Author: Editor web3

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியான காசர்-இ-காதிஜதுல் குப்ராவில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தற்கொலை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 31 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மசூதி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஷியா மசூதியைச் சுற்றியுள்ள பகுதியை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் எந்த பயங்கரவாத அமைப்பும் அல்லது தனிநபரும் பொறுப்பேற்கவில்லை. HTN World செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மசூதி வாசலில் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டார். இஸ்லாமாபாத் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.…

Read More

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை அறிவிக்காமல் உள்ளனர். தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் என்ன முடிவு செய்ய போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கூட்டணி குறித்து தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கடந்த 3ம் தேதியே அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகள், பிரேமலதாவின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இதனால், கூட்டணி குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஒருபுறம் கூட்டணியை அறிவிக்காததால் தேமுதிக நிர்வாகிகளே பிரேமலதா மீது அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இப்படியிருக்கையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்றுமுதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று விருப்பமனுக்களையும் நிர்வாகிகள் பெற்றுச்செல்கின்றனர். இருப்பினும் கூட்டணி…

Read More

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதியில் இருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சீன எல்லை விவகாரம், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று பிரதமர் மோடி இல்லாமலேயே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கமளித்த சபாநாயகர் ஓம். பிர்லா, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமரை தாக்க சதி செய்யவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், இதனால் நான் தான் பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கூறினேன் என்றும் விளக்கமளித்தார். இருப்பினும், சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் கூறுவது முற்றிலும் பொய்யானது என்றும் ராகுல் காந்தியை பேச…

Read More

திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சில காலமாக ஆட்சியில் பங்கு என்று கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருவதோடு அதிக அளவிலான சீட்டுகளை வருகிற சட்டமன்ற தேர்தலில் வழங்க வேண்டும் என்றும் கூட்டணி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தின் இந்தியா கூட்டணியில் பூசல் பூதகரமாகியுள்ளதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு திமுகவின் முக்கிய உறுப்பினரான கனிமொழியும் காங்கிரஸ் தேசிய தலைவரான ராகுல் காந்தியும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. அதில் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தேசிய தலைமை தெளிவாக கூறியதாகவும் மேலும் 30 தொகுதிகளை இம்முறை காங்கிரசுக்கு வழங்க திமுக உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதுமட்டுமின்றி காங்கிரஸ் தேசிய தலைமை நடத்திய கூட்டத்தில் கூட்டணி குறித்த விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் எனவும் காங்கிரஸ் எம்பிக்களுக்கு வலியுறுத்தியதாக செல்வப் பெருந்தகை பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இதனால்…

Read More

அமைச்சர் காந்தியை அதிகாரிகள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் பிப்.05 ஆம் தேதியான நேற்று காலை நடைபெற்ற மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, சிறந்த கைவினை கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, த.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். ஆனால், கைத்தறி துறை சார்பில் நடந்த அந்த நிகழ்வில் துறை சார்ந்த கைத்தறி & துணி நூல் துறை அமைச்சரான காந்தி பங்கேற்கவில்லை. இது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் கொடுத்திருக்கிறது. இதையடுத்து அமைச்சர் காந்தியிடம் விளக்கம் கேட்கும்படி அதிகாரிகளிடம் உத்தரவிட்டுவிட்டு தலைமைச்செயலகம் சென்ற முதல்வர் அங்கு நகராட்சி நிர்வாகம், இந்து அறநிலையத்துறை, பால்வளத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துக்கொண்டிருந்தார். மறுபுறம் அதிகாரிகள் கொடுத்த தகவலை கேட்டதும் பதறிப்போய் ஓடிவந்த அமைச்சர் காந்தி பல்வேறு துறைகளின் திட்டங்களை துவக்கி வைத்துக்கொண்டிருந்த முதல்வருக்கு…

Read More

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில், “மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. செந்தில் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நான் அடிக்கடி சொல்லி வருகிறேன் – இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை. இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது?…

Read More

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) சமீபத்தில் “மிகவும் மோசமானவர்கள்” (Worst of the Worst – WOW) என்ற தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 25,000 சட்டவிரோத வெளிநாட்டினர், அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குற்றவாளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் குற்றவாளிகளில் கொலை, பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களைச் செய்தவர்களும் அடங்குவர். இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 89 பேரும் அடங்குவர். DHS-இன் படி, இந்த தரவுத்தளம் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளது. இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்த குற்றவாளிகளின் பெயர்கள், புகைப்படங்கள், செய்த குற்றங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளம் (WOW.DHS.GOV) மூலம், எந்தெந்தக் குற்றவாளிகள் நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வந்தார்கள், எந்தக் குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டார்கள், மற்றும் எந்தெந்த சமூகங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பதைச் சாதாரண அமெரிக்கர்கள் தெரிந்துகொள்ளலாம் என்று DHS ஒரு…

Read More

உலகில் ஒரு மரம் கூட இல்லாத சில நாடுகள் உள்ளன. அவை எந்த நாடுகள், அதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். இது ஆச்சரியமாகத் தோன்றலாம்; ஆனால் உலகில் இயற்கையாக மரங்கள் மிகக் குறைவாக அல்லது முற்றிலும் இல்லாத பகுதிகள் சில உள்ளன. கடுமையான காலநிலை காரணங்களே இதற்குக் காரணம். கத்தார், ஓமானின் சில பகுதிகள், கிரீன்லாந்து மற்றும் வரலாற்று ரீதியாக ஐஸ்லாந்து போன்ற நாடுகள், பரந்த பாலைவனமாதல் அல்லது உறைந்த நிரந்தரப் பனி காரணமாக மரங்களின் வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. மரங்களே இல்லாத அந்த நாடுகளைப் பற்றி அறிந்துகொள்வோம். சில நாடுகளில் ஏன் மரங்கள் இல்லை? கத்தார் மற்றும் குவைத் போன்ற பாலைவன நாடுகளில் மிகக் குறைந்த மழைப்பொழிவு மற்றும் மணல் மண் இருப்பதால், மரங்கள் வேரூன்றி உயிர் வாழ்வது கடினமாக உள்ளது. இதற்கு மாறாக, கிரீன்லாந்து போன்ற இடங்கள் இதற்கு நேர்மாறான சிக்கலை எதிர்கொள்கின்றன. கடுமையான குளிர்…

Read More

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் பல நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இந்தநிலையில் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அமெரிக்க தூதரகம், ஈரானில் உள்ள தனது குடிமக்களுக்கு உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், ஈரான் அரசு பல பகுதிகளில் சாலைகளை முடக்கியுள்ளது. அதே நேரத்தில் விமானப் போக்குவரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் உருவாகும் சூழலை மேலும் அதிகரித்துள்ளது. https://x.com/TrumpTruthOnX/status/2019601310715375749? போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில், அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்கள் தரைவழி, வான்வழி அல்லது கடல்வழி என எந்த வழியாக இருந்தாலும், எந்த இடத்திற்குச் சென்றாலும், ஈரானிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள்…

Read More

திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகவுள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் வேல்முருகன் கலந்துகொள்ளாதது பேசுப்பொருளாகியுள்ளது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன், திமுகவுடன் 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். கூட்டணியில் இருந்தபோதும் சாதிவாரி கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு, தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் போன்ற விவகாரங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் வேல்முருகனின் பேச்சுகளை கண்டித்துள்ளனர். பாமகவில் இருந்து விலகி தவாகவை தொடங்கிய வேல்முருகன் தமிழ் தேசியவாதம், வன்னியர் உரிமைகள், ஈழத் தமிழர் ஆதரவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். திமுக கூட்டணியில் இருந்தாலும், தனது கோரிக்கைகளுக்கு அழுத்தம் தருவதன் மூலம் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார். வேல்முருகனை “ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-வாக இருந்தும் திமுக அரசைத் தாக்குவது தவறு” எனக் கூறுகிறது…

Read More