Author: Editor web3
கடந்த 6ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கைத்தறி மற்றும் கைவினைஞர்களுக்கான ஒரு முக்கிய நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அந்த துறையை சேர்ந்த அமைச்சர் ஆர். காந்தி இந்த முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மாறாக, அதே நேரத்தில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான மற்றொரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது, அமைச்சர் காந்தி அவர்கள் முதல்வரைச் சந்தித்து ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்க முற்பட்டார். அப்போது, துறை சார்ந்த முக்கிய நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காகவும், தாமதமாக வந்ததற்காகவும் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கோபமடைந்தார். அமைச்சர் விளக்கம் அளிக்க முயன்றபோதும், முதல்வர் அவரை மீண்டும் எச்சரிக்கும் விதமாகப் பேசிய காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி பேசுப்பொருளானது. இதேபோல், நேற்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சர் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துவிட்டு மற்ற அமைச்சர்களான…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய 10வது நாளில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரை தொடங்கியது. அப்போது ராகுல் காந்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பற்றி பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அவசியம்” என்றார். “நாம் ஒரு போரின் காலத்தில் வாழ்கிறோம். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் இன்னும் தொடர்கிறது. சீனா அமெரிக்காவை சவால் செய்து வருகிறது. தற்போதைய காலத்தில் எரிசக்தி மற்றும் நிதி ஆயுதங்களாக மாறியுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.” ஆனால், உலகில் நடக்கும் மோதல்களை கையாள எந்த நடவடிக்கையும் இல்லை” என்றார். மேலும், இந்திய தரவுகள் அமெரிக்காவிற்கு மிக முக்கியமானவை. நமது மக்கள் தொகை ஒரு பெரிய பலமாகும், நம் மக்கள், தரவுகள், உணவு உற்பத்தி செய்யும் திறன், எரிசக்தியை பாதுகாக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரவுகள் குறித்து பேசியிருக்க…
தேசிய பாடல் வந்தே மாதரம் தொடர்பாக அரசாங்கம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதத்திற்கான விதிகளை தெரிந்துகொள்வோம். புதிய நடைமுறைப்படி, வந்தே மாதரத்தின் முழு ஆறு பாகங்களும் அரசு நிகழ்வுகளில், பள்ளிகளில் மற்றும் ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பங்கேற்கும் முக்கிய பொது விழாக்களில் வந்தே மாதரத்தை முழுமையாக (3.10 நிமிடங்கள்) பாட வேண்டும். தேசிய கீதத்தை இதேபோல், வந்தே மாதரம் பாடும்போதும் நின்றுகொண்டு மரியாதை செய்ய வேண்டும். திரையரங்குகளில் திரைப்படத் திரையிடல்களின் போது இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது. அதாவது, திரைப்படத்தின் நடுவில் வந்தே மாதரம் வந்தால் நிற்க வேண்டிய அவசியமில்லை. தேசிய கீதத்தின் விதிகள் என்ன? இந்தியாவின் தேசிய கீதம் ஜன கண மன. இது தேசிய மரியாதையை குறிக்கிறது. இது முதலில் வங்காள மொழியில் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்டது. தேசிய கீதம் தொடர்பாக கடுமையான விதிகள் நிறுவப்பட்டுள்ளன, அதன்படி அதைப் பாட வேண்டும். இந்த விதிகளை…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் படு பயங்கரமாக வேலை செய்து வருகின்றனர். கூட்டணி அமைப்பது, பிரச்சாரத்தை தொடங்குவது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதுவரை செய்த செயல்பாடுகள், நிலவும் அரசியல் சூழல்கள் எப்படி என்பதை மாதம் ஒருமுறை, வாரம் ஒருமுறை என சர்வேக்கள் மறுபக்கம் ரொம்பவே சீரியஸாக நடக்கின்றன. அப்படி நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் திமுக – அதிமுக இடையிலான வெற்றி வாய்ப்புக்கான சதவிகிதம் தெரிய வந்துள்ளது. அது பற்றி இக்கட்டுரையில் காணலாம். தமிழக அரசியலில் தற்பொழுது நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில் தற்போதைய சூழலில் களம் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாகவே பொதுவான கருத்து நிலவுகிறது. அனால், அதில் உள்ளார்ந்து நோக்குகையில் பெரும் சாதகமாக இருந்த வெற்றி சதவிகித வேறுபாடு, திடீரென விரிவடைந்த அதிமுக – பாஜக கூட்டணியால் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அதாவது, திமுக கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு அதிமுக பாஜக கூட்டணியும் பலம்…
கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற குரல் பல்வேறு தரப்புகளிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது. அதிலும் தமிழக தலைமையும் டெல்லி தலைமையும் அமைதியாக இருக்கும் நிலையில், கூட்டணி ஆட்சி வேண்டும் என்ற பிடிவாதத்துடன் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்து வருகிறார். ஆனாலும் திமுக பின்வாங்கப்போவதில்லை என்பதை மு.க,ஸ்டாலின் இன்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதாவது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று வெளிப்படையாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துவிட்டார். இதனால் காங்கிரஸிடையே அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், முதல்வரின் முடிவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, இதுபற்றி மக்கள் முடிவெடுப்பார்கள், கூட்டணி…
திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே நடந்த மோதலில் படுகாயமடைந்த தமிழக வெற்றிக்கழகத்தினரை அக்கட்சியின் நிர்வாகிகள் சந்திக்க கூட அனுமதி மறுப்பது பேசுபொருளாகியுள்ளது. சென்னை – பூக்கடை, இப்ராகிம் சாலை, அங்கப்பன் நாயக்கன் தெரு பகுதியில் மக்களிடம் தேர்தலுக்காக சர்வே எடுக்க சென்ற தமிழக வெற்றிக்கழகத்தினர் சுமார் 10 பேரை அப்பகுதியின் திமுக வட்டச் செயலாளர் கவியரசு என்பவர் தனது ஆதரவாளர்கள் சுமார் 30 பேரோடு சேர்ந்து போலீசார் முன்னிலையிலேயே தாக்கி விரட்டி அடித்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெறும் கட்சியினரை சந்திக்க சென்ற மாநில நிர்வாகிகள் ராஜ்மோகன், லயோலா மணி உள்ளிட்டவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்துள்ளனர். தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகே பாதிக்கப்பட்டவர்களை நிர்வாகிகள் சந்திக்க சேர்ந்தது. இது தொடர்பாக தனது X பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர்…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், ஆளும் கட்சியான திமுக தனது தேர்தல் தயாரிப்புகளை ஒரே நேரத்தில் பல மட்டங்களில் அமைதியாகவும், திட்டமிட்ட வகையிலும் முன்னெடுத்து வருகிறது. வெளியில் பெரிய அரசியல் சலசலப்பு தெரியாமல் இருந்தாலும், தரை மட்டத்தில் தொடங்கி தலைமை மட்டம் வரை ஒருங்கிணைந்த செயல்பாடு நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்: முதற்கட்டமாக, கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளை நிலை நிர்வாகிகள் மாற்றம் வரை மற்றும் புதிதாக இணைந்த சிலருக்கு பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. செயல்பாடுகள் குறைந்திருந்த பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் அமைதியாக நடத்தப்பட்டு, இளைஞர் மற்றும் மகளிர் அணிகளுக்கு தனித்தனி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் என்பது வெறும் பிரச்சாரம் அல்ல, அமைப்பு பலம் தான் அடித்தளம் என்ற அணுகுமுறையுடன்…
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் தனது முடிவை அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற INDIA TODAY சார்பில் நடைபெற்ற ‘TAMIL NADU ROUND TABLE’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது அதை காரணம் காட்டி வாக்கு சேகரிக்க உள்ளோம். எத்தனை கூட்டணி வைத்தாலும் திமுக வெற்றி பெறும். 200 தொகுதியை தாண்டி வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அரசியலைத் தாண்டி என்னை சகோதரராக பார்க்கிறார். நானும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பார்க்கிறேன். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும். ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது. திமுக காங்கிரஸ் இடையே பிரச்சனை என்பது திட்டமிட்டு பரப்பப்படுகிறது. எங்களுக்குள் எதுவும் குழப்பம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சிலர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில்,…
பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு காரணமான திமுக ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். பாமகவின் தலைவராக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்ற பொதுக்குழுவின் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று அன்புமணி தரப்பில் பாமகவின் மாநில இளைஞர் அணி பொதுக் குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது ; இளைஞர்கள் உங்களை…
தங்கம் விலை இன்று(பிப்.11) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800 விற்பனையாகிறது. தங்கம் விலை இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. இருப்பினும், சர்வதேச சந்தையில் நிலவும் மந்த நிலை காரணமாக நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்திருந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று (பிப்.10) சவரனுக்கு ரூ.560 குறைந்து சவரன் ரூ.1 லட்சத்து16,640 க்கும், ஒரு கிராம் ரூ.14,580-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (பிப்.11) ஒரு கிராம் தங்கம் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,600க்கும் சவரன் ரூ.160 அதிகரித்து ரூ.1,16,800க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை மாற்றமின்றி இன்று ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனையாகிறது,