Author: Editor web3

இந்திய அரசியலிலும் நீதித்துறையிலும் இதுவரை நிகழாத ஒரு அபூர்வமான நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமல்லாமல், ஒரு தேர்ந்த வழக்கறிஞராகத் கருப்பு சால்வை அணிந்து உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார். இன்றைய நீதிமன்ற நிகழ்வுகள் (04-02-2026): * நீதிமன்றத்தில் முதல்வர்: உச்சநீதிமன்றத்தின் 1-வது நீதிமன்ற அறையில், தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் மம்தா பானர்ஜி தனது வாதங்களை முன்வைத்தார். ஒரு சிட்டிங் சி.எம் (Sitting CM) உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடுவது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. * “ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்”: “நீதி கதவுகளுக்குப் பின்னால் அழுது கொண்டிருக்கிறது. நான் ஒரு மாநிலத்தின் முதல்வராக அல்ல, இந்த நாட்டின் குடிமகளாக மக்களின் உரிமைகளுக்காக இங்கே நிற்கிறேன். தயவுசெய்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்” என்று மம்தா உணர்ச்சிகரமாக வாதிட்டார். * தேர்தல் ஆணையத்தின் மீது தாக்குதல்: * வாக்காளர் பட்டியலில்…

Read More

டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வரலாறு படைத்துள்ளார். விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அவரது செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஊடக நிறுவனமான xAI-ஐ கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, மஸ்கின் செல்வம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அவரது நிகர மதிப்பு தற்போது 800 பில்லியன் டாலர்களை (ரூ. 72,37,400 கோடி) தாண்டி, அவரை உலகின் மிகப் பெரிய பணக்காரராக ஆக்கியுள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு அவற்றின் ஒருங்கிணைந்த மதிப்பை 1.25 டிரில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. மஸ்கின் செல்வமும் சுமார் 84 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இணைப்பு நடைபெறுவதற்கு முன், எலான் மஸ்க் SpaceX நிறுவனத்தில் சுமார் 42% பங்குகளை வைத்திருந்தார். கடந்த டிசம்பரில் நடைபெற்ற டெண்டர் ஆஃபருக்குப் பிறகு SpaceX நிறுவனத்தின் மதிப்பு 800 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மஸ்க் வைத்திருந்த பங்குகளின் மதிப்பு சுமார் 336 பில்லியன் டாலராக இருந்தது. அதேபோல், இந்த மாதம் தொடக்கத்தில்…

Read More

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவது குறித்த விமர்சனங்களுக்கு எம்.எஸ். தோனி பதிலடி கொடுத்துள்ளார். அடுத்த ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் மற்றும் கோலியின் பங்கேற்பு குறித்து தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தது, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. 2027 உலகக் கோப்பைக்கு ‘ஹிட்மேன்’ மற்றும் ‘கிங் கோலி’யின் வயதும் ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அவர்களின் பங்கேற்பில் வயது ஒரு பொருட்டல்ல என்றும், மாறாக அவர்களின் உடற்தகுதி மற்றும் செயல்பாடுதான் நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கும் என்றும் தோனி தெளிவாகக் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்வின்போது, ​​தோனியிடம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. https://x.com/itzyash07/status/2018896769191747741? அப்போது பேசிய தோனி,  “ஏன் விளையாடக்கூடாது? ஒருவர் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பையில் ஏன் விளையாட வேண்டும் என்பதே முக்கிய…

Read More

வன்முறையை உள்ளிட்ட காரணங்களால் மணிப்பூரில் அமல்படுத்தப்பட்ட குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறுவதாக மத்திய உள்துறை அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட மைதே​யி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்​டது. இதில் 260 பேர் உயி​ரிழந்​தனர். ஆயிரக்​கணக்​கானோர் இடம் பெயர்ந்​தனர். இதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து மணிப்பூரில் கடந்தாண்டு ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி வரும் பிப்.12ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் சுமார் ஓராண்டுக்குப் பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறுவதாக உள்துறை அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற புது டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மணிப்பூர் பாஜக சட்டமன்றக்குழு தலைவராக…

Read More

தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் முதலமைச்சரே விசில் சின்னத்துக்குதான் வாக்களிப்பார் என்று, கற்பனைக்கு எட்டாத அளவிற்கு விஜய் பேசிவருவதாக செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு குன்றத்தூர் ஒன்றியத்தில் 1654 கல்லூரி மாணவர்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் 300 கல்லூரி மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்க நினைக்கின்ற மோடி அரசை கண்டித்து நாளை தாம்பரம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத்தப் போவதாகவும் இந்த பேரணியில் தெலுங்கானா துணை முதலமைச்சர் விக்ரம் சிங் பட்டி அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறினார். அகமதாபாத்தில்…

Read More

தவெக தலைவர் விஜய் முதலில் பொதுவெளிக்கு வந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று அதிமுக குறித்தான விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக முதல் கட்ட தேர்தல் வாக்குறுதி அடங்கி அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்று கூறிய அவர், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் தமிழகம் தலைத் தொங்கி இருப்பதாக வேதனை தெரிவித்தார். அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்திருப்பதாகவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். அதிமுக மீது குறை சொல்வதற்கு, திறமையற்ற பொம்மை முதலமைச்சர் இடம் எந்த சான்றும் இல்லை என்றும் கழகப் பொதுச்…

Read More

ஜனவரி 26 குடியரசு தினத்திற்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது, ஆனால் தொடர் சுற்றுப்பயணம் இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, நான்காவது கட்ட சுற்றுப்பயணம் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. சென்ற அனைத்து இடமும் மக்களின் மிகப்பெரிய ஆரவாரம் வரவேற்பு மிகப்பெரிய எழுச்சியாக இருந்துள்ளது. நிர்வாகிகளுடைய சந்திப்பு மிக சிறப்பாக நடைபெற்று உள்ளது. இதை சந்தோஷமான விஷயம் என்றால், தமிழக முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து பூத் கமிட்டிகளையும் நிறைவு செய்து பிஎல் 2 படிவத்தை அனைத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியரிடம் பூத் முகவர்கள் அமைப்பு வழங்கி மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். தமிழக முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் இதுபோன்ற பூத் கமிட்டிகளை அமைத்து தயார் நிலையில் வைப்பது கடினம் ஆனால் தமிழக முழுவதும் தேமுதிக…

Read More

நாடு முழுவதும் பிப்ரவரி 7-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக உபர், ஓலா, ராபிடோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர். கட்டண நிர்ணய முறைகள் மற்றும் அரசின் நடவடிக்கை இல்லாமை காரணமாக ஓட்டுநர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா செயலி அடிப்படையிலான ஓட்டுநர்கள் மன்றம் இந்த வேலைநிறுத்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் நிதி சுமை மற்றும் நிலையான வேலை வாய்ப்பு இல்லாமை குறித்து கவனம் ஈர்க்க இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. தகவல்படி, புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டாலும் சவாரி தளங்கள் இன்னும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் கட்டணங்களை நிர்ணயித்து வருகின்றன. இதனால் ஓட்டுநர்களின் வருமானம் குறைந்து கடன் சுமை அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. குறைந்தபட்ச அடிப்படை கட்டணத்தை அரசு அறிவிக்காததால் நிறுவனங்கள் கமிஷன் கட்டணங்களை உயர்த்துகின்றன என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எரிபொருள், வாகன பராமரிப்பு, காப்பீடு போன்ற அனைத்து செலவுகளும் ஓட்டுநர்களே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணத்தை உடனடியாக நிர்ணயிக்க வேண்டும் என்பதுடன், செயலி…

Read More

பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரும்போது, ​​நான் இந்த புத்தகத்தை அவரிடம் கொடுப்பேன் என்று ஜெனரல் நரவனேவின் புத்தகம் தொடர்பாக ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வரும் துணிச்சல் இருக்காது எனக் கருதுகிறேன். ஒருவேளை அவர் வந்தால். ​​நரவனே எழுதிய இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுப்பேன் என்று கூறினார். இது நரவணே எழுதிய புத்தகம் என்றும், அதை அவர் முழுமையாக விரிவாக எழுதியுள்ளார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். அந்தப் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்ட அனுமதி இல்லை என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அது முழுமையாக எழுதப்பட்டுள்ள நூலாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், அந்தப் புத்தகத்தில் முக்கியமான கருத்துகள் இடம்பெற்றுள்ளன என்றும், “உங்களுக்கு பொருத்தமானதாக…

Read More

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்காக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான முக்கிய விசாரணைக்காக புதன்கிழமை (பிப்ரவரி 4) உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணையின் போது, ​​நீதிமன்றத்தின் முன் தனது தரப்பு வாதங்களை நேரில் முன்வைக்க விரும்புவதாக பானர்ஜி தெரிவித்தார். தான் வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும், அங்குள்ள கள நிலவரங்களை நன்கு அறிந்தவர் என்றும் மம்தா பானர்ஜி கூறினார். “நான் வங்காளத்தின் முதலமைச்சர், அங்குள்ள நிலைமையை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் மூன்று நீதிபதிகள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இது எனது தனிப்பட்ட போராட்டம் அல்ல; இது சாமானிய மக்களின் போராட்டம்,” என்று கூறிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்குப் பல கடிதங்கள் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். தலைமை நீதிபதி, மம்தா பானர்ஜியிடம், அவருக்கு கபில் சிபல் போன்ற அனுபவமிக்க…

Read More