Author: Editor web3

மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மரண விவகாரத்தில், ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர் என்று கூறிய நீதிபதி, புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 2025ம் ஆண்டு ஜூன் மாதம் மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் என்ற இளைஞர் மீது கோவிலுக்கு வந்த நிகிதா என்ற பெண் அளித்த நகை திருட்டு புகாரில் கோவில் காவலாளி கைது செய்யப்பட்டார். பின்னர் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக காவலாளி அஜித்குமார் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறையில் உள்ள காவலர்கள் ஜாமின் வழங்கக் கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி…

Read More

முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000-ஆக உயர்த்தப்படும், வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.   அதில், முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்: சமூக ஓய்வூதிய திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,200-ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி: மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு வங்கிகளில் பெற்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அந்த தொகையை…

Read More

சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.அந்தவகையில் அன்புமணி தரப்பு, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டனர். தவெக தனித்து போட்டியிடும் என்றும் விஜய் கூறி வருகிறது. ஆனால் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்ல. இந்நிலையில், நடந்து முடிந்த கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பதாகக் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இதுவரை கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிகவுக்கு, ஒரு மாநிலங்களவை ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மாநிலங்களவை சீட் ஒதுக்காததாலும், கடந்த தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்காததாலும், திமுக உடன் கூட்டணிக்கு செல்ல தேமுதிக நிர்வாகிகள் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. அடுத்தகட்டமாக திருவனந்தபுரத்தில் திமுகவிடம் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, அப்போது, 8 சட்டமன்ற…

Read More

ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு முன்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டர்களுக்கான ரொக்கம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் அரசு தற்போது செயல்பட்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.500-க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி (AAP) பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதைக் குறிப்பிட்டு AAP, அரசை குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள…

Read More

வளர்ந்து வரும் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் காலநிலை நெருக்கடிக்கு மத்தியில், ‘பொறுப்புள்ள நாடுகள் 2026’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 19ம் தேதி உலக அறிவுசார் அறக்கட்டளை (WIF) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் உலகின் மிகவும் பொறுப்புள்ள நாடாகப் பெயரிடப்பட்டுள்ளது. நிர்வாகம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் தனது சிறப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும், டென்மார்க் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இந்த நாடுகள் அவற்றின் நேர்மையான நிர்வாகம், சமூகப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வுக்காகப் பாராட்டப்பட்டன. இந்த அறிக்கை வழக்கமான உலகளாவிய தரவரிசைகளிலிருந்து வேறுபடுகிறது, ஏனெனில் இது பொருளாதார வலிமை அல்லது இராணுவ சக்தியை மட்டும் பார்க்காமல், ஒரு நாடு அதன் மக்களுக்கும் உலகிற்கும் எவ்வளவு பொறுப்புடன் செயல்படுகிறது என்பதை மதிப்பிடுகிறது. அதனடிப்படையில், பெல்ஜியம், ஜார்ஜியா, செக் குடியரசு, ஆஸ்திரியா மற்றும் குரோஷியா ஆகியவை முதல்…

Read More

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளை கண்டு மத்திய அரசு ஏன் அஞ்சுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை நேற்று முன் தினம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை தொடர்பாக விவாதம் நடைபெற்ற போது எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா- சீனா எல்லை பிரச்சனை குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார். இதற்கு பாஜக எம்.பி. க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சபாநாயகர் ஓம் பிர்லாவும் வெளியிடப்படாத புத்தகங்களை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது எனத் தெரிவித்தார். ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து இந்திய சீன எல்லை பிரச்சனை குறித்து பேசவே நேற்று முன் தினம் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் முடங்கின. தொடர்ந்து இரண்டாவது நாளான…

Read More

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி 2026-27 நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தமிழ் நாட்டிற்குகான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த பட்ஜெட்டில் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 7 அதிவேக ரயில் வழித்தடங்களில், தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட நாடு முழுவது உள்ள 15 தொல்லியல் இடங்களில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. இதன் படி ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்துடன் சேர்த்து, ஒரு “கலாச்சார மையம்” (Experiential Cultural Center) அமைக்கப்பட உள்ளது. பூமியிலிருந்து அரிய வகை கனிமங்களை தோண்டி எடுப்பதற்கான பிரத்தியேக அரிய கனிம வழித்தடம் (Rare Earth…

Read More

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்களின் இறக்கைகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டநிலையில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு விமானங்களின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டன. புறப்படுவதற்காகத் தயாராகிக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் AI 2732 (மும்பை முதல் கோயம்புத்தூர் வரை) பின்னோக்கி நகர்ந்தபோதும், தரையிறங்கிய பிறகு ஓடுபாதையை நோக்கி மெதுவாக வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் 6E 791 (ஹைதராபாத் முதல் மும்பை வரை) ஆகிய இரண்டு விமானங்களின் இறக்கைகளும் உரசிக்கொண்டன. இந்த மோதலைத் தொடர்ந்து, இரண்டு விமானங்களும் ஆய்வுக்காகத் தரையிறக்கப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து அறிந்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை தொடங்கினர். மும்பையிலிருந்து கோயம்புத்தூர்…

Read More

தங்கம் விலை சவரனுக்கு ரூ.22,800 வரை குறைந்த நிலையில், மீண்டும் நேற்று முதல் உயரத் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் இன்றும் (பிப்.4) சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கும் சவரன் ரூ.5040 அதிகரித்து ரூ.1,19,200க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் 11 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.28,160 வரை அதிகரித்தது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சில் உறைய வைத்தது. இருப்பினும்,  கடந்த 30ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. 30ம் தேதி அன்று தங்கம் விலை…

Read More

மகளிர் ப்ரீமியர் தொடரில், தொடர்ந்து நான்காவது முறையாக, டெல்லி கேபிடல்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது, இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதல். மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL 2026) நான்காவது பதிப்பின் எலிமினேட்டர் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. WPL இறுதிப் போட்டியில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கு நேரடி இடத்தைப் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொள்ளும். இரண்டாவது பதிப்பின் வெற்றியாளர்களான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 2024-ல் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் பட்டத்தை வென்றது. இந்தத் தொடரில், ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடித் தகுதியைப் பெற்றது. அந்த அணி எட்டு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்றது. இந்த சீசனில்…

Read More