Author: Editor web3

மேகாலயாவில் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள  சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில்  பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தகவல்களின்படி,  பலியானவர்களில் பெரும்பாலோர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். நிலக்கரிச் சுரங்க விபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிஹாரா கிராமத்தைச் சேர்ந்த ஃபாரூக் அகமது, மற்றும் ஷரிஷா குரி கிராமத்தைச் சேர்ந்த தில்டார் ஹுசைன், அன்வரா ஹுசைன் ஆகியோர் ஆவர். இந்தச் சம்பவத்தை காவல்துறை கண்காணிப்பாளர் விகாஸ் குமார் உறுதிப்படுத்தினார். தாங்ஸ்கு பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அங்கு நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். பலத்த தீக்காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக சில்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.  ஆனால் உள்ளே இருந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read More

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதியில் இருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி பேசும்போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சுட்டிக்காட்ட விரும்பினார். இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் வார்த்தைப் போர் நீடித்து வருகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு பதிலுரை அளிப்பார் என்று…

Read More

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை தாக்க சதி செய்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் குற்றச்சாட்டு மிகப்பெரிய பொய் என்று தமிழக எம்.பி. சுதா விளக்கமளித்துள்ளார். மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு “முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை” செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சுதா, “மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் குற்றச்சாட்டு மிகப்பெரிய பொய். ராகுல் கூறும் கருத்துக்களுக்கு ஆளும்கட்சியினர் பதிலளிக்க வேண்டும். ஜனநாயக…

Read More

மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையங்களுக்கு 2026 மே 1 முதல் 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அங்கன்வாடிப் பணிகளின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களான முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஒவ்வோராண்டும் மே மாதம் கோடை விடுமுறை வழங்கியும், அவ்வாறு குழந்தைகள் மையங்களில், கோடை விடுமுறை வழங்கப்படும் மே மாதத்தின் இரண்டாவது வாரம் அங்கன்வாடி உதவியாளர்களும், மூன்றாவது வாரம் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும், நான்காவது வாரம் அருகிலுள்ள குழந்தைகள் குறு மையங்களில் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் மாற்றுப் பணியில் பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளை எவ்விதமான இடையூறுமின்றி நிறைவேற்றும்படியும், அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்கும் பொழுது உணவூட்டும் பணிகளை மாற்று ஏற்பாட்டுடன் மேற்கொள்ளும் பொழுது அரசின் கொள்கை முடிவின்படி ஆண்டு முழுவதும் குழந்தைகள் மையங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கு…

Read More

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கமாட்டோம் என பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெளியான தகவல்களை இந்தியா நிராகரித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, 140 கோடி இந்தியர்களுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு முக்கிய முன்னுரிமை என்பதை அரசு பலமுறை பொது வெளியில் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், சந்தை நிலவரங்களும் மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளும் கருத்தில் கொண்டு இந்தியா தனது எரிசக்தி கொள்முதல்களை பல்வேறு நாடுகளிலிருந்து மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், எங்கள் தேவைகளுக்கு ஏற்ப உலகின் எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் தேசிய நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படும். இதுவரை எடுக்கப்பட்டதும், இனி எடுக்கப்படவுள்ள அனைத்து முடிவுகளும் இதே அடிப்படையிலேயே இருக்கும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.…

Read More

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் பிரதமர் மோடியின் உரை ஒத்திவைக்கப்பட்டதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 4) வழங்க இருந்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று அவை தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்ததை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் மோடி இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்பது குறித்து சபாநாயகர் ஓம். பிர்லா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்துகொண்டதாகவும், அதனால்தான் அவரை மக்களவைக்கு வர வேண்டாம் என்று தான் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். “நேற்று அவையில் என்ன நடந்தது என்பதையிம், எம்.பி.க்கள் அவையில் பிரதமரின் இருக்கையை…

Read More

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் கண்டித்தும் வரும் 11ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதது; பெண்களுக்கு பாதுகாப்பின்மை; கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர்கதையாகிவிட்டது. திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இவை எதையும் கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வருவது கண்டனத்திற்குரிய விஷயமாகும். அந்த வகையில், டாஸ்மாக் நிறுவனத்தில் தமிழ் நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான, பணி நிரந்தரம் செய்வது, போதுமான ஊழியர்கள் நியமனம் செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல்…

Read More

அமெரிக்க நீதித்துறையால் ஜன.30ம் தேதி வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்த சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் இடம் பெற்றிருந்தன. அதில், பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் மூலம் அவருக்கு பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், எப்ஸ்டீன் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார் என்ற  தகவல்கள்  இணையதளங்களில் வைரலாக பரவின. மேலும், பால்வினை நோய்க்காக(STD) சிகிச்சை அளிக்க மருந்துகளை பெற எப்ஸ்டீன் உதவியதாகவும், அந்த மருந்துகளை தனது மனைவி மெலிண்டாவிற்கு தெரியாமல் அவருக்கு வழங்குவதற்கும் பில் கேட்ஸ் முயன்றதாகவும் எப்ஸ்டீன் அந்த மின்னஞ்சலில் எழுதியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் அபத்தமானவை என்றும், முற்றிலும் பொய்யானவை என்றும் மேலும், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு பில் கேட்ஸுடன் இருந்த தொடர்பை அவர் துண்டித்ததால் ஏற்பட்ட…

Read More

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேமுதிக சார்பில் நாளை (பிப். 6) முதல் விருப்பமனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்களை விநியோகித்து நேர்காணல் நடத்தி வருகின்றன. ஏற்கனவே, அதிமுக விருப்பமனு விநியோகத்தை முடித்துவிட்டது. இதேபோல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் விருப்ப மனு விநியோகத்தை 6-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விஜயகாந்த் இல்லாமல் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தேமுதிக, இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்தநிலையில், தேமுதிக சார்பில் நாளை (பிப். 6) முதல் விருப்பமனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற…

Read More

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதியில் இருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி பேசும்போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சுட்டிக்காட்ட விரும்பினார். இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் வார்த்தைப் போர் நீடித்து வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஏழாவது நாளான இன்று. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், மக்களவையில், எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரையைத் தடுத்ததாகக் கூறப்பட்டதாகவும்…

Read More