Author: Editor web3
நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்த காங்கிரஸ் எம்.பி.க்களின் அமளி தொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவை சபாநாயகரின் அறையில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பான வீடியோவை வெளியிட்டார். சபாநாயகரின் அறையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சட்டவிரோதமாக வீடியோ பதிவு செய்ததாக அவர் குற்றம்சாட்டினார். அந்த வீடியோவில் 20 முதல் 25 வரை காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்து, அவரை திட்டுவதையும், பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டுவதையும் காட்டுகிறது. மேலும் சபையில் விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்கே தங்களின் கட்சி முக்கியத்துவம் அளிக்கிறது; மிரட்டல் அரசியலை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என ரிஜிஜு தெரிவித்தார். https://x.com/KirenRijiju/status/2021812385460420837? ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர், “சுமார் 20 முதல் 25 எம்.பி.க்கள் மக்களவை அறைக்குள் நுழைந்து அவரை திட்டினர். நானும் அங்கு இருந்தேன். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மிகவும் எளிமையானவர்,…
துருக்கிய நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால் பெரும் அமளி ஏற்பட்டது, ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மோதிக்கொண்டன. இஸ்தான்புல்லின் தலைமை வழக்கறிஞர் அகின் குர்லெக்கை நாட்டின் புதிய நீதி அமைச்சராக நியமிக்கும் முடிவிலிருந்து இந்த சர்ச்சை எழுந்தது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நியமனத்தை கடுமையாக எதிர்த்தனர், இது பாராளுமன்றத்தில் சூடான விவாதங்களுக்கு வழிவகுத்தது, இது இறுதியில் கைகலப்பு வன்முறையாக மாறியது. https://x.com/YeshiSeli/status/2021637896353309107 சர்ச்சை எப்படி அதிகரித்தது? அகின் குர்லெக் நீதி அமைச்சராக பதவியேற்கவிருந்தபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தத் தொடங்கினர். ஆளும் கட்சி எம்.பி.க்களும் கூட்டத்தினருடன் சேர்ந்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. விரைவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, சில எம்.பி.க்கள் ஒருவரையொருவர் உதைத்தும் கைகலப்பிலும் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட சிரமப்பட்டனர், இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு என்ன? துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மக்கள் கட்சி (CHP),…
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ரஷீத் கான் வரலாறு படைத்தார். இந்திய மண்ணில் சர்வதேச டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் இப்போது பெற்றுள்ளார். நேற்று, அதாவது பிப்ரவரி 11 அன்று ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார். இந்திய மண்ணில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரஷீத் பெற்றுள்ளார். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அக்சர் படேலை முந்தி ரஷீத் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய மண்ணில் ரஷித் கான் மொத்தம் 24 டி20 சர்வதேச இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார், அதில் அவர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தக் காலகட்டத்தில், ரஷித்தின் எகானமி மற்றும்…
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குவதில் தீவிரமாக இருக்கின்றனர். அதேபோல் தங்களுக்கு சாதகமான தொகுதிகளையும் அடையாளம் கண்டு பட்டியலுடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில், திருச்சியில் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையில் மறைமுக மோதல் இருந்து வருகிறது. திருச்சியில் தனது ஆதரவாளர்களை அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவருமே தீவிரமாக இருக்கின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அமைச்சர் நேருவின் திருச்சி மேற்கு தொகுதியையும், அமைச்சர் அன்பில் மகேஷின் திருவெறும்பூர் தொகுதியையும் கம்யூனிஸ்டு கட்சிகள் கேட்பதாக கூறப்படுகிறது. அதாவது, இந்த 2 தொகுதிகளிலும் கிளை அமைப்பு வரை கட்சி வலுவாக இருப்பதாக 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் கருதுகிறதாம். ஏற்கனவே, கேட்கும் தொகுதிகளை கொடுக்க மாட்டோம் என…
சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க. மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி உறுதியாகி விட்டதால் அடுத்த கட் டத்தை நோக்கி இந்த கூட்டணி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். மீண்டும் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிறார். வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) அவர் மதுரையில் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தை மதுரையில் நடத்தவே திட்டமிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், கள நிலவரங்களை ஆராயும் வகையில் 2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித் ஷாவும் நாளை திருச்சி வருகை தரவுள்ளார். அவருடன் மத்திய அமைச்சரும், பாஜக…
தேர்தலில் சீட் இல்லை என்ற தலைமையின் முடிவால் தவெகவில் இருந்து சில மாவட்ட செயலாளர்கள் விலக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை அமைத்து பணியாற்றி வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் மக்கள் சந்திப்பு, அரசியல் நகர்வுகளில் விஜயும், கட்சியின் மாநில நிர்வாகிகளும் தீவிரமாக செயலாற்றுகின்றனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, இடையில் சுற்றுப்பயணத்தில் தொய்வு ஏற்பட்டது. அதனையடுத்து காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அதேபோல் சமீபத்தில் நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், தேர்தல் களப் பணிகளை சீரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் கட்சி ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 234 தொகுதிகளில் 69 ஆயிரம் பூத் கமிட்டிகள் நியமிக்கப்பட்டு, அவர்களும் வீடு வீடாக சென்று…
தை மாதத்திற்குள் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் இம்மாதம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்த அரசியல் முடிவு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், “தை மாதம் முடிய இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தோல்வியடைந்த அதிமுகவிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் யார் எனும் கேள்வி எழுந்தது. அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து உருவான உள்கட்சிப் பிரச்சினைகளால் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓபிஎஸ்…
M.P.கனிமொழிக்கு போட்டியாக கருத்துக்கேட்பில் சபரீசன் ஈடுபட்டிருப்பது திமுகவுக்குள் புயலை கிளப்பியுள்ளது. இதன் விவரம் என்ன என்பதை பார்க்கலாம். திமுகவுக்குள் பல்வேறு மட்டங்களில் நடக்கும் பனிப்போர்கள் நாளாக நாளாக வெளியில் அம்பலப்படுகிறது. அதிலும் குறிப்பாக திமுக முதன்மை குடும்பத்துக்குள் நடப்பது தற்போதைய சூழலில் உற்று கவனிக்கப்படுகிறது. அந்த வகையில் கனிமொழி எம்.பி.யின் பொறுப்புக்குட்பட்ட பகுதியில் சபரீசன் போட்டியாக பணியாற்றி வருவது தென் மாவட்ட திமுகவில் மட்டுமல்லாது குடும்பத்திற்குள்ளும் நெருடல்களை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. திமுகவின் மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி எம்.பி., சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது பொறுப்பிற்கு உட்பட்ட தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேர்தல் பணிகள் தொடர்பாக அவர் பரபரப்பாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதல்வரின் மருமகன் சபரீசன் திடீரென கடந்த இரு நாட்களுக்கு முன் தூத்துக்குடிக்கு வந்து தங்கியுள்ளார். அங்கு கட்சியின் பல்வேறு நிர்வாகிகளை அவர் தனித்தனியே சந்தித்துப் பேசி உள்ளார். “ஒரு மண்டலத்திற்கு…
டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே, இந்திய அணி ஒரு வலுவான வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவை இழந்தது. இதனைத் தொடர்ந்து, ஜஸ்பிரித் பும்ரா உடல்நலக் குறைவு காரணமாக அணியில் இருந்து விலகினார். இந்த நிலையில், இந்திய அணிக்கு அதிர்ஷ்டமாக மொஹம்மது சிராஜ் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அடுத்தடுத்து வீரர்களின் காயம் தொடர்பான தகவல்கள் மேலும் கவலைக்கிடமானதாக மாறியுள்ளன. சமீபத்திய தகவல்களின் படி, இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் நமீபியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால், டி20 உலகக்கோப்பை தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு கூடுதல் சவால்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்காக சமீப காலமாக சிறந்த ஃபார்மில் விளங்கி வரும் அபிஷேக் சர்மா, தற்போது உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாளை (பிப் 12) நமீபியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாக இருப்பதாக…
கனடாவின் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் 7 முதல் 12 ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த தாக்குதலில் பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பள்ளிக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை தேடினர். அப்போது துப்பாக்கிசூட்டில் 9 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும் 25 பேர் காயம் அடைந்திருந்த நிலையில் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து பள்ளிக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர். இந்த நிலையில், கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…