Author: Editor web3

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம், முக்கிய தேசியப் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது போது முன்னாள் ராணுவத் தளபதி நரவனேவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சீன ஊடுருவல் விவகாரம் குறித்துப் பேசினார். இதற்கு அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் அமித்ஷா ஆகியோர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து, பாஜக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் இடையூறு செய்தனர். இருப்பினும் அவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களை பறக்கவிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த (பிப்.6ம் தேதி )எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்…

Read More

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய ரயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (பிப். 8) கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், 2014-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27 நிதியாண்டில் 7,611 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும், நிதிப் பற்றாக்குறையால் திட்டங்கள் எதுவும் முடங்கவில்லை என்றும், அதுபோன்ற எந்தவொரு கூற்றும் ஆதாரமற்றது என்றும் வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். https://x.com/AshwiniVaishnaw/status/2020726833453678697? மேலும், தமிழகத்தில் தாமதமாகி வரும் ரயில்வே திட்டங்களுக்கு, மத்திய அமைச்சகத்தால் நிதி விடுவிப்பதில் ஏற்படும் தொடர் தாமதங்களே காரணம் என்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அஷ்விணி வைஷ்ணவ், அந்தக் குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை’ என்று குறிப்பிட்டார். மேலும், ‘ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை’ என்றும், மாநில அரசிடம்…

Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக பாஜக கூட்டணி கட்சிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில், பாமக, தாவாக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது.மேலும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதில் எந்த முடிவையும் தேமுதிக தலைமை இதுவரை அறிவிக்கப்படவில்லை . அதிமுக கூட்டணியில் 8 தொகுதிகள் கொடுக்க அக்கட்சி முன்வந்துள்ளது. ஆனால் பிரேமலதாவோ ராஜ்யசபா சீட் மற்றும் தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று வலியுறுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. மறுப்புறம், தேமுதிகவை திமுக…

Read More

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது, ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல காவல்துறை திடீர் தடை விதித்துள்ளது.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் கொண்டு வந்த விசில்கள் நுழைவு வாயிலிலேயே காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசில்களை விற்பனை செய்ய வேண்டாம் என வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்தத் தடையின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. ​நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் சமீபத்தில் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ​எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இச்சின்னம் மக்கள் மத்தியில் பிரபலமாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ​குறிப்பாக, சேப்பாக்கம் மைதானம் அமைந்துள்ள தொகுதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடையது என்பதால், இந்த விவகாரம்…

Read More

தமிழக பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில், பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று(பிப். 9) தொடங்கியது. சென்னையில் இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வு நடக்கிறது.  பிளஸ் 2 வகுப்புக்கு இன்று தொடங்கி 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்சுற்று இன்று முதல் 12ம் தேதி வரையும், இரண்டாம் சுற்று 13ம் தேதி முதல் 17ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 7,99,892 மாணவ, மாணவிகள் 26,44, தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.26 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். அந்தவகையில் இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வுகளை எழுதி…

Read More

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் கருத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்பபடுத்தும் விதமாக விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனக் கூறியதும், பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சி குறித்து கூறிய கருத்து ஆகியவை கடந்த சில நாள்களாக பரபரப்பை கிளப்பியுள்ளன. இதேபோல், பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக பாமக தலைவர் அன்புமணி – நிறுவனர் ராமதாஸ் இடையேயான முரண்பாடு, தேர்தலுக்குள் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இருதரப்புமே தேர்தல் முடிவை நான்தான் எடுப்பேன் என உறுதியாக இருப்பதே மோதல் நீடிப்பதற்கு காரணம். இந்தச் சூழலில் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அந்த வகையில் அன்புமணியை பாஜக- அதிமுக கூட்டணி தேர்வு செய்துள்ளது. இதனால், கொதிப்படைந்து போய்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இல் கூட்டணி அரசியல் கடுமையான சோதனையை எதிர்கொண்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இழுபறியைப் பயன்படுத்தி, அதை தேசியக் கட்சியின் மாநில அளவிலான பிளவாக சித்தரித்து தாக்குதல் நடத்தி வருகிறது. டிசம்பர் 3, 2025 அன்று காங்கிரஸ் அகில இந்தியக் குழு அமைத்த அமர்வு இன்னும் செயல்படத் தொடங்காத நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே இருக்கும் நம்பிக்கைப் பற்றாக்குறை வெளிப்படையாகத் தெரிகிறது. காங்கிரஸ் தரப்பில் இருந்து அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன. கனிமொழி எம்.பி., ராகுல் காந்தியை சந்தித்த பின்னரும் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநில காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இது முந்தைய தேர்தல்களைப் போலவே நடக்கும் எனவும் கூறி அமைதிப்படுத்த முயல்கிறார். ஆனால், மாணிக்கம் தாகூர் போன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் 36 நாட்கள் காத்திருப்பு என்று வெளிப்படையாக விமர்சித்துள்ளனர். இது…

Read More

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன் தினம் சனிக்கிழமை (பிப்.7)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.14,420-க்கும், சவரன் ரூ. 1,15,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வாரத்தின் முதலான இன்று (பிப்.9)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,650க்கும், ரூ.1,840அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,17,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 அதிகரித்து ரூ.3 லட்சத்துக்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. kedIn

Read More

டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து இளைஞர் ஒருவர் பல மாதங்கள் நெருங்கிப் பழகி உடலுறவில் ஈடுபட்டார். ஆனால், தற்போது அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ளாமல் பிரிந்து சென்றுவிட்டார். எனவே, அவர்மீது பாலியல் வன்கொடுமை புகாரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விபு பக்ரு, “திருமணம் செய்வதாக உறுதி அளித்ததை அடிப்படையாக வைத்து நீண்டநாள் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்கொடுமைக் குற்றமாகக் கருதமுடியாது. இருவரும் நீண்ட காலமாக பரஸ்பர சம்மதத்துடன்தான் உறவு கொள்கின்றனர். அதன் பின்னர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மாதக் கணக்கில் ஒன்றாக வாழ்ந்து உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தால் அதன்பின்னர் பாலியல் வன்கொடுமைக் குற்றம் சுமத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சட்டத்தை…

Read More

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தமிழ்நாட்டில் தனது அரசியல் வலிமையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் முடிவு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரவலான பேச்சு நிலவியது. அதிமுக–பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்பு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி, அரசியல் சூழலில் புதிய பரபரப்பை உருவாக்கின. இதுவரை அதிமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனித்த அரசியல் பயணத்தில் இருந்த அவர், மீண்டும் பழைய அணிக்குள் வர முனைந்துள்ளார் என கூறப்பட்டது. ஏனென்றால், டிடிவி தினகரனை என்.டி.ஏ. கூட்டணியில் சேர்த்துக்கொண்டதால் ஓபிஎஸ்ஸிற்கும் கதவுகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்ட…

Read More