றுவிட்டது” என்றும், இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைத்துவிட்டதாகவும் பதிலடி கொடுத்தார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவாதத்தின் போது ஷார்ம் எல்-ஷேக் சம்பவத்தையும் குறிப்பிட்டார். “நாட்டையும், விவசாயிகளையும், ஏழைகளையும் விற்றது காங்கிரஸ்தான். இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைத்து பேசியது நீங்கள்தான். கிரண் ரிஜிஜு சரியாகவே கூறினார், இந்தியாவை விற்க யாரும் பிறக்கவில்லை; பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் அதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார்,” என்று அவர் தெரிவித்தார். https://x.com/nsitharamanoffc/status/2021634705653965191? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2009ஆம் ஆண்டு எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில்…

Read More