Author: Editor web3

சமையலறையில் தினமும் உணவு சமைக்கப்படுகிறது. அதனால் தான் வீட்டில் மற்ற இடங்களை விட கிச்சனில் அதிகப்படியான விடாப்பிடி கறைகள் உள்ளன. இதனால் கிச்சனில் உள்ள சுவர்கள், அலமாரிகள் மற்றும் தரையில் எண்ணெய் கறைகள் தோன்றும். ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்கள் சமையலறையிலேயே இருக்கும் சில எளிய பொருட்களை பயன்படுத்தி, எண்ணெய் கறைகளை சுலபமாகவும் திறமையாகவும் அகற்ற முடியும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். உப்பு: எண்ணெய் சிந்தினால் முதலில் நினைவுக்கு வர வேண்டியது உப்பு. உணவின் சுவையை உயர்த்துவதோடு மட்டுமல்ல, எண்ணெயை உறிஞ்சுவதிலும் உப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிந்தியுள்ள இடத்தில் போதுமான அளவு உப்பை தூவி, ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் அப்படியே விடுங்கள். உப்பு எண்ணெயை உறிஞ்சிக் கொண்ட பிறகு, அதை துணி அல்லது பேப்பர் டவல் கொண்டு எளிதாக அகற்றலாம். பெரிய எண்ணெய் கறைகளுக்கு கொரகொரப்பான (coarse) உப்பு இன்னும் சிறப்பாக வேலை செய்யும். பேக்கிங் சோடா: எண்ணெயைச் சுத்தம்…

Read More

கல்வான் மோதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு சீனா இரகசியமாக அணு ஆயுதச் சோதனை நடத்தியதாக அமெரிக்கா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களை அதிகரித்துள்ளன. இதற்கு சீனா தற்போது பதிலளித்துள்ளது. சீனா 2020 ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று இரகசியமாக அணு ஆயுதச் சோதனை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குச் சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஆயுதக் குறைப்பு மாநாட்டில், அணு ஆயுதச் சோதனை தொடர்பாக சீனா மீது அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான துணைச் செயலாளர் தாமஸ் டினானோ கூறுகையில், “சீனா நடத்திய அணு ஆயுதச் சோதனைகள் குறித்து அமெரிக்கா அறிந்திருக்கிறது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கான உறுதிமொழிகளை இந்தச் சோதனைகள்…

Read More

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க   எடுத்திருந்த தனது முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன், இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ICC) பேச பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது, டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐசிசி அமைப்பைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் லாகூருக்கு சென்றுள்ளனர். இது, அந்த முக்கியமான போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற 99% வாய்ப்பு: செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் (IANS) வெளியிட்ட மற்றொரு தகவலின்படி, ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் வாய்ப்பு 99 சதவீதம் இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தனது புறக்கணிப்பு முடிவை மாற்றிக்கொள்ளக்கூடும்…

Read More

நல்ல குடல் ஆரோக்கியம் என்பது செரிமானம் மட்டுமல்ல; அது நோய் எதிர்ப்பு சக்தி, மெட்டபாலிசம் (metabolism), மனநிலை மற்றும் தோல் ஆரோக்கியத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஆகவே, உங்கள் குடலை சுத்தமாக வைத்துக் கொண்டு நாளை சிறப்பாக தொடங்க உதவும் சில விஷயங்களை இப்போது பார்க்கலாம். நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? எய்ம்ஸில் பயிற்சி பெற்றவரும், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவருமான இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, குடல் ஆரோக்கியத்திற்கான 10 சிறந்த காலைப் பழக்கவழக்கங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் பழக்கங்களை ஒவ்வொரு காலையிலும் பின்பற்றுவது மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் அளித்து, உங்கள் குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவும் என்று அவர் கூறுகிறார். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள்: 7 முதல் 8 மணி நேர உறக்கத்திற்குப் பிறகு, உடல் லேசான நீரிழப்புக்கு உள்ளாகிறது. வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான…

Read More

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டிஎன்பிஎஸ்சி தேர்வை சரியான முறையில் நடத்த முடியாமல் நிர்வாக திறனற்ற அரசாக திமுக அரசு உள்ளது. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி இன்னும் நியமிக்கவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு பின் கூட அதை நியமிக்க முடியாத அரசாக தான் திமுக அரசு உள்ளது. மாநில அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை முதலமைச்சர் குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசு திட்டங்களை தான் கொடுக்க முடியும். மத்திய அரசை சரியாக மாநில அரசு அணுகாததால் பல திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மத்தியில் கூட்டணியில் இருந்த போதே உரிய திட்டங்களும், நிதியும் திமுக அரசால் பெற முடியவில்லை. மெட்ரோ திட்டத்திற்கு சரியான திட்ட அறிக்கையை அனுப்பாததால் தான் அந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது திமுக அரசின் அலட்சியத்தை தான் காட்டுகிறது. இந்தியா கூட்டணி பெயரை…

Read More

காங்கிரஸ் 41 சீட்களை கேட்பதாக தகவல் வெளியான நிலையில், 1 எம்.பி.,க்கு 3 எம்.எல்.ஏ. சீட்கள் வீதம் 27 சீட்கள் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை கூட்டணி என்ற சூழலே உருவாகி உள்ளது. எல்லா கட்சிகளும் ஓரளவிற்கு கூட்டணியை தேர்வு செய்து செட்டில் ஆகிவிட்டனர். தேமுதிக மட்டுமே தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது. இதற்கிடையில் இந்த தேர்தலில் 40 இடங்களுக்கு அதிகமான தொகுதிகளை கோரிய காங்கிரஸ் ‘ஆட்சியில் பங்கு’ என்ற பேச்சையும் முன் வைத்தது. ஆனால் இந்த கூற்றை தீர்க்கமாக மறுத்து வந்தது திமுக. அப்போதுதான் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகியே விடுமோ என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் இந்த அமளிகளுக்கு இடையில் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியும் திமுக எம்.பி கனிமொழியும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தையில் கூட்டணி சலசலப்புகளுக்கு…

Read More

சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் “விசில்” எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் “விசில்” எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ரசிகர்கள் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஐசிசி, பிசிசிஐ தரப்பில் விசிலுக்கு தடை குறித்த அதிகாரப்பூர்வ விதிமுறை எதுவும் இல்லை. எனினும், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், காவல் துறை மற்றும் மைதான நிர்வாகம்…

Read More

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026-க்கான தூதராக (Ambassador) ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். இந்தியா – அமெரிக்கா (USA) அணிகளுக்கிடையேயான போட்டிக்கு முன்னதாக, அவர் கோப்பையுடன் மைதானத்திற்கு வந்தார். ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்தியா கடந்த உலகக் கோப்பையை வென்றது. அந்த வெற்றியில் தற்போதைய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவும் முக்கிய பங்கு வகித்தார். சனிக்கிழமை நடைபெற்ற போட்டிக்கு முன், சூர்யா ரோஹித்திடம் ஒரு கேள்வி கேட்க அணுகியபோது, ரோஹித் அவரை நகைச்சுவையாக கண்டித்தார். 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணி, அமெரிக்காவை (USA) 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுடன் இணைந்து ரோஹித் சர்மா உலகக் கோப்பை டிரோபியை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அவர் இந்திய அணியினரையும் சந்தித்து உரையாடினார். டாஸின் போது ரோஹித் சர்மா மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது,…

Read More

இன்று உலகையே உலுக்கி வரும் எப்ஸ்ட்டீன் ஃபைல்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்த குற்ற சம்பவங்கள் அரங்கேறிய அந்த ஒற்றைத்தீவு பற்றி தெரியுமா? பாவத்தீவு என அழைக்கப்படும் அந்த தீவு பற்றிய பல திடுக்கிட்டு தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். முதலில் இந்த ஒட்டுமொத்த சர்ச்சைகளுக்கெல்லாம் மையப்புள்ளியான ஜெஃப்ரி எப்ஸ்ட்டீன் என்பவர் யாரென்று பார்த்தால் தான் தீவை பற்றி பார்ப்பதற்கான காரணம் புரியும். அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்ட்டீன், நியூயார்க் நகரில் உள்ள உலக நிதி சந்தையான வால்ஸ்ட்ரிட்டில் பணியாற்றியவர். தனது தொழில் மற்றும் நிதி திறமையால் நாட்டின் பெரிய நிறுவனங்களின் தலைவர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதன் மூலம் அவரது வருமானம் உச்சத்திற்கு எகிற, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு நிதி உதவிகளை வழங்கி கவனம் ஈர்த்தார். இவையெல்லாம் ஜெஃப்ரி எப்ஸ்ட்டீனின் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் கொடூரமானது. இவரது வணிக ஒப்பந்தங்கள், சக்தி…

Read More

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். அதற்காக மகுடஞ்சாவடி ப்குதியில் இடத்தை தேர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறி சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி தலைமையில் தவெக விஜய் பிரச்சாரக் கூட்டம் நடத்த இருந்த இடமான சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராஜன் திடலை ஆய்வு செய்தனர். இதற்கிடையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு…

Read More